For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2007 உலகக்கோப்பை பைனல் ஞாபகம் இருக்கா? பாக். வீரரை சரமாரியாக விளாசிய கம்பீர்.. வெடித்த சர்ச்சை!

டெல்லி : பாகிஸ்தான் வீரர் ஷாஹித் அப்ரிடி - இந்திய வீரர் கௌதம் கம்பீர் இடையே ஆன மோதல் ஆண்டுக்கணக்கில் நடந்து வருகிறது.

Recommended Video

Gautam Gambhir slams Afridi again for his comments in his auto biography

கடந்த சில மாதங்களாக இருவரும் அமைதியாக இருந்த நிலையில், தற்போது கம்பீர் மீண்டும் அப்ரிடியை விளாசி இருக்கிறார். அதிலும் இந்த முறை "பாயின்ட், பாயின்ட்டாக" சொல்லி, அப்ரிடியை கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.

கிரிக்கெட் ஆடிய காலத்தில் இந்தியா - பாகிஸ்தான் போட்டிகளில் பல முறை ஷாஹித் அப்ரிடி - கௌதம் கம்பீர் முட்டி மோதிக் கொண்டுள்ளனர். ஆனால், அந்த சண்டை அவர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற பின்னும் தொடரும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

கூடவே இருந்ததால்.. கோலியை எப்படி அவுட் ஆக்குவது என தெரியும்.. அதிர வைத்த இந்திய பவுலர்!கூடவே இருந்ததால்.. கோலியை எப்படி அவுட் ஆக்குவது என தெரியும்.. அதிர வைத்த இந்திய பவுலர்!

வாழ்க்கை வரலாறு புத்தகம்

வாழ்க்கை வரலாறு புத்தகம்

கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட் ஆடாத போதும் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி பேசினர். இந்த மோதல் வெடிக்க முக்கிய காரணம், அப்ரிடியின் வாழ்க்கை வரலாறு புத்தகம் தான். அதில் கம்பீருக்கு என இடம் ஒதுக்கி அவரை மோசமாக விமர்சனம் செய்து இருந்தார் அப்ரிடி.

ரெக்கார்டுகள் ஏதும் இல்லை

ரெக்கார்டுகள் ஏதும் இல்லை

அப்ரிடி தன் வாழ்க்கை வரலாறு புத்தகத்தில் கௌதம் கம்பீர் ஒரு கேரக்டரே இல்லை, அவருக்கு பெரிய ரெக்கார்டுகள் ஏதும் இல்லை. ஆனால், தன்னை பெரிதாக நினைத்துக் கொள்ளும் மனோபாவம் மட்டுமே உள்ளது என கடும் விமர்சனங்களை முன்வைத்து இருந்தார்.

நேர்மறை எண்ணமே இல்லை

நேர்மறை எண்ணமே இல்லை

மேலும், அந்த புத்தகத்தில் கம்பீர் டான் பிராட்மேன் - ஜேம்ஸ் பான்ட் இடையே கிராஸ் செய்யப்பட்டவரைப் போல நடந்து கொண்டார், அவருக்கு நேர்மறை எண்ணமே இல்லை எனவும் எழுதி இருந்தார் ஷாஹித் அப்ரிடி. இது கடந்த ஆண்டு இருவர் இடையே பெரும் வார்த்தைப் போர் துவங்க காரணமாக இருந்தது.

மருத்துவ விசா பதிலடி

மருத்துவ விசா பதிலடி

கம்பீர் அப்போது இந்தியாவில் பாகிஸ்தான் மக்களுக்கு மருத்துவ விசா அளிக்கிறோம். நான் தனிப்பட்ட முறையில் அப்ரிடியை மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்ல தயார் என கூறி பதிலடி கொடுத்தார். அதன் பின் இருவரும், ஒருவரை ஒருவர் பைத்தியம் என திட்டிக் கொண்ட சம்பவமும் நடந்தது.

