For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல்-ஐ விட்டு போகும் போது கில்கிறிஸ்ட் செய்த காரியம்.. மறக்க முடியாத அவமானம்.. ஹர்பஜன் புலம்பல்!

மும்பை : ஐபிஎல் தொடரில் தன் கடைசி போட்டியில், கடைசி நிமிடங்களில் ஹர்பஜன் சிங் மறக்க முடியாத ஒரு காரியத்தை செய்தார் ஆடம் கில்கிறிஸ்ட்.

Recommended Video

ஐபிஎல்-ஐ விட்டு போகும் போது கில்கிறிஸ்ட் செய்த காரியம்

கில்கிறிஸ்ட் வீசிய முதல் பந்தில் ஹர்பஜன் சிங் ஆட்டமிழந்தார். கில்கிறிஸ்ட் ஐபிஎல் தொடரில் வீசிய முதலும், கடைசியுமான பந்து அதுதான்.

அது மட்டுமல்ல, கில்கிறிஸ்ட் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஒருமுறை கூட பந்து வீசியதில்லை. உள்ளூர் போட்டிகளில் மொத்தமாக 12 பந்துகளே வீசி உள்ளார்.

இஞ்சி இடுப்பழகா.. செம டிக்டாக்.. தமிழ்நாட்டையும் விட்டு வைக்காத டேவிட் வார்னர் குடும்பம்!இஞ்சி இடுப்பழகா.. செம டிக்டாக்.. தமிழ்நாட்டையும் விட்டு வைக்காத டேவிட் வார்னர் குடும்பம்!

அவமானம் அளிக்கும் தருணம்

அவமானம் அளிக்கும் தருணம்

சுத்தமாக பந்து வீசவே தெரியாத ஆடம் கில்கிறிஸ்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தது போன்ற ஒரு அவமானம் அளிக்கும் தருணம் வேறு இருக்கவே முடியாது எனக் கூறி சமீபத்தில் ஒரு பேட்டியில் புலம்பி இருக்கிறார் ஹர்பஜன் சிங்.

ஹர்பஜன் சிங் - கில்கிறிஸ்ட் விக்கெட்

ஹர்பஜன் சிங் - கில்கிறிஸ்ட் விக்கெட்

ஹர்பஜன் சிங் பல முறை ஆடம் கில்கிறிஸ்ட் விக்கெட்டை சர்வதேச போட்டிகளில் வீழ்த்தி உள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கே ஹர்பஜன் சிங் சிம்ம சொப்பனமாக விளங்கினார். அந்த அணியுடன் ஹர்பஜனுக்கு பல சர்ச்சைகளும் உண்டு.

ஹாட்ரிக் விக்கெட் சம்பவம்

ஹாட்ரிக் விக்கெட் சம்பவம்

டெஸ்ட் போட்டிகளில் 11 முறை கில்கிறிஸ்ட் விக்கெட்டை வீழ்த்தி உள்ள ஹர்பஜன் சிங், ஒரு முறை அவரை ஹாட்ரிக் விக்கெட்டில் ஒருவராகவும் வீழ்த்தி உள்ளார். அந்த எல்பிடபுள்யூ விக்கெட் அவுட் இல்லை என ரீப்ளேவில் தெரிந்ததாக கில்கிறிஸ்ட் இன்று வரை புலம்பி வருகிறார்.

ஐபிஎல் சம்பவம்

ஐபிஎல் சம்பவம்

அதற்கு பழி தீர்க்கும் வகையில் கில்கிறிஸ்ட்டுக்கு ஒரு வாய்ப்பு ஐபிஎல்-இல் கிடைத்தது. ஐபிஎல் துவங்கியது முதல் ஆடி வந்த கில்கிறிஸ்ட் 2013இல் தன் கடைசி ஐபிஎல் தொடரில் ஆடினார். அப்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்தார்.

கில்கிறிஸ்டின் கடைசி போட்டி

கில்கிறிஸ்டின் கடைசி போட்டி

தன் கடைசி போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக பங்கேற்றார். முதலில் ஆடிய பஞ்சாப் அணி 183 ரன்கள் குவித்தது. கில்கிறிஸ்ட் தன் கடைசி ஐபிஎல் போட்டியில் வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுத்தார். அசார் மஹ்மூத் 80, ஷான் மார்ஷ் 63 ரன்கள் எடுத்து இருந்தனர்.

தோல்வியின் விளிம்பில் மும்பை

தோல்வியின் விளிம்பில் மும்பை

அடுத்து ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி வரிசையாக விக்கெட்களை இழந்தது. கடைசி ஓவரில் 51 ரன்கள் தேவை என்ற நிலை. எப்படியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் வெற்றி பெற்று விட்டது. அந்த நிலையில், கில்கிறிஸ்ட் அதிரடி முடிவு எடுத்து பந்துவீச்சாளர் பிரவீன் குமாரை விக்கெட் கீப்பிங் செய்ய வைத்து விட்டு, பவுலிங் போட வந்தார்.

தரமான சம்பவம்

தரமான சம்பவம்

அந்த நேரம் ஹர்பஜன் சிங் தான் ஸ்ட்ரைக் பேட்ஸ்மேன். எப்படியும் பந்தை சிக்ஸ் அடித்து விடலாம் என தப்புக் கணக்கு போட்டார் ஹர்பஜன் சிங். கில்கிறிஸ்ட் பந்து வீச ஹர்பஜன் சிங் தூக்கி அடித்தார். பவுண்டரி அருகே இருந்த பீல்டர் கேட்ச் பிடித்தார்.

கில்கிறிஸ்ட் கொண்டாட்டம்

கில்கிறிஸ்ட் கொண்டாட்டம்

தன் முதலும், கடைசியுமான பந்தில் விக்கெட் எடுத்தார் கில்கிறிஸ்ட். அதுவும் தன்னை பல முறை வீழ்த்திய ஹர்பஜன் சிங்கின் விக்கெட் என்பதால் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தார் கில்கிறிஸ்ட். அவரது நீண்ட கிரிக்கெட் வாழ்வின் கடைசி தருணத்தில் தன் முதல் விக்கெட்டை வீழ்த்தினார்.

ஹர்பஜன் சிங் புலம்பல்

ஹர்பஜன் சிங் புலம்பல்

அதை நினைத்து சமீபத்தில் ஒரு பேட்டியில் புலம்பி உள்ளார் ஹர்பஜன் சிங். அந்த மைதானத்தின் அளவை வைத்து எல்லா பந்தையும் சிக்ஸ் அடித்து விடலாம் என நினைத்தேன். ஆனால், பவுண்டரி அருகே கேட்ச் பிடித்து விட்டார்கள். அப்படி ஒரு அவமானமான தருணம் இருக்கவே முடியாது என்றார்

கங்னம் டான்ஸ்

கங்னம் டான்ஸ்

வலைப் பயிற்சியில் கூட பந்து வீச முடியாத ஒருவரிடம் வீழ்ந்தேன். அவரை நான் மகிழ்ச்சியில் ஆழ்த்தினேன். அவரை நான் பல முறை டெஸ்ட் கிரிக்கெட்டில் வீழ்த்தி உள்ளேன் என்றார் ஹர்பஜன் சிங். அப்போது கில்கிறிஸ்ட் கங்னம் டான்ஸ் ஆடி விக்கெட்டை கொண்டாடியது மறக்க முடியாததாகும்.

Story first published: Saturday, May 9, 2020, 20:26 [IST]
Other articles published on May 9, 2020
English summary
Adam Gilchrist took Harbhajan Singh wicket in his first and last ball of IPL. Harbhajan Singh terms it as an embarrassing moment.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X