For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அப்ரிடி ஒரு மெண்டல்..! பைத்தியகார டாக்டருக்கிட்ட அவரை கூட்டிட்டு போறேன்… கம்பீர் பதிலடி!

மும்பை:அப்ரிடி மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார், இந்தியா வந்து மனநல மருத்துவர்களிடம் அவர் சிகிச்சை பெற்று செல்லட்டும் என்று கவுதம் கம்பீர் காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், அதிரடி பேட்ஸ் மேனுமான ஷாகித் அப்ரிடி, கேம் சேஞ்சர் என்ற பெயரில் தனது சுய சரிதை புத்தகம் எழுதியிருக்கிறார். பத்திரிகையாளர் வஜஹத் கானுடன் இணைந்து, அந்த நூலை எழுதியுள்ளார். அதில் பாகிஸ்தான் அணிக்காக 20 ஆண்டுகள் விளையாடிய அனுபவம், கிரிக்கெட் வாரிய பிரச்னைகள், முன்னாள் கேப்டன்கள், அணிக்குள் இருந்த சர்ச்சைகள் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து எழுதியுள்ளார்

அந்த புத்தகத்தில் பல விஷயங்களை அவர் குறிப்பிட்டிருந்தாலும் அவரின் வயது பற்றிய உண்மையும், கவுதம் கம்பீர் பற்றியும் அவர் குறிப்பிட்டிருந்த விஷயங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. அந்த சுயசரிதையில், கம்பீருக்கு மனரீதியாக ஏதோ பிரச்னை இருக்கிறது. எந்தவிதமான அவருக்கு எந்தவிதமான சாதனையும் கிடையாது.

நானும் டிவில்லியர்சும் ராமர், லட்சுமணன்.. பிரிக்கவே முடியாது.. சரி ஏன் தோத்தீங்கன்னு சொல்லுங்க கோலி நானும் டிவில்லியர்சும் ராமர், லட்சுமணன்.. பிரிக்கவே முடியாது.. சரி ஏன் தோத்தீங்கன்னு சொல்லுங்க கோலி

பெரிய ஆள் என்று நினைப்பு

பெரிய ஆள் என்று நினைப்பு

அவர் மனதில் டான் பிராட்மேன், ஜேம்ஸ்பாண்ட் போல திமிராக நடந்து கொள்வார் என்று அப்ரிடி கூறியுள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டிருந்தாவது: கம்பீர் நல்ல பெர்சனாலிட்டி இல்லை. கிரிக்கெட்டில் பெரிய ரெக்கார்டும் வைத்திருக்கவில்லை; ஆனால் அணுகுமுறை மட்டும் ஆக்ரோஷமாக இருக்கும். தன்னை பெரிய ஆளாக நினைத்துக்கொண்டு அப்படித்தான் நடந்துகொள்வார்.

கலந்த கலவை

கலந்த கலவை

2007ம் ஆண்டு ஆசிய கோப்பை போட்டியில் வேண்டுமென்றே என் மீது மோதினார். அப்போது இருவருமே மாறி, மாறி திட்டிக்கொண்டோம். கம்பீருக்கு பிராட் மேனும் ஜேம்ஸ் பாண்டும் கலந்த கலவை என்ற நினைப்பு உள்ளது. எனக்கு நேர்மறையான நபர்களை பிடிக்கும்.

கம்பீர் ஒரு சிடுமூஞ்சி

கம்பீர் ஒரு சிடுமூஞ்சி

ஆக்ரோஷமாகவோ போட்டி மனப்பான்மையுடனோ இருப்பதில் எப்போதுமே தவறில்லை. ஆனால் நேர்மறையான நபராக இருக்க வேண்டும். காம்பீர் அப்படிப் பட்டவர் அல்ல. காம்பீர் ஒரு சிடுமூஞ்சி என்று விளாசி தள்ளியிருந்தார். வயது சர்ச்சையுடன், இந்த வசைபாடிய சர்ச்சையும் பெரும் பிரச்னையாக உருவெடுத்து விட்டது.

கம்பீர் பதிலடி

இதற்கு ட்விட்டரில் கம்பீர் அதிரடியாக பதிலளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:அப்டிரி, நீங்கள் ஒரு கோமாளி. நாங்கள் இன்னும் பாகிஸ்தானியர்களுக்கு மருத்துவ சுற்றுலா விசாக்களை வழங்குகிறோம். நான் உங்களை மனநல மருத்துவரிடம் அழைத்துச்செல்கிறேன் என்று பதிலடி கொடுத்துள்ளார்.

Story first published: Sunday, May 5, 2019, 11:51 [IST]
Other articles published on May 5, 2019
English summary
Gautam Gambhir invites Shahid Afridi for psycho analysis.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X