For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பழைய ஃபார்முக்கு திரும்பிய கெயில்..தலைசுற்றி நின்ற ஆஸி,பவுலர்கள்..3வது டி20ல் வெஸ்ட்இண்டீஸ் அசத்தல்

லூசியா: டி20 நாயகன் கிறிஸ் கெயில் மீண்டும் தனது பழைய ஃபார்முடம் ஒற்றையாளாக ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியுள்ளார்.

Recommended Video

Chris Gayle அடித்த 14000 T20 Runs! சம்பவம் செய்த 1st Batsman | WI vs AUS | OneIndia Tamil

வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் 2 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றுள்ள நிலையில் 3வது போட்டி நேற்று நடைபெற்றது.

இந்தியா - இலங்கை தொடரில் குழப்பம்.. விளையாட மறுத்து போர்க்கொடி தூக்கிய 5 வீரர்கள்.. காரணம் என்ன? இந்தியா - இலங்கை தொடரில் குழப்பம்.. விளையாட மறுத்து போர்க்கொடி தூக்கிய 5 வீரர்கள்.. காரணம் என்ன?

முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் சேர்த்தது. பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 14.5 ஓவர்களில் 142 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.

மீண்டும் சொதப்பல்

மீண்டும் சொதப்பல்

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து ஓப்பனர்களாக களமிறங்கிய மேத்யூ வேட் (23), கேப்டன் ஃபிஞ்ச் (31) ஜோடி சிறப்பாக தொடக்கம் கொடுத்தனர். இதன் பின்னர் களமிறங்கிய வீரர்கள் யாரும் பெரிய அளவில் ரன்களை குவிக்கவில்லை.

எளிய இலக்கு

எளிய இலக்கு

மிட்செல் மார்ஷ் (9), அலேக்ஸ் ஹேரி (13) எடுத்து சொதப்ப, கடைசி சில ஓவர்களில் ஹென்ரி 33 ரன்களும், டேர்னர் 24 ரன்களும் அடித்து ஸ்கோரை உயர்த்தினர். இதனால் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 141 ரன்கள் மட்டுமே எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் ஹெய்டன் வல்ஸ் 2 விக்கெட்களை கைப்பற்றினார்.

தொடக்கமே அதிர்ச்சி

தொடக்கமே அதிர்ச்சி

142 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணியில், தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. ஓப்பனர்கள் ஆண்ட்ரே ப்ளட்சர் (4), சிம்மன்ஸ் (15) ஆகியோர் வந்த வேகத்தில் வெளியேறினர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி மீளுமா என சந்தேகம் எழுந்த நிலையில் நட்சத்திர நாயகன் கிறிஸ் கெய்ல், நிகோலஸ் பூரன் ஜோடி நம்பிக்கை அளித்தனர்.

அசத்தல் வெற்றி

அசத்தல் வெற்றி

ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை வானில் பறக்கவிட்ட கிறிஸ் கெய்ல் 38 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் உட்பட 67 ரன்கள் குவித்தார். பூரன் 27 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்தார். அடுத்து பிராவோ, ரஸல், ஆகியோர் தல 7 ரன்கள் அடித்தனர். இதனால், வெஸ்ட் இண்டீஸ் அணி 14.5 ஓவர்களில் 142/4 ரன்கள் சேர்த்து அபார வெற்றிபெற்றது. மேலும் 5 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரை 3 -0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

Story first published: Tuesday, July 13, 2021, 11:00 [IST]
Other articles published on Jul 13, 2021
English summary
Gayle fire Show helps West Indies to thrash Australia once again, Seal the t20 series 3-0
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X