For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவர்கள் பின்னிய வலை அது.. இந்திய ஸ்பின்னர்களின் வியூகத்தை உடைத்த சுனில் கவாஸ்கர்

அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா வென்ற நிலையில் இந்திய ஸ்பின்னர்களின் வியூகம் குறித்து கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3 1 என்ற கணக்கில் இந்திய கைப்பற்றியுள்ளது. இதற்கு ஸ்பின்னர்கள் முக்கிய காரணமாய் இருந்தனர்.

இவர்கள் தான் திருப்புமுனையை ஏற்படுத்தும் அந்த 5 வீரர்கள்..... இந்தியாவா? இங்கிலாந்து-ஆ? ஓர் அலசல் இவர்கள் தான் திருப்புமுனையை ஏற்படுத்தும் அந்த 5 வீரர்கள்..... இந்தியாவா? இங்கிலாந்து-ஆ? ஓர் அலசல்

இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய ஸ்பின்னர்களின் வியூகம் குறித்து முன்னாள் வீரர் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் தொடங்கி நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 205 ரன்கள் அடித்த நிலையில் இந்தியா 365 ரன்கள் எடுத்து 160 ரன்கள் முன்னிலை வகித்தது. இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து 2 வது இன்னிங்ஸில் 135 ரன்களுக்கு சுருண்டதால் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. தொடரையும் கைப்பற்றியது.

ஸ்பின்னர்கள்

ஸ்பின்னர்கள்

இந்த தொடர் முழுவதும் ஸ்பின்னர்கள்தான் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். 4வது டெஸ்டில் அஷ்வின் மற்றும் அக்‌ஷரின் சிறப்பான பந்துவீச்சால் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் அஸ்வின் 8 விக்கெட்டும் அக்‌ஷர் 9 விக்கெட்டுகளையும் எடுத்து அசத்தினர்.

வியூகம்

வியூகம்

இதுகுறித்து பேசிய கவாஸ்கர், அஸ்வின் மற்றும் அக்‌ஷர் இருவரும் தொடர் முழுவதும் இங்கிலாந்துக்கு பேட்ஸ்மேன்கள் திணறும் வகையில் ஒரு வலையை பின்னியிருந்தனர். பிட்ச்-ல் நல்ல டேர்னிங் இருந்ததால் இருவரும் அதனை நன்கு பயன்படுத்திக்கொண்டனர். அதிலும் திடீரென நேராக பந்தை வீசி குழப்பினர். அதில் அஷ்வின் கைத்தேர்ந்தவர் என பாராட்டு தெரிவித்திருந்தார்.

இறுதி போட்டியில் இந்தியா

இறுதி போட்டியில் இந்தியா

இங்கிலாந்துக்கு எதிரான தொடரை இந்தியா அணி வென்றதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் நியூசிலாந்து ஏற்கனவே இறுதிபோட்டிக்கு முன்னேறியுள்ளது. இதனால் இவ்விரு அணிகளுக்குமான இறுதிப்போட்டி ஆஸ்திரேலியாவின் லார்ட்ஸ் மைதானத்தில் வரும் ஜூன் 18ம் தேதி நடக்கவுள்ளது.

Story first published: Saturday, March 6, 2021, 17:41 [IST]
Other articles published on Mar 6, 2021
English summary
Gavaskar Lauds indian spinners Ashwin and axar patel
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X