For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சொ…ன்…னே…ன்…! ஆனா… சொல்லல…! ஒத்த வீடியோ..! ஒட்டு மொத்த கிரிக்கெட் உலகையும் முட்டாளாக்கிய வீரர்

Recommended Video

Gayle Retirement | ஒரே வீடியோவால் கிரிக்கெட் உலகத்துக்கு அதிர்ச்சி கொடுத்த கெய்ல்

போர்ட் ஆப் ஸ்பெயின்: ஓய்வு முடிவு குறித்தும் எந்த செய்தியையும் நான் அறிவிக்க வில்லை என்று வீடியோ மூலம் கிறிஸ் கெய்ல் விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது: எந்தவொரு ஓய்வையும் அறிவிக்கவில்லை. அடுத்த அறிவிப்பு வரும்வரை கிரிக்கெட்டில் வலம் வருவேன் என்றார். 301 என்கிற எண்கள் பொறிக்கப்பட்ட உடையை அணிந்து இந்தியாவுடனான கடைசி ஒரு நாள் போட்டியில் விளையாடினார்.

ஆட்டமிழந்த பிறகு தன்னுடைய ஹெல்மெட்டை பேட்டில் வைத்தபடி நடையை கட்டினார். கெயிலுக்கு இந்திய கேப்டன் கோலியும் இதர இந்திய வீரர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

மறுத்த கெய்ல்

இதனால் அதுவே அவருடைய கடைசி ஒருநாள் ஆட்டம் என எண்ணப்பட்டது. ஆனால் பேட்டியின் வழியாக அதை மறுத்துள்ளார் கெயில். தான் ஒருநாளும் ஓய்வை பற்றி அறிவிக்கவே இல்லை என்று கூறியிருக்கிறார்.

ஜெர்சி எண்

ஜெர்சி எண்

முன்னதாக, இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி டிரினிடாட் போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்றது. வழக்கமாக கிறிஸ் கெய்ல் ‘45' எண் பொறித்த ஜெர்சிதான் அணிந்து விளையாடுவார்.

301 வந்தது எப்படி?

301 வந்தது எப்படி?

ஆனால் அந்த போட்டியில் 301 எண் பொறித்த ஜெர்சியுடன் விளையாடினார். இது அவருக்கு போட்டி அவருக்கு 301வது ஒருநாள் போட்டியாகும். அதனால் இந்த போட்டியுடன் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

கடைசி தொடராகும்

கடைசி தொடராகும்

ஏற்கனவே உலக கோப்பையுடன் அவர் ஓய்வு பெறுவார் என்று கூறப்பட்டது. பின்னர் அவருக்கு வழியனுப்பும் போட்டி ஒன்று நடத்தப்படும் என்றும் இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடர், அவருக்கு கடைசி தொடராக இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் அனைத்தையும் ஒரேயொரு வீடியோவில் மறுத்திருக்கிறார் கெயில்.

Story first published: Friday, August 16, 2019, 7:32 [IST]
Other articles published on Aug 16, 2019
English summary
Gayle denies retire from cricket through a video.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X