For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கங்குலி கூட்டிட்டு வந்த வீரரை வைச்சு தான் ஜெயிச்சார்.. தோனியை விளாசித் தள்ளிய முன்னாள் வீரர்!

மும்பை : கங்குலி உருவாக்கிய அணியை வைத்து தான் தோனி சிறந்த கேப்டனாக வலம் வந்தார் என முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் கடந்த சில நாட்களாக கடுமையாக பேசி வருகிறார்.

Recommended Video

Zaheer Khan தான் காரணம்.. Dhoni தலைமை பற்றி Gambhir கருத்து

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் குறிப்பிட்ட ஒரு வீரரை வைத்து தான் தோனி டெஸ்ட் போட்டிகளில் வெற்றிகரமான கேப்டனாக இருந்தார் என்று கூறி உள்ளார் கம்பீர்.

தோனியின் வெற்றிகளுக்கான பலன் கங்குலிக்கு தான் அளிக்கப்பட வேண்டும் எனவும் கூறினார் அவர்.

நல்லாத்தான் ஆடினார்.. டீமை விட்டு தூக்கி எறிஞ்சுட்டாங்க.. பொங்கிய முன்னாள் வீரர்.. சரமாரி விளாசல்!நல்லாத்தான் ஆடினார்.. டீமை விட்டு தூக்கி எறிஞ்சுட்டாங்க.. பொங்கிய முன்னாள் வீரர்.. சரமாரி விளாசல்!

சிறந்த கேப்டன்

சிறந்த கேப்டன்

கங்குலியை விட தோனி வெற்றிகரமான டெஸ்ட் கேப்டனாக வலம் வந்தார். இந்திய டெஸ்ட் அணி முதன்முறையாக டெஸ்ட் போட்டிகள் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்து சாதனை புரிந்தது. புள்ளி விவரங்களை வைத்துப் பார்த்தால் தோனி, கங்குலியை விட சிறந்த கேப்டனாக இருக்கிறார்.

கங்குலி உருவாக்கிய வீரர்

கங்குலி உருவாக்கிய வீரர்

டெஸ்ட் அணியில் ஜாகிர் கான் இருந்ததால் தான் தோனி சிறந்த கேப்டனாக இருக்க முடிந்தது என தற்போது கௌதம் கம்பீர் அதிரடியாக கூறி உள்ளார். கங்குலி உருவாக்கிய வீரரான ஜாகிர் கான் தோனிக்கு கிடைத்தது அதிர்ஷ்டம் எனவும் அவர் கூறி உள்ளார்.

அதிக டெஸ்ட் விக்கெட்கள்

அதிக டெஸ்ட் விக்கெட்கள்

இந்திய டெஸ்ட் அணியில் நல்ல வேகப் பந்துவீச்சாளர்கள் இல்லாத நிலையில் ஜாகிர் கான் மட்டுமே வேகப் பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்தி வந்தார். கபில் தேவுக்கு பின் அதிக டெஸ்ட் விக்கெட்கள் எடுத்த இந்திய வேகப் பந்துவீச்சாளர் அவர்தான்.

இந்தியாவின் உலகத்தரமான பந்துவீச்சாளர்

இந்தியாவின் உலகத்தரமான பந்துவீச்சாளர்

"டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனி வெற்றிகரமான கேப்டனாக வலம் வர முக்கிய காரணம் ஜாகிர் கான் தான். தோனி அவருக்கு கிடைத்தது பெரிய அதிர்ஷ்டம். அதற்கான பலன் கங்குலிக்கு தான் செல்ல வேண்டும். என்னைப் பொறுத்தவரை ஜாகிர் கான் தான் இந்தியாவின் உலகத்தரமான பந்துவீச்சாளர்." என்றார் கம்பீர்.

அதிர்ஷ்டம் வாய்ந்த கேப்டன்

அதிர்ஷ்டம் வாய்ந்த கேப்டன்

"தோனி ஒரு அதிர்ஷ்டம் வாய்ந்த கேப்டன். ஏனெனில், அவருக்கு அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலும் சிறந்த அணி கிடைத்தது. 2011 உலகக்கோப்பை அணியை கேப்டனாக வழிநடத்துவது மிகவும் எளிது. அவருக்கு சச்சின், சேவாக், நான், யுவராஜ், விராட் போன்றோர் கிடைத்தோம்." என்றார் கம்பீர்.

கங்குலி உழைத்தார்

கங்குலி உழைத்தார்

மேலும், "கங்குலி சிறந்த அணிக்காக கடுமையாக உழைத்த நிலையில், தோனி அதன் பலனாக பல கோப்பைகளை வென்றார்" என வெளிப்படையாக தோனியை குறித்து பேசினார் கௌதம் கம்பீர். தோனி குறித்து தொடர்ந்து விமர்சித்தே பேசி வருகிறார் கம்பீர்.

Story first published: Saturday, July 11, 2020, 20:32 [IST]
Other articles published on Jul 11, 2020
English summary
Gautam Gambhir targets Dhoni with Zaheer Khan. He says only because of Zaheer Khan, Dhoni was successful captain in tests.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X