For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரூ. 1.90 கோடி சம்பளம் கேட்கும் கவாஸ்கர்....!

கொல்கத்தா: ஐபிஎல் தலைவராக பணியாற்றிய காலத்திற்கு தனக்கு ரூ. 1.90 கோடி சம்பளமாக தர வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்திற்குத் தெரிவித்துள்ளார் சுனில் கவாஸ்கர்.

7வது ஐபிஎல் தொடரின்போது ஐபிஎல் தலைவராக பணியாற்றினார் கவாஸ்கர். உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த வேலையை அவர் செய்தார். அப்போது கவாஸ்கருக்குப் பொருத்தமான, தகுதியான ஊதியத்தை கிரிக்கெட் வாரியம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது உச்சநீதிமன்றம்.

ஆனால் கவாஸ்கரோ ரூ. 1.90 கோடி சம்பளம் தருமாறு கிரிக்கெட் வாரியத்திடம் கேட்டுள்ளார். இந்த பணியின்போது தான் மீடியாக்களில் எழுதுவதை நிறுத்தி வைத்ததாகவும், இதனால் தனக்குப் பெரும் தொகை கை நழுவிப் போனதாகவும் கவாஸ்கர் காரணம் கூறியுள்ளார்.

ஏன் கவாஸ்கர்

ஏன் கவாஸ்கர்

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின்போது உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சீனிவாசன் பிசிசிஐ தலைவர் பதவியிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டார். தற்காலிக கிரிக்கெட் வாரிய தலைவராக கவாஸ்கர் நியமிக்கப்பட்டார். அவரை ஐபிஎல் தொடரை கண்காணிக்குமாறு உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டது. மேலும் ஷிவ்லால் யாதவ் பிசிசியின் பிற பணிகளைப் பார்த்துக் கொள்ள பணிக்கப்பட்டார்.

கேட்கும் சம்பளத்தைக் கொடுக்கவும்

கேட்கும் சம்பளத்தைக் கொடுக்கவும்

மேலும் கவாஸ்கருக்குரிய சம்பளத்தை, அவரது பிற கமிட்மென்ட்களையும் கணக்கில் கொண்டு ஊதியம் வழங்க வேண்டும் என்றும் கிரிக்கெட் வாரியத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அடேங்கப்பா கடிதம்...!

அடேங்கப்பா கடிதம்...!

இந்த நிலையில் தான் ஐபிஎல் தலைவராக பணியாற்றிய காலத்திற்கான ஊதியமாக ரூ. 1.90 கோடி தருமாறு பிசிசிஐக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார் கவாஸ்கர். இந்தக் கடிதம் குறித்து பிசிசிஐயின் செயற்குழுக் கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டுள்ளது.

என்ன எழுதியிருக்கிறார்

என்ன எழுதியிருக்கிறார்

அந்தக் கடிதம் குறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், பிசிசிஐக்கு கவாஸ்கர் கடிதம் எழுதியுள்ளார். அதில், தனக்கு சம்பளமாக, ரூ. 1.90 கோடி தருமாறு கேட்டுள்ளார். தனது மீிடியா பணிகள், டிவி வர்ணனை, கட்டுரைகள், விமர்சனங்கள், ஆய்வுகள் எழுதுவது ஆகியவற்றை நிறுத்திய காரணத்தால் அதற்கு இழப்பீடாக இந்தத் தொகையை தருமாறு அவர் கோரியுள்ளார்.

நிதிக் கமிட்டி ஆலோசிக்கும்

நிதிக் கமிட்டி ஆலோசிக்கும்

இந்தக் கடிதம் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதுவரைக்கம் அவருக்கு சம்பளம் எதுவும் போகவில்லை. நிதிக் கமிட்டி இந்தக் கடிதத்தைப் பரிசீலித்து ஒப்புதல் அளித்த பிறகே அவருக்குரிய சம்பளம் அனுப்பி வைக்கப்படும்.

கொடுத்துதானே ஆகனும்

கொடுத்துதானே ஆகனும்

உச்சநீதிமன்றம், கவாஸ்கருக்குரிய சம்பளத்தைத் தர உத்தரவிட்டுள்ளது. எனவே அவருக்குரிய சம்பளத்தைக் கொடுத்துத்தான் ஆக வேண்டும். இருப்பினும் அதை நிதிக் கமிட்டி முடிவு செய்யும் என்றார் அவர்.

Story first published: Tuesday, April 28, 2015, 12:00 [IST]
Other articles published on Apr 28, 2015
English summary
Former India captain Sunil Gavaskar has asked for an amount of Rs 1.90 crore as remuneration for rendering his services as president BCCI-IPL during the seventh edition of the cash-rich league last year, which was held in UAE and India.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X