காஷ்மீர் பிரச்சனை

காஷ்மீர் பிரச்சனை

இந்த மோதல் அடுத்து காஷ்மீர் பிரச்சனை குறித்தும் வெடித்தது. காஷ்மீர் மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்ட போது அது குறித்து சர்ச்சை வெடித்தது. அப்போது அப்ரிடி காஷ்மீர் பற்றிய கருத்துக்களை பேசினார். அதற்கு கௌதம் கம்பீர் பாகிஸ்தான் நாட்டை தாக்கிப் பேசி பதிலடி கொடுத்தார்.

மீண்டும் மோதல் செய்தி

மீண்டும் மோதல் செய்தி

இதன் பின் சில மாதங்கள் எந்த மோதலும் இல்லாமல் இருந்தது. தற்போது கொரோனா வைரஸ் காரணமாக கிரிக்கெட் போட்டிகள் நடக்காததால், பழைய கிரிக்கெட் நிகழ்வுகளை நினைவு கூர்ந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. சமீபத்தில் ஒரு ஊடகம் கம்பீர் - அப்ரிடி மோதல் பற்றி நினைவு கூர்ந்து இருந்தது.

கம்பீர் பதிலடி

கம்பீர் பதிலடி

அதைக் கண்ட கௌதம் கம்பீர் மீண்டும் தன் பதிலடியை துவக்கி இருக்கிறார். தன்னை சாதனை செய்யாதவர் என கூறியதற்கும், தன் மனோபாவம் பற்றி பேசியதற்கும் கடும் பதிலடி கொடுத்துள்ளார். அப்ரிடி 2007 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் டக் அவுட் ஆனதை சுட்டிக் காட்டி இருக்கிறார்.

ட்விட்டர் பதிவு

"தன் வயதையே நினைவு வைத்துக் கொள்ளாதவர், எப்படி என் சாதனைகளை நினைவில் வைத்துக் கொள்வார். சரி.. ஷாஹித் அப்ரிடி, நான் உங்களுக்கு ஒன்றை நினைவு படுத்த விரும்புகிறேன். 2007 உலகக்கோப்பை இறுதிப் போட்டி, இந்தியா பாகிஸ்தான் மோதல், கம்பீர் 54 பந்துகளில் 75 ரன்கள், அப்ரிடி முதல் பந்தில் டக் அவுட். முக்கியமான விஷயம், நாங்கள் கோப்பை வென்றோம்" என தன் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார் கம்பீர்.

வயது குறித்த சர்ச்சை

வயது குறித்த சர்ச்சை

கடந்த ஆண்டு வெளியான அப்ரிடி வாழ்க்கை வரலாறு புத்தகம் மூலம் அப்ரிடி வயது குறித்த சர்ச்சையும் வெடித்தது. அப்ரிடி உண்மையில் எந்த வருடத்தில் பிறந்தார் என்பதில் பல குழப்பங்கள் இருந்தது. அதைத் தான் சுட்டிக் காட்டி கிண்டல் செய்துள்ளார் கம்பீர். மேலும், 2007 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் இறுதிப் போட்டியில் மோதின. அதில் இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார் கம்பீர். 75 ரன்கள் எடுத்து இருந்தார். அப்ரிடி டக் அவுட் ஆகி இருந்தார். அதையும் சுட்டிக் காட்டி தான் உலகக்கோப்பை தொடரை வென்று கொடுத்ததை தன் சாதனையாக கூறி உள்ளார்.

மனோபாவம் குறித்து விளக்கம்

மனோபாவம் குறித்து விளக்கம்

அதே ட்விட்டர் பதிவில் கடைசி வரியில், தனக்கு குறிப்பிட்ட மனோபாவம் இருப்பதாகவும், ஆனால் அது பொய் சொல்பவர்கள், துரோகம் செய்பவர்கள் மற்றும் வாய்ப்பை தவறாக பயன்படுத்திக் கொள்பவர்கள் ஆகியோருக்கு எதிரானது என கம்பீர் கூறி உள்ளார்.

Story first published: Sunday, April 19, 2020, 8:36 [IST]
Other articles published on Apr 19, 2020
English summary
Gautam Gambhir slams Afridi again for his comments in his auto biography which relased last year.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X