For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டீமில் இடம் இருக்காது- அமித் மிஸ்ராவுக்கு கவாஸ்கர் வார்னிங்

By Veera Kumar

மும்பை: இப்படியே பந்து போட்டால் அமித் மிஸ்ரா அணியிலிருந்து வெளியேற்றப்படுவதை தவிர்க்க முடியாது என்று எச்சரித்துள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர்.

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை ருசித்தது. கடைசி ஓவரில் 8 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையிலும், பும்ரா அருமையாக பந்து வீசி இந்தியாவை வெற்றி பெறச் செய்தார்.

அதேபோல ஆஷிஷ் நெஹ்ரா ஆரம்பத்திலேயே 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்தின் கைகளை முடக்கி வைத்தார். இருப்பினும், இறுதிகட்டத்தில் சற்று ரன்னை வாரி வழங்கிவிட்டார்.

கவாஸ்கர் கருத்து

கவாஸ்கர் கருத்து

இந்த போட்டி குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர், கவாஸ்கர் கருத்து கூறியுள்ளார். "இந்த கால கிரிக்கெட் உலகத்தில் கடைசி ஓவருக்கு 8 ரன்கள் எடுப்பது எளிதான விஷயம்தான். அதிலும் பேட்ஸ்மேன்கள் களத்தில் நிற்கும்போது இது இன்னும் எளிதானது. அப்படியும், பும்ரா அருமையாக பந்து வீசி இந்தியாவுக்கு வெற்றி தேடி கொடுத்தார்.

புத்திசாலி

புத்திசாலி

பிட்சின் தன்மையை அறிந்து, புத்திசாலித்தனமாக பந்து வீசினார் பும்ரா. முதல் இரு பந்துகளையும் மெதுவாகவும், பிறகு வேகமாகவும் வீசி 2 விக்கெட்டுகளை அந்த ஓவரில் கைப்பற்றினார் என்றார் அவர். இந்நிலையில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா சத்தமில்லாமல் ஒரு சாதனைபடைத்துள்ளார். தனது 169வது டி20 போட்டியில் நேற்று பங்கேற்ற மிஸ்ரா, 200 விக்கெட்டுகளை சாய்த்தார். இங்கிலாந்து கேப்டன் மோர்கன் இவரது 200வது விக்கெட்டாகும்.

அஸ்வினுக்கு சமன்

அஸ்வினுக்கு சமன்

முன்னதாக, அஸ்வின் மட்டுமே டி20 போட்டிகளில் 200 விக்கெட்டை கடந்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றிருந்தார். அஸ்வின் 195 போட்டிகளில் 200 விக்கெட்டுகளை எடுத்தார். அமித் மிஸ்ரா சாதித்திருந்தாலும் அவரது நோ-பால் போடும் பழக்கம் இந்தியாவுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. நேற்றும் பென் ஸ்ட்ரோக்சை பௌல்ட் செய்த மிஸ்ரா, அது நோ-பால் ஆனதால் ஏமாற்றமடைந்தார்.

எச்சரிக்கை

எச்சரிக்கை

இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில், அமித் மிஸ்ரா நோ-பால் போடும் வழக்கத்தை திருத்திக்கொள்ள வேண்டும். அல்லது, மிஸ்ரா இந்திய அணியிலிருந்து வெளியேற்றப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று எச்சரிக்கை செய்தார். நோ-பாலில் விக்கெட்டை வீழ்த்தி ரசிகர்களை கடுப்படிப்பது மிஸ்ரா வாடிக்கையாக மாறிவிட்டது. நேற்றும் இந்த கொடுமை நடந்ததால் கவாஸ்கர் இவ்வாறு கூறியுள்ளார்.

Story first published: Monday, January 30, 2017, 14:05 [IST]
Other articles published on Jan 30, 2017
English summary
Gavaskar said Amit Mishra has to be careful with no ball. Mishra could lose his place in the side if he doesn’t correct his habit of overstepping, he said.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X