For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அதில் எல்லாம் தோனி தலையிட முடியாது.. சிம்பிள் விஷயத்திற்காக தான் சேர்க்கப்பட்டார்..கம்பீர் விளக்கம்!

மும்பை: இந்திய அணியின் ஆலோசகராக எம்.எஸ்.தோனி நியமிக்கப்பட்டது குறித்து முன்னாள் வீரர் கம்பீர் பேசியுள்ளார்.

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடருக்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் நடைபெறுவதாக இருந்த இந்த தொடர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனுக்கு மாற்றப்பட்டது.

16 ரன்களுக்குள் 3 விக்கெட்கள்.. ஏமாற்றம் கொடுத்த முக்கிய வீரர்.. நம்பிக்கையை இழந்த ரசிகர்கள்!16 ரன்களுக்குள் 3 விக்கெட்கள்.. ஏமாற்றம் கொடுத்த முக்கிய வீரர்.. நம்பிக்கையை இழந்த ரசிகர்கள்!

இதற்கான அட்டவணைகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. அதன்படி வரும் அக்டோபர் 17ம் தேதி டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்கி நவம்பர் 14 ம் தேதி முடிவடைகிறது.

உலகக்கோப்பை அணி

உலகக்கோப்பை அணி

இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. விராட் கோலி தலைமையிலான அந்த அணியில் சீனியர் வீரர்கள், இளம் வீரர்கள் என பாதிக்கு பாதியாக பிரிக்கப்பட்டு ஒரு கலவையான அணியாக உருவாக்கப்பட்டுள்ளது.

 தோனி சேர்ப்பு

தோனி சேர்ப்பு

இதில் ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்காத சுவாரஸ்ய விஷயம் என்னவென்றால் இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி நியமிக்கப்பட்டிருப்பது தான். கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவிசாஸ்திரி அணியில் உள்ள போது, வீரர்களுக்கு தோனி அறிவுரைகளை வழங்கவுள்ளார். இதனால் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

கம்பீரின் கருத்து

கம்பீரின் கருத்து

இந்நிலையில் தோனியை ஆலோசகராக நியமித்தது குறித்து முன்னாள் வீரர் கம்பீர் பேசியுள்ளார். அதில் அவர், இந்திய அணி டி20 கிரிக்கெட்டில் வலுவாக உள்ளது. கோலி, ரவி சாஸ்திரி இருக்கும் போதிலும், தோனியை கொண்டு வந்திருப்பது மிகப்பெரும் விஷயமாக பார்க்கிறேன். தோனியின் திறமையை கருத்தில் கொண்டு அவரை ஆலோசகராக நியமித்திருக்க மாட்டார்கள். ஏன் என்றால் அனைத்து வீரர்களுக்கும் ஏற்கனவே அற்புதமான திறமைகள் உள்ளன.

கடும் அழுத்தங்கள்

கடும் அழுத்தங்கள்

நெருக்கடியான சூழல்களில் பிரஷரை சமாளிப்பதற்காகவே தோனி கொண்டு வரப்பட்டிருப்பார். ஐசிசி போன்ற மிக முக்கியமான தொடர்களில் அழுத்தங்கள் காரணமாக தான் இந்தியா பல முறை தோல்வியை சந்தித்து வருகிறது. எனவே அந்த அழுத்தங்களை சமாளிப்பது எப்படி என்பது குறித்து அறிவுரை கூறவே தோனி நியமிக்கப்பட்டிருக்கலாம்.

தோனியின் பணி

தோனியின் பணி

சர்வதேச கிரிக்கெட்டில் கடும் அழுத்தங்களுக்கு இடையேயும் வெற்றி தேடிக்கொடுத்தவர் தோனி. அதே வேளையில் உலகக்கோப்பை இந்திய அணியில் இளம் வீரர்கள் அதிகப்படியாக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சூழ்நிலையை எப்படி கையாள்வது, அழுத்தங்களை மீறி எப்படி நன்கு செயல்படுவது போன்றவற்றை தோனி கற்றுக்கொடுப்பார் என நம்புகிறேன்.

தோனி தலையிட முடியாது

தோனி தலையிட முடியாது

வீரர்களின் திறமை விஷயங்களில் தோனி எந்தவித தலையீடுகளையும் செய்ய முடியாது. ஏனென்றால் ரவிசாஸ்திரி, விக்ரம் ரத்தோர் போன்ற பயிற்சியாளர்கள் அங்கு உள்ளனர். எனவே வீரர்களுக்கு தனது அனுபவத்தை பகிர்ந்து அவர்களை நிதானப்படுத்துவதற்காகவே தோனி அழைக்கப்பட்டிருக்கலாம் என நினைக்கிறேன் என கம்பீர் தெரிவித்துள்ளார். எதுஎப்படியோ, தோனி மீண்டும் இந்திய அணியில் இணைந்திருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Thursday, September 9, 2021, 21:48 [IST]
Other articles published on Sep 9, 2021
English summary
Gautam Gambhir on MS Dhoni Appointed as mentor for team india for t20 worldcup
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X