அவுட்டா