அந்த 2 வீரர்கள் தான் மிகவும் முக்கியம்.. இந்தியா - பாகிஸ்தான் போட்டி.. கம்பீர் முக்கிய அட்வைஸ்!

மும்பை: டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணியில் 2 வீரர்கள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என கம்பீர் தெரிவித்துள்ளார்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் வருகிற அக்டோபர் 17-ந் தேதி முதல் நவம்பர் 14-ந் தேதி வரை நடக்கிறது.

ராகுல் டிராவிட்டின் அதீத நம்பிக்கை.. இலங்கைக்கு எதிரான ஸ்கெட்ச் ரெடி.. பக்கா ப்ளேயிங் 11 இதோ- விவரம் ராகுல் டிராவிட்டின் அதீத நம்பிக்கை.. இலங்கைக்கு எதிரான ஸ்கெட்ச் ரெடி.. பக்கா ப்ளேயிங் 11 இதோ- விவரம்

16 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் எந்தெந்த அணிகள் எந்தெந்த பிரிவில் இடம் பெறும் என்பதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று அறிவித்தது.

இந்தியா - பாகிஸ்தான் போட்டி

இந்தியா - பாகிஸ்தான் போட்டி

இதில் குரூப்1-ல் நடப்பு சாம்பியன் வெஸ்ட்இண்டீஸ், இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளும், குரூப்2-ல் முன்னாள் சாம்பியன்களான இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒரே பிரிவில் இடம் பிடித்துள்ள இந்தியா, பாகிஸ்தான் அணிகள் 2019-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கு பிறகு முதல்முறையாக சந்திக்க இருக்கின்றன. இரு அணிகளும் லீக் சுற்றிலேயே பலப்பரீட்சை நடத்த உள்ளன.

கம்பீர் அட்வைஸ்

கம்பீர் அட்வைஸ்

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியை காண தற்போது இருந்தே ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். இந்நிலையில் இந்த போட்டியை எதிர்கொள்வது குறித்து இந்திய முன்னாள் வீரர் கம்பீர் அறிவுரை கூறியுள்ளார். இந்த போட்டியில் சீனியர் வீரர்கள் மட்டுமே முழு பொறுப்பை ஏற்றுக்கொண்டு விளையாட வேண்டும். இளம் வீரர்களை எந்தவித அழுத்தம் இன்றி விளையாடுவதை உறுதி செய்யவேண்டும். இந்த போட்டியை வெல்ல வேண்டும் என்ற உணர்வு அனைவருகும் இருக்கும். ஆனால் ஆட்டத்தின் டெக்னிக்கே முக்கியமானதாக உள்ளது.

அனுபவ வீரர்கள் தேவை

அனுபவ வீரர்கள் தேவை

அணியில் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் தான் இருப்பதிலேயே அனுபவ வீரர்கள். எனவே அவர்கள் 2 பேர் தான் அனைத்து பொறுப்புகளையும் தோளில் சுமக்க வேண்டும். நான் முதல் முறையாக பாகிஸ்தானை எதிர்கொண்ட போது மிகவும் பதற்றமாக இருந்தேன். ஆனால் அனுபவ வீரர்கள் மிகவும் நிதானமாக பொறுமையாக விளையாடினார்கள் எனத்தெரிவித்துள்ளார்.

England beat Pakistan and level the series | ENG vs PAK 2nd T20 | OneIndia Tamil
எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

இந்த இரு பிரிவுகளில் இருந்தும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். இந்த முறை பாகிஸ்தான் - மற்றும் இந்தியா ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளதால் எந்த அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Former Cricketer Gautam Gambhir names 2 players who will have 'huge responsibility' to face Pakistan in T20 World Cup
Story first published: Saturday, July 17, 2021, 16:26 [IST]
Other articles published on Jul 17, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X