For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஹர்திக் முடிவு ஆச்சரியம் அளிக்கிறது.. இளம் வீரர்கள் செய்யும் மெகா தவறு.. கவுதம் கம்பீர் பேட்டி

லக்னோ : நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் என்ற இலக்கை ஒரு பந்து எஞ்சிய நிலையில் எட்டி திரில் வெற்றி பெற்றது. இதில் 45 பந்துகள் வரை இந்திய அணி பவுண்டரியே அடிக்காதது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

எனினும் இந்திய அணி நெருக்கடியிலும் கடுமையாக போராடி வெற்றி பெற்றனர். இந்த நிலையில் இந்த போட்டி குறித்து கௌதம் கம்பீர் பல்வேறு முக்கிய கருத்துகளையும் அறிவுரைகளையும் கூறி இருக்கிறார்.

அதனை தற்போது பார்க்கலாம் முதலில் இந்த ஆடுகளம் டி20 போட்டிக்கு ஏற்ற வகையில் அமைக்கப்படவில்லை.

உலக கோப்பை ஹாக்கி.. 3வது முறையாக ஜெர்மனி சாம்பியன்.. பரபரப்பான டிவிஸ்டில் நடந்த இறுதிப் போட்டி உலக கோப்பை ஹாக்கி.. 3வது முறையாக ஜெர்மனி சாம்பியன்.. பரபரப்பான டிவிஸ்டில் நடந்த இறுதிப் போட்டி

சாஹல் ஏன் பயன்படுத்தல

சாஹல் ஏன் பயன்படுத்தல

இது தரக்குறைவான ஆடுகளம் என்பதை நாம் அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும். சுழற் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் இந்தியாவின் நம்பர் ஒன் டி20 பந்துவீச்சாளரான சாகலை இரண்டு ஓவர் மட்டுமே ஹர்திக் பாண்டியா பயன்படுத்தியது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இது ஹர்திக் பாண்டியா செய்த தவறாக பார்க்கிறேன். காரணம் இரண்டு ஓவரில் அவர் நான்கு ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை எடுத்திருக்கிறார்.

மிஸ் பண்ணிட்டாரு

மிஸ் பண்ணிட்டாரு

முழு ஓவரையும் ஹர்திக் பாண்டியா பயன்படுத்தியிருக்க வேண்டும். ஒருவேளை சாகல் 4 ஓவர் வீசி யிருந்தால் நியூசிலாந்த அணி 85 ரன்கள் எடுத்திருக்கலாம். ஆர்ஸ்தீப் சிங் இன்றைய ஆட்டத்தில் இரண்டு ஓவர்கள் வீசி 7 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இது அவருடைய தன்னம்பிக்கையை மேலும் அதிகப்படுத்தும். ஆனால் அவர் பார்முக்கு திரும்பி விட்டார் என்று என்னால் சொல்ல முடியாது.

கம்பீர் அறிவுரை

கம்பீர் அறிவுரை

ஏனென்றால் நியூசிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு தான் அவர் பந்து வீசினார். பேட்ஸ்மேன்களை விட பந்துவீச்சாளர்களுக்கு பந்து வீசுவது மிகவும் எளிதான விஷயம். ஆடுகளத்தை பொறுத்தவரை இது மோசமாக இருந்தாலும், கிரிக்கெட் வீரராக நீங்கள் அதை சவாலாக எடுத்துக் கொண்டு விளையாடி இருக்க வேண்டும். இப்போது உள்ள தலைமுறை வீரர்கள் வலைப் பயிற்சியின் போது சுழற் பந்துவீச்சாளர்களை எப்படி சிக்சர் அடிக்கலாம் என்று மட்டுமே பயிற்சி எடுத்து வருகிறார்கள். அதுதான் திறமை என்று நினைத்துக் கொள்கிறார்கள்.

பயிற்சி செய்யுங்கள்

பயிற்சி செய்யுங்கள்

ஆனால் சுழற் பந்துவீச்சை எப்படி சமாளித்து ஆட்டம் இழக்காமல் விளையாட வேண்டும் என்பது குறித்து யாரும் யோசிப்பதில்லை. என்னைக் கேட்டால் அதுதான் உண்மையான திறமை. வலைப்பயிற்சியில் சுழற் பந்துவீச்சாளர்களை எப்படி எதிர்கொண்டு சிங்கிள் எடுக்க வேண்டும் என்பது குறித்தும் இளம் வீரர்கள் பயிற்சி எடுக்க வேண்டும். பந்துகளை வீணடிக்காமல் சிங்கிள்ஸ் அடித்து விளையாடியிருந்தால் இந்திய அணி முன்கூட்டியே வெற்றி பெற்று இருக்கலாம் என்று கம்பீர் கூறியுள்ளார்.

Story first published: Monday, January 30, 2023, 6:00 [IST]
Other articles published on Jan 30, 2023
English summary
Gautam Gamdhir asks youngsters to concentrate on rotate strike when facing spinners ஹர்திக் முடிவு ஆச்சரியம் அளிக்கிறது.. இளம் வீரர்கள் செய்யும் மெகா தவறு.. கவுதம் கம்பீர் பேட்டி
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X