For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

7 ஆண்டுகளாக தீராத பகை.. தோனியின் கேப்டன்சியை படுமோசமாக திட்டி.. அதிர வைத்த முன்னாள் வீரர்!

Recommended Video

Gambhir slams Dhoni on CB series captaincy | தோனியின் கேப்டன்சியை திட்டிய கம்பீர்

டெல்லி : முன்னாள் வீரர் கௌதம் கம்பீர், தோனி குறித்து விமர்சிப்பது புதிதல்ல என்றாலும், தற்போது ஏழு ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் ஒன்றை கூறி கடுமையான வார்த்தை பயன்படுத்தி திட்டி இருக்கிறார்.

தோனியின் கேப்டன்சி முடிவு ஒன்றை குறிப்பிட்டு கடுமையாக விமர்சித்துள்ளார்.

அந்த முடிவு தான் கம்பீர் - தோனி இடையே பெரிய விரிசல் உருவாகவும் காரணமாக இருந்தது.

2012 சிபி தொடர்

2012 சிபி தொடர்

2012 சிபி தொடர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. அந்த தொடரில் இருந்து தான் தோனி மற்றும் கம்பீர், சேவாக் இடையே லேசான மோதல் போக்கு துவங்கியது.

2015 உலகக்கோப்பைக்கு திட்டம்

2015 உலகக்கோப்பைக்கு திட்டம்

2011 உலகக்கோப்பை வென்ற இந்திய அணி அடுத்து 2015 உலகக்கோப்பை தொடருக்கு திட்டமிட்டது. ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற இருக்கும் அந்த தொடரில் இளம் வீரர்களை தயார் செய்ய திட்டமிட்ட அப்போதைய கேப்டன் தோனி, ஆஸ்திரேலியவில் நடந்த முத்தரப்பு தொடரில் அதிக இளம் வீரர்களை பயன்படுத்த எண்ணினார்.

இடம் அளிக்க முடியாது

இடம் அளிக்க முடியாது

அதனால், அணியில் இருந்த மூன்று டாப் ஆர்டர் வீரர்களான சச்சின், சேவாக் மற்றும் கம்பீரை அழைத்து தன்னால் அனைத்து போட்டிகளிலும் மூவருக்கும் ஒரே நேரத்தில் அணியில் இடம் அளிக்க முடியாது என கூறினார்.

சுழற்சி முறை

சுழற்சி முறை

அதனால், ஒவ்வொரு போட்டியிலும் இவர்கள் மூவரில் இருவர் மட்டுமே சுழற்சி முறையில் பங்கேற்றனர். கம்பீர் தான் இதில் கடுமையாக பாதிக்கப்பட்டார். அவர் அப்போது சிறப்பாகவே ஆடினார் என்றாலும் அணியில் தொடர்ந்து இடம் அளிக்கப்படவில்லை.

தோல்விகள்

தோல்விகள்

அந்த தொடரில் இந்தியா சரியாக ஆடவில்லை. அதிக தோல்விகளை சந்தித்து தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாத நிலையில் இருந்தது. சில போட்டிகளில் வெற்றி பெற்றால் தான் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும் என்ற நிலை ஏற்பட்டது.

கட்டாய வெற்றி

கட்டாய வெற்றி

அது போன்ற கட்டாய வெற்றி தேவைப்படும் போட்டிகளில் சச்சின், சேவாக், கம்பீர் மூவரும் அணியில் இடம் பெற்றனர். அந்த தொடரில் தனக்கு கிடைத்த போட்டிகளில் மட்டும் ஆடி 308 ரன்கள் குவித்த கம்பீர், கோலிக்கு அடுத்து அதிக ரன் குவித்த வீரராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முற்றிலும் குப்பை

முற்றிலும் குப்பை

தோனியின் இந்த கேப்டன்சி முடிவுகளை தான் கடுமையாக விமர்சித்து பேசி இருக்கிறார் கம்பீர். அவர் கூறுகையில், "ஒருவர் கேப்டனின் முடிவுகளை பின்பற்ற வேண்டும். ஆனால், அது முற்றிலும் குப்பை" என கடும் வார்த்தை பிரயோகம் செய்துள்ளார்.

சரமாரியாக விமர்சித்தார்

சரமாரியாக விமர்சித்தார்

மேலும், "நீங்கள் ஒரு சுழற்சி முறையை துவக்கி வைத்தீர்கள். ஆனால், கட்டாய வெற்றி தேவைப்படும் போட்டிகளில் மூவரையும் ஆட வைத்தீர்கள். நீங்கள் ஒரு முடிவு எடுத்தால், உங்கள் முடிவுகளை ஆதரியுங்கள். அதை பின்பற்றுங்கள்" என்று கூறி சரமாரியாக விமர்சித்துள்ளார்.

பகை தீரவில்லை

பகை தீரவில்லை

அந்த தொடரில் ஏற்பட்ட விரிசலுக்கு பின், அடுத்த ஆண்டில் இருந்து கம்பீர் இந்திய அணியில் தன் இடத்தை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது முதல் தோனியை கடுமையாக விமர்சித்து வருகிறார் அவர். அப்போது முதல் அந்த பகை இன்னும் தீரவில்லை.

Story first published: Sunday, November 17, 2019, 17:43 [IST]
Other articles published on Nov 17, 2019
English summary
Gautam Gambhir slammed Dhoni’s captaincy using harsh words. He pointed out the rotation policy in CB series, which causes the rift between Dhoni and Gambhir.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X