For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனியுடைய அனுபவம் ஆஹா.. அவர் ஸ்பின்னர்களுக்கு உதவும் விதம் ஓஹோ.. புகழும் கவாஸ்கர்

மும்பை : கவாஸ்கர் இந்தியா ஆசிய கோப்பை போட்டியில் என்ன செய்யப் போகிறது என்பது பற்றிய தன் கணிப்பை கூறியுள்ளார்.

ஆசிய கோப்பை தொடரில் இந்தியா இன்று ஹாங்காங் அணியை சந்திக்கிறது. நாளை, பாகிஸ்தான் அணியை சந்திக்க உள்ளது.

இந்நிலையில் கவாஸ்கர் தன் எண்ணங்களை வெளிப்படுத்தி உள்ளார். அதில் தோனி பற்றி புகழ்ந்து உள்ளார்.

தோனி ரோஹித்துக்கு உதவுவார்

தோனி ரோஹித்துக்கு உதவுவார்

இந்திய அணியில் விராட் கோலி இல்லை. ரோஹித் சர்மா தான் தலைமை ஏற்றுள்ளார். இந்த நிலையில் கேப்டன் அனுபவம் குறைவாக இருக்கும் ரோஹித் சர்மாவுக்கு அனுபவம் வாய்ந்த தோனி உதவுவார் என குறிப்பிட்டுள்ளார் கவாஸ்கர்.

பந்துவீச்சில் உதவும் தோனி

பந்துவீச்சில் உதவும் தோனி

இளம் சுழல் பந்துவீச்சாளர்களான குல்தீப் யாதவ், சாஹல் இருவருமே பல முறை தோனி விக்கெட் கீப்பிங்கில் இருந்து கொண்டு எங்களுக்கு பல்வேறு வகையில் விக்கெட் எடுக்க உதவுகிறார் என கூறியுள்ளார்கள். இதை தான் கவாஸ்கர் குறிப்பிட்டு கூறியுள்ளார். தோனி சுழல் பந்துவீச்சாளர்களுக்கு உதவும் விதம் மிகவும் அருமையானது என பாராட்டி உள்ளார் கவாஸ்கர்.

பேட்டிங் அப்புறம் தான்

பேட்டிங் அப்புறம் தான்

இந்தியா எப்போதும் பேட்டிங்கில் தான் சிறந்து விளங்கும். ஆனால், சமீப காலமாக இந்தியா பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதிலும், சாஹல் மற்றும் குல்தீப் தொடர்ந்து விக்கெட்கள் வீழ்த்தி வருகிறார்கள். அவர்களையும் பாராட்டி உள்ளார் கவாஸ்கர்.

2 நாளில் 2 போட்டிகள்

2 நாளில் 2 போட்டிகள்

இந்தியா அடுத்தடுத்த நாட்களில் விளையாட உள்ளதால், அதற்கேற்றார் போல திட்டமிட வேண்டும் எனவும் கூறியுள்ளார் கவாஸ்கர். குறிப்பாக டாஸ் வென்றால் இந்தியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வதன் மூலம், இரண்டாம் இன்னிங்க்ஸில் பேட்டிங் செய்ய முடியும். அது அனைத்து வீரர்களுக்கும் ஓய்வு நேரத்தை அளிக்கும்.

Story first published: Tuesday, September 18, 2018, 17:00 [IST]
Other articles published on Sep 18, 2018
English summary
Gavaskar praises Dhoni for his guidance, experience and his way of helping the spinners to get wickets
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X