For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மீண்டும் பழைய தோனியை பார்க்கவே முடியாதா? ரசிகர்கள் ஏக்கத்தை போக்க சூப்பர் யோசனை

Recommended Video

கிரிக்கெட் ரசிகர்கள் ஏக்கத்தை போக்க சூப்பர் யோசனை- வீடியோ

துபாய் : தற்போதைய இந்திய அணியின் அனுபவ வீரராக இருப்பவர் தோனி மட்டுமே. சமீப காலமாக அவரது பேட்டிங் திறன் சரிந்து வருவது ரசிகர்களின் கவலையை அதிகரித்துள்ளது.

அவரது தலைமை பண்பு மற்றும் ஆட்டத்தின் போக்கை, எதிரணியின் மனநிலையை கணிக்கும் திறமை ஆகியவற்றுக்கு ஈடு இணையே இல்லை.

விக்கெட் கீப்பிங்கில் கூட அவருக்கு மாற்றாக இளம் வீரர்கள் செயல்பட முடியவில்லை. அவரது வேகமான ரன் அவுட்கள் மற்றும் ஸ்டம்பிங் ஆகியவை அன்று முதல் இன்று வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

தேயும் பேட்டிங் திறமை

தேயும் பேட்டிங் திறமை

விக்கெட் கீப்பிங் சிறப்பாக இருந்தாலும், பேட்டிங் கொஞ்சம் திறன் சரிந்து வருகிறது. கடந்த 9 ஒருநாள் போட்டிகளில் 189 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் தோனி. இதில் அதிகபட்ச ரன் 42 மற்றும் இதன் சராசரி 27 மட்டுமே. இங்கிலாந்து ஒருநாள் தொடரில் இவர் நிதானமாக ரன் சேர்த்ததும் விமர்சனத்துக்கு உள்ளானது.

உள்ளூர் கிரிக்கெட்டில் ஆடினால்..

உள்ளூர் கிரிக்கெட்டில் ஆடினால்..

தோனியின் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் ஆடினால் பேட்டிங் திறன் மீண்டும் முன்னேறுமா? என்பது பற்றி சுனில் கவாஸ்கரிடம் கேட்ட போது, "தோனி உள்ளூர் கிரிக்கெட்டில் பங்கேற்க வேண்டும். உள்ளூர் தொடரில் நான்கு நாள் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க வேண்டும். அது அவருக்கு மட்டுமில்லாமல், ஜார்கண்ட் மாநிலத்தின் மற்ற கிரிக்கெட் வீரர்களுக்கும் உதவியாக இருக்கும்" என கூறினார்.

அதிக உறுதி கிடைக்கும்

அதிக உறுதி கிடைக்கும்

மேலும், "50 ஓவர் போட்டிகளில் குறைந்த வாய்ப்பு தான் கிடைக்கும். மாறாக நான்கு நாள் போட்டிகளில், நீண்ட நேரம் நின்று ஆட முடியும். அது குறைந்த ஓவர் போட்டிகளுக்கு தேவையான உடல் உறுதி, வேகமான கால்கள், பேட்டிங் திறன் அனைத்திற்கும் உதவும்" என குறிப்பிட்டார் கவாஸ்கர்.

தோனிக்கு மாற்று இல்லையே!

தோனிக்கு மாற்று இல்லையே!

தோனி பேட்டிங் கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும், அவரை அணியில் இருந்து நீக்கினால், அது இந்திய அணிக்குதான் இழப்பு. அவரது அனுபவம், நிரந்தர கேப்டன் கோலி மற்றும் தற்காலிக கேப்டன் ரோஹித் சர்மா இருவருக்கும் பயன்படுகிறது. முக்கியமாக விக்கெட் ரிவ்யூவில் தோனியின் உதவி அதிகம் தேவைப்படுகிறது. அதே போல, தோனிக்கு மாற்றாக ஒரு சிறந்த விக்கெட் கீப்பர் இல்லை என்பதும் ஒரு காரணம்.

Story first published: Friday, September 28, 2018, 12:45 [IST]
Other articles published on Sep 28, 2018
English summary
Gavsakar says Dhoni should play in domestic cricket to improve his performance
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X