For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலகக்கோப்பை நாயகன் கம்பீரின் மறக்க முடியாத 5 போட்டிகள்.. #ThankYouGambhir

நியூடெல்லி : இந்திய அணியின் துவக்க வீரராக இருந்த கௌதம் கம்பீர் நீண்ட காலமாக அணியில் இடம் இல்லாத நிலையில், தற்போது அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தன் ஓய்வை அறிவித்துள்ளார்.

கம்பீர் இந்திய கிரிக்கெட் அணியின் பல வெற்றிகளுக்கு காரணமாக இருந்துள்ளார். அதில் முக்கியமான சில போட்டிகளை இங்கே காணலாம்.

2009இல் இலங்கைக்கு எதிராக 150 ரன்கள்

2009இல் இலங்கைக்கு எதிராக 150 ரன்கள்

2009இல் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக 150 ரன்கள் அடித்தார் கம்பீர். முதலில் ஆடிய இலங்கை 315 ரன்கள் குவித்தது. முதல் நான்கு ஓவர்களில் சேவாக், சச்சின் வெளியேற, கம்பீர், கோலி இணைந்து அணியை மீட்டனர். அந்த போட்டியில் கோலி தன் முதல் ஒருநாள் போட்டி சதத்தை அடித்தார். மறுபுறம் நிலைத்து ஆடிய கம்பீர் 150 ரன்கள் அடித்தார். இந்தியா இந்த போட்டியில் வெற்றி பெற்றது.

206 ரன்கள், ஆஸ்திரேலியா, 2008

206 ரன்கள், ஆஸ்திரேலியா, 2008

டெல்லியில் நடைபெற்ற போட்டியில் கம்பீர் தன் முதல் இரட்டை சதத்தை அடித்தார். இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியை சிதற விட்டார். இந்தியா 613 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலியாவும் நீண்ட இன்னிங்க்ஸ் ஆட போட்டி டிராவில் முடிந்தது.

75 ரன்கள், பாகிஸ்தான், டி20 இறுதிப் போட்டி, 2007

75 ரன்கள், பாகிஸ்தான், டி20 இறுதிப் போட்டி, 2007

2007 டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 75 ரன்கள் அடித்தார் கம்பீர். இந்தியாவின் டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார் கம்பீர்.

137 ரன்கள், நியூசிலாந்து அணி, 2009

137 ரன்கள், நியூசிலாந்து அணி, 2009

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2009 முதல் டெஸ்ட் போட்டியில் கம்பீர் ஆடிய பொறுப்பான ஆட்டம் மறக்க முடியாதது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 619 ரன்கள் எடுத்தது. இந்தியா தன் முதல் இன்னிங்க்ஸில் 305 ரன்கள் மட்டுமே எடுத்தது ஃபாலோ-ஆன் பெற்றது. இரண்டாம் இன்னிங்க்ஸில் நங்கூரம் போட்டு நின்ற கம்பீர் சுமார் இரண்டு நாட்கள் (களத்தில் 643 நிமிடங்கள்) ஆடினார். 436 பந்துகள் சந்தித்த அவர் 137 ரன்கள் குவித்தார். இந்த போட்டி டிரா ஆக முக்கிய காரணமாக அமைந்தார்.

2011 ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டி

2011 ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டி

2011 உலகக்கோப்பை பெற்றுத் தந்தவர் யுவராஜ் சிங் என கூறினாலும், இறுதிப் போட்டியில் நிலைத்து நின்று இந்திய அணியின் வெற்றிக்கு பாதை அமைத்துக் கொடுத்த கம்பீருக்கும் வெற்றியில் பெரிய பங்கு உண்டு. இலங்கை அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்தியா துவக்க வீரர்கள் சேவாக், சச்சினை சில ஓவர்களிலேயே இழந்து தவித்த போது கம்பீர் 42வது ஓவர் வரை நின்று ஆடி 97 ரன்கள் குவித்தார். தோனி அடுத்து 91 ரன்கள் அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார்.

Story first published: Wednesday, December 5, 2018, 18:48 [IST]
Other articles published on Dec 5, 2018
English summary
Gautam Gambhir’s five of the finest knocks in his two decade long cricket career.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X