கிறிஸ் கெயில் இல்லை.. அறிமுகமாகும் இளம் வீரர்.. பஞ்சாப் கிங்ஸின் அசுர பலம்.. பக்கா ப்ளேயிங் 11 இதோ!

அமீரகம்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

Punjab Kings தோல்விக்கு Anil Kumbleவின் Team Selection காரணமா? | I OneIndia Tamil

ஐபிஎல் தொடரின் 32வது லீக் போட்டியில் இன்று பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

 IPL 2021: தினம் 3 - 4 மணி நேர பேட்டிங் பயிற்சி - IPL 2021: தினம் 3 - 4 மணி நேர பேட்டிங் பயிற்சி -

இரு அணிகளும் புள்ளிப்பட்டியலில் பின்தங்கிய நிலையில் இருப்பதால் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

 பஞ்சாப் கிங்ஸ்

பஞ்சாப் கிங்ஸ்

பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்டிங்கை பொறுத்தவரை தொடக்க வீரர்களாக கேப்டன் கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் ஜோடி களமிறங்குகின்றனர். இவர்கள் இருவருமே நல்ல பலனை கொடுத்திருப்பதால் ஓப்பனிங் பலமாக இருக்கிறது. மிடில் ஆர்டரில், எய்டன் மர்க்ராம், நிகோலஸ் பூராண், தீபக் ஹூடா ஆகியோர் உள்ளனர். ஆல் ரவுண்டர்களில் அடில் ரஷித் மற்றும் ஹர்ப்ரீத் ப்ரார் ஆகியோர் களமிறங்குகின்றனர். அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் சேர்க்கப்படாதது ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது.

 அறிமுக வீரர்

அறிமுக வீரர்

பந்துவீச்சை பொறுத்தவரை பஞ்சாப் அணி மிகப்பெரும் சர்ஃபரைஸ் கொடுத்துள்ளது. முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்குடன் அறிமுக வீரர் இஷான் பொரேலை சேர்த்துள்ளது. உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ள இஷால் தனது முதல் ஐபிஎல் தொடரில் எப்படி செயல்பட போகிறார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

பஞ்சாப் ப்ளேயிங் 11:

பஞ்சாப் ப்ளேயிங் 11:

கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், எய்டன் மர்க்ராம், நிகோலஸ் பூரான், தீபக் ஹூடால், ஃபெபிலன் ஆலன், அடில் ரஷித் , ஹர்ப்ரீத் பிரார், முகமது ஷமி, அர்ஸ்தீப் சிங், இஷான் பொரேல்

ராஜஸ்தான்

ராஜஸ்தான்

இதே போல ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலும் சிறிது மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் எவின் லீவிஸ் ஆகியோர் களமிறங்கின்றனர். ஜெய்ஸ்வால் ஏற்கனவே நல்ல அதிரடி காட்டியுள்ளதால் இங்கும் ஓப்பனிங் பலமாக உள்ளது. பின் வரிசையில் சஞ்சு சாம்சன், லியாம் லிவிங்ஸ்டன், மஹிபால் லாம்ரொர் களம் காணுகின்றனர். அதிரடி ஆட்டக்காரர் டேவிட் மில்லர் ஓரம்கட்டப்பட்டுள்ளார்.

 ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

பந்துவீச்சை பொறுத்தவரை ராகுல் தேவட்டியா, கிறிஸ் மோரிஸ், முஸ்திவிசூர் ரஹ்மான், சேட்டன் சகாரியா, கார்திக் தியாகி ஆகியோர் அணிக்கு பலம் சேர்த்துள்ளனர். இரு அணிகளுமே மிகவும் வலுவான பேட்டிங் மற்றும் பவுலிங் லைன் அப்பை வைத்துள்ளாதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கலாம்

ராஜஸ்தான் ப்ளேயிங் 11:

ராஜஸ்தான் ப்ளேயிங் 11:

யாஷாஸ்வி ஜெய்ஸ்வால், எவின் லூவிஸ், சஞ்சு சாம்சன், லியாம் லிவிங்ஸ்டன், மஹிபால், ரியான் பராக், ராகுல் தேவட்டியா, கிறிஸ் மோரிஸ், முஸ்திவிசூர் ரஹ்மான், சேட்டன் சக்காரியா, கார்த்திக் தியாகி

ஐசிசி டி 20 உலகக் கோப்பை 2021 கணிப்புகள்
Match 5 - October 19 2021, 03:30 PM
ஸ்காட்லாந்து
பாபுவா நியூ கினி
Predict Now
For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Gayle, David Miller out in RR vs PBKS in IPL 2021, Playing 11 details here
Story first published: Tuesday, September 21, 2021, 19:59 [IST]
Other articles published on Sep 21, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X