For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மிதாலி ராஜ் மாதிரி கோலியை தூக்குவீங்களா? நச்சென்று நியாயம் கேட்ட கவாஸ்கர்

மும்பை : மிதாலி ராஜ் சர்ச்சையில் சுனில் கவாஸ்கர் மிதாலி ராஜுக்கு ஆதரவாக கருத்து கூறி உள்ளார்.

மகளிர் உலக டி20 அரையிறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் மிதாலி ராஜ் இடம் பெறவில்லை. அது பெரும் சர்ச்சை ஆனது அதன் பின்னணியில் பயிற்சியாளர் ரமேஷ் பவார், மிதாலி ராஜ் இடையே இருந்த உரசல் தான் காரணம் என தெரிய வந்தது.

இதில் மிதாலி ராஜ் பக்கமே நியாயம் இருப்பதாக பலரும் ஆதரவு அளித்து வருகின்றனர். முன்பு கங்குலி தன் ஆதரவை தெரிவித்தார், தற்போது கவாஸ்கரும் ஆதரவான கருத்தை முன்வைத்துள்ளார்.

இரண்டு அரைசதம் எடுத்தார்

இரண்டு அரைசதம் எடுத்தார்

மிதாலி ராஜ் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் மூத்த வீரர். ஒருநாள் போட்டிகள் அணிக்கு கேப்டனாக உள்ளார். டி20 அணியில் அவர் கேப்டன் இல்லை என்றாலும் முன்னணி வீராங்கனையாக இருந்து வருகிறார். மகளிர் உலக டி20 தொடரில் இரண்டு போட்டிகளில் துவக்க நிலையில் இறங்கி அரைசதங்கள் அடித்தார்.

இது தவறான முடிவு

இது தவறான முடிவு

அடுத்த போட்டியில் காயம் காரணமாக பங்கேற்காத மிதாலி உடற்தகுதியோடு இருந்தும் அரையிறுதிப் போட்டியில் ஆடவில்லை. அதற்கு பயிற்சியாளர் ரமேஷ் பவார் அரையிறுதிக்கு முந்தைய போட்டியில் களம் இறங்கிய அணி வெற்றி பெற்றதால் அதே அணியோடு மீண்டும் களம் இறங்க எண்ணினோம் என கூறி இருந்தார். இது தவறான முடிவு, இதை ஏற்கமுடியாது என கவாஸ்கர் கூறியுள்ளார்.

மிதாலிக்காக வருத்தப்படுகிறேன்

மிதாலிக்காக வருத்தப்படுகிறேன்

கவாஸ்கர் கூறுகையில், "மிதாலிக்காக நான் வருத்தப்படுகிறேன். அவர் பக்கம் விஷயம் உள்ளது. இந்திய அணிக்காக 20 ஆண்டுகள் ஆடியுள்ளார். ரன் குவித்துள்ளார். இரண்டு (மகளிர் உலக டி20 குரூப் போட்டிகள்) போட்டிகளிலும் சிறந்த வீராங்கனை விருது வென்றுள்ளார்." என மிதாலியின் பக்கம் உள்ள நியாயத்தை குறிப்பிட்டார்.

கோலிக்கு இது மாதிரி நடக்குமா?

கோலிக்கு இது மாதிரி நடக்குமா?

"அவர் ஒரு போட்டியில் காயத்தில் இருந்தார். அடுத்த போட்டிக்கு தகுதி பெற்று இருந்தார். இதே விஷயத்தை ஆடவர் கிரிக்கெட்டில் பொருத்திப் பாருங்கள். விராட் கோலி ஒரு போட்டியில் காயத்தில் இருக்கிறார். அடுத்து நாக்-அவுட் போட்டி இருந்தால் அவரை அணியில் எடுக்காமல் விட்டு விடுவீர்களா? நாக்-அவுட் போட்டிகளுக்கு உங்களின் சிறந்த வீரர்களோடு தான் நீங்கள் செல்ல வேண்டும். மிதாலி ராஜின் அனுபவமும், அறிவும் நிச்சயம் அணிக்கு தேவை" என கூறினார் கவாஸ்கர்.

சரியான காரணம் இல்லை

சரியான காரணம் இல்லை

மிதாலி ராஜ் பயிற்சியாளர் ரமேஷ் பவார் தான் தன்னை ஓரங்கட்டினார் என கூறி இருந்தார். அது பற்றி பேசிய கவாஸ்கர், "பவாருடன் என்ன நடந்தது என இங்கு இருந்து கூறுவது கடினம். ஆனால், அவர் கூறிய காரணத்தை ஒப்புக் கொள்ள முடியவில்லை. அவர் அதே (மிதாலி இல்லாமல் வெற்றி பெற்ற) அணியுடன் இருக்க முடிவு செய்தோம் என கூறியுள்ளார். அது சரியான காரணம் இல்லை. மிதாலி ராஜ் போன்ற ஒருவரை நீங்கள் இப்படி நீக்க முடியாது" என கூறினார்.

மிதாலி ராஜ் பற்றி பேசறீங்களே.. தோனிக்கு நடந்தது பற்றி தெரியுமா? பிசிசிஐ ரகசியங்கள்

Story first published: Thursday, November 29, 2018, 17:56 [IST]
Other articles published on Nov 29, 2018
English summary
Gavaskar gives his support to Mithali Raj. He feels reason told by Ramesh Powar for her dropping in semi final is unacceptable
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X