For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"சின்னச்சாமி"யை கலக்கிய "ஜித்து ஜில்லாடி" கெய்ல்!

பெங்களூரு: பெங்களூரு வெற்றி பெறாவிட்டாலும் கூட ஒட்டுமொத்த சின்னச்சாமி ஸ்டேடியத்தையும் அதிர வைத்து விட்டது நேற்று நடந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி.

ஹைதராபாத்தின் பேட்டிங்கின்போது வார்னர் பிரித்து மேய்ந்தார். யுவராஜ் சிலிர்க்க வைத்தார். கட்டிங் கதற வைத்தார்.

அடுத்து வந்த பெங்களூரு சேஸிங்கின்போது ஒட்டுமொத்த மைதானமும் ஆர்ப்பரித்து அலறியது. காரணம், நீண்ட இடைவெளிக்குப் பிறகு முழு வீச்சுடன் வெளுத்து வாங்கிய கெய்ல் புயல்.

நேற்றைய இறுதிப் போட்டியில் அசத்திய சில வீரர்கள் குறித்த ஒரு பார்வை...

கெய்ல் புயல்

கெய்ல் புயல்

பெங்களூரு அணியின் சேஸிங்கில் பட்டையைக் கிளப்பியவர் கெய்ல்தான். என்னா அடி... என்னா அடி என்று ரசிகர்களை துள்ள வைத்து விட்டார்.

அடிச்சா சிக்ஸரு.. அடிக்காட்டி பவுண்டரி

அடிச்சா சிக்ஸரு.. அடிக்காட்டி பவுண்டரி

கெய்ல் தூக்கி அடிச்சா சிக்ஸர்.. சுமாரா அடிச்சா பவுண்டரி என்ற ரேஞ்சுக்கு நேற்று அவரது ஆட்டம் அமைந்தது. அவர் அடித்த அடியைப் பார்த்தால் இவரே 200 ரன்களைத் தாண்டிப் போய் அணியை வெற்றி பெற வைத்து விடுவார் என்றுதான் அனைவரும் நம்பினர்.

பாவம் பரீந்தர் ஸ்ரன்

பாவம் பரீந்தர் ஸ்ரன்

ஆட்டத்தின் நான்காவது ஓவரை வீசியவர் பரீந்தர் ஸ்ரன். இவரது பந்து வீச்சை நையப்புடைத்து விட்டார் கெய்ல். 2 சிக்ஸர்களையும், ஒரு பவுண்டரியையும் விளாசி ஸ்ரனை நொந்து போக வைத்து விட்டார்.

கட்டிங்குக்கும் ஒரு அடி

கட்டிங்குக்கும் ஒரு அடி

அதேபோல 5வது ஓவரில் கட்டிங் வீசி பந்தில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி விளாசினார். பவர் பிளேயில் கெய்லும், கோஹ்லியும் சேர்ந்து விக்கெட் இழப்பின்றி 59 ரன்களைக் குவித்தனர்.

25 பந்துகளில் அரை சதம்

25 பந்துகளில் அரை சதம்

25 பந்துகளைச் சந்தித்த கெய்ல் 50 ரன்களைக் குவித்தார். ஒரு சிக்ஸர் அடித்து தனது அரை சதத்தைப் பூர்த்தி செய்தார் கெய்ல். கட்டிங்கும், ஹென்டிரிக்ஸும் தொடர்ந்து பந்து வீச்சில் சொதப்பியது கெய்லுக்கு வசதியாகப் போய் விட்டது.

கெய்ல் புயலைக் கட் செய்த கட்டிங்

கெய்ல் புயலைக் கட் செய்த கட்டிங்

அணியின் ஸ்கோர் 9 ஓவர்களிலேயே 100ஐத் தொட்டபோது கெய்லும் சதத்தை நோக்கி வேகமாக ஓடிக் கொண்டிருந்தார். 10 ஓவர்கள் முடிவில் கெய்ல் 74 ரன்களில் இருந்தார். இந்த நிலையில்தான் கெய்லின் ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார் கட்டிங். அவர் போட்ட பந்தை தூக்கி அடித்தார் கெய்ல். அது பிபுல் சர்மா கையில் போய்த் தஞ்சமடைந்தது. 38 பந்துகளில் கெய்ல் 76 ரன்களைக் குவித்திருந்தார்.

விராத் கோஹ்லியின் 54

விராத் கோஹ்லியின் 54

கெய்ல் ஓய்ந்த நிலையில் கோஹ்லியின் அதிரடி தொடர்ந்து. அதிரடியாக ஆடி வந்த அவர் 35 பந்துகளில் 54 ரன்களைக் குவித்து அணியை ஸ்டெடியாக கொண்டு போய்க் கொண்டிருந்தார்.

ஏமாற்றிய ஸ்ரன் பந்து வீச்சு

ஏமாற்றிய ஸ்ரன் பந்து வீச்சு

இந்த நிலையில்தான் ஸ்ரன் வீசிய பந்து கோஹ்லியை அழகாக ஏமாற்றி பைல்ஸைத் தட்டிச் சென்று அவரை அவுட்டாக்கியது. கோஹ்லி பெருத்த ஏமாற்றத்துக்குள்ளானார். மைதானமோ அதிர்ச்சியில் உறைந்தது.

மீள முடியாத அதிர்ச்சி

மீள முடியாத அதிர்ச்சி

அதன் பின்னர் பெங்களூர் அணி கடைசி வரை மீள முடியவில்லை. அனுபவம் வாய்ந்த வீரர்கள் அடுத்தடுத்துப் போன நிலையில் வாட்சன் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவராலும் முடியவில்லை. கடைசிக் கட்டத்தில் பேபி சற்று அதிரடியாக ஆடத் தவறியதால் நம்பிக்கை மேலும் பலவீனமானது.

அடித்து ஆட முயன்ற ஜோர்டான்

அடித்து ஆட முயன்ற ஜோர்டான்

கிறிஸ் ஜோர்டான் கடைசி நேரத்தில் அடித்து ஆட முயன்றார். அவர் அல்லது பேபி சற்று தைரியமாக அடித்து ஆடியிருந்தால் நிச்சயம் பெங்களூருக்கு சாதனை படைக்க வாய்ப்பு கிடைத்திருக்கும்.

Story first published: Monday, May 30, 2016, 12:05 [IST]
Other articles published on May 30, 2016
English summary
Chris Gayle was hitting like a thunder in the Chinnaswamy stadium but his batting storm was pacified by the brilliant bowling of SRH.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X