For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இப்போ ரிடையர் ஆக மாட்டேன்… தோசையை திருப்பி போட்ட சிக்சர் மன்னன்..!! ரசிகர்கள் ஷாக்

Recommended Video

ஒய்வு முடிவை மாற்றிக்கொண்ட கிறிஸ் கெயில்

மான்செஸ்டர்: உலக கோப்பைக்கு பிறகும் தாம் தொடர்ந்து ஆட இருப்பதாக வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் கிறிஸ் கெயில் அறிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் மூத்த வீரர் கிறிஸ் கெயில், யூனிவர்சல் பாஸ் என்று அழைக்கப் படுபவர். உலக கோப்பை தொடரில் கடைசி கட்டத்தில் அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்ட அவர், இந்த தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.

நாளை முக்கிய ஆட்டத்தில் இந்தியாவை, வெஸ்ட் இண்டீஸ் மோதுகிறது. இந் நிலையில், கிறிஸ் கெயில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: இந்த உலக கோப்பை தொடர் எனது கிரிக்கெட் வாழ்க்கையின் முடிவல்ல.

ஒரு தொடர் இருக்கிறது

ஒரு தொடர் இருக்கிறது

இன்னும் சில ஆட்டங்கள் நான் விளையாட வேண்டியுள்ளது. அதாவது இன்னும் ஒரு தொடர் உள்ளது. என்ன நடக்கும் என்று யாருக்கு தெரியும். உலக கோப்பைக்கு பிறகு இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் ஆட்டத்தில் விளையாடலாம்.

இந்திய தொடர்

இந்திய தொடர்

அதன் பிறகு, இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் நிச்சயம் விளையாடுவேன். டி20 ஆட்டங்களில் இனிமேல் நிச்சயமாக விளையாட மாட்டேன். உலக கோப்பை தொடருக்கு பிறகு இதுதான் எனது திட்டம் என்றார்.

இந்தியாவின் பயணம்

இந்தியாவின் பயணம்

உலக கோப்பைக்கு பின்னர், இந்தியா வெஸ்ட் இண்டீஸ் செல்கிறது. ஆகஸ்ட் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் முதல் இரு டி20 ஆட்டங்கள் நடைபெறுகிறது. 3-வது டி20 ஆட்டம் கயானாவில் நடைபெறுகிறது. அதன்பின்னர், 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் ஆகஸ்ட் 8ம் தேதி தொடங்குகிறது. அதனை தொடர்ந்து டெஸ்ட் ஆட்டங்கள் நடைபெறுகிறது.

முதல் வீரர் கெயில்

முதல் வீரர் கெயில்

கிறிஸ் கெயில் 103 டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடி, 7215 ரன்கள் எடுத்துள்ளார். பேட்டிங் சராசரி 42.19. 294 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 10,345 ரன்கள் குவித்திருக்கிறார். டி 20யில் 58 ஆட்டங்களில் விளையாடி 1627 ரன்கள் எடுத்துள்ளார். இவர் டெஸ்ட் ஆட்டங்களில் இரண்டு முறை முச்சதமும், ஒரு நாள் தொடரில் ஒரு இரட்டை சதம் அடித்துள்ளார். டி20 ஆட்டத்தில் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமை இவரிடம் தான் உள்ளது.

Story first published: Wednesday, June 26, 2019, 21:37 [IST]
Other articles published on Jun 26, 2019
English summary
Gayle postpone his retirement after this world cup series.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X