For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவங்க கூட கோலியை ஒப்பிடாதீங்க.. அவர் ஐபிஎல் ஜெயிச்சா பார்க்கலாம்.. கம்பீர் கடும் விமர்சனம்!!

Recommended Video

ஐபிஎல் வெற்றி குறித்து கோஹ்லி மீது கம்பீர் கடும் விமர்சனம்!!

மும்பை : இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ஐபிஎல் தொடரில் ஒரு முறை கூட கோப்பை வெல்லவில்லை. அவரை தோனி ரோஹித்துடன் ஒப்பிட முடியாது என சரமாரியாக விமர்சித்துள்ளார் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர்.

ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 23 முதல் துவங்க உள்ளது. அதற்கான விவாதங்கள் சூடு பிடித்துள்ளன. அப்படி ஒரு விவாதத்தில் கௌதம் கம்பீர் விராட் கோலியின் தலைமை குறித்து மிகக் கடுமையாக பேசியுள்ளார்.

கையெழுத்து போட்டுருக்காங்க.. இந்தியா ஆடித்தான் ஆகணும்.. ஐசிசி அதிகாரி திட்டவட்டம்!! கையெழுத்து போட்டுருக்காங்க.. இந்தியா ஆடித்தான் ஆகணும்.. ஐசிசி அதிகாரி திட்டவட்டம்!!

கம்பீர் விமர்சனம்

கம்பீர் விமர்சனம்

"கோலி ஒரு அதிரடி கேப்டன் அல்லது மதிநுட்பம் நிறைந்த கேப்டனாக நான் பார்க்கவில்லை. அவர் இன்னும் ஐபிஎல் கோப்பை வென்றதில்லை. அவர் கோப்பை வெல்லும் வரை அவரது கேப்டன்சி ரெக்கார்டு மட்டும் தான் பேசும்" என குத்திக் காட்டினார் கம்பீர்.

தோனி, ரோஹித் சர்மா

தோனி, ரோஹித் சர்மா

தோனி, ரோஹித் சர்மா ஆகிய இரண்டு கேப்டன்களும் மூன்று முறை ஐபிஎல் கோப்பை வென்றுள்ளனர். அவர்களுடன் கோலியை ஒப்பிடக் கூடாது. ஏனெனில், அவர் கடந்த ஏழு - எட்டு ஆண்டுகளாக பெங்களூர் அணியின் கேப்டனாக இருக்கிறார் என்றார் கம்பீர். அதாவது, இத்தனை ஆண்டுகள் கேப்டனாக இருந்தும் ஒரு முறை கூட கோப்பை வெல்லவில்லை என சுட்டிக் காட்டியுள்ளார்.

நன்றி சொல்லணும்

நன்றி சொல்லணும்

கேலியாகவும் ஒரு விஷயத்தை கூறினார் கம்பீர். "கோலி மிகவும் அதிர்ஷ்டசாலி. அவரது அணிக்கு அவர் நன்றி கூற வேண்டும். ஏனெனில், பல கேப்டன்கள் தொடரை வெல்லாமல் இத்தனை காலம் கேப்டனாக ஓட்டியதில்லை" என்றார்.

ஒரே அணியில் கோலி

ஒரே அணியில் கோலி

ஐபிஎல் தொடரில் அணி மாறாமல், ஒரே அணியில் இருக்கும் வீரர் விராட் கோலி மட்டுமே. கடந்த 2008 முதல் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் தான் இருந்து வருகிறார் கோலி.

கோலி கேப்டன்சி எப்படி?

கோலி கேப்டன்சி எப்படி?

கோலி கடந்த 2013 முதல் பெங்களூர் அணியின் கேப்டன் பதவியில் இருக்கிறார். இதுவரை 96 போட்டிகளில் 44 வெற்றிகள் பெற்றுக் கொடுத்துள்ளார். கோலி தலைமையில் இருமுறை பிளே-ஆஃப் சென்றுள்ளது பெங்களுர் அணி. அதில் ஒருமுறை இறுதிப் பொடி வரை சென்று தோல்வி அடைந்தது.

கம்பீர் தலைமை

கம்பீர் தலைமை

கம்பீர், கோலி மீது கடுமையாக விமர்சனம் வைத்து வருவது புதிதல்ல. ஆஸ்திரேலிய தொடரிலேயே விராட் கோலியை மிகக் கடுமையாக விமர்சித்தார் கம்பீர். ஐபிஎல் தொடரில் கோலியை விமர்சிக்கும் கம்பீர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு இரு முறை கோப்பை வென்று கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, March 19, 2019, 12:57 [IST]
Other articles published on Mar 19, 2019
English summary
Gautam Gambhir slams Virat Kohli captaincy in throughout IPL tournament.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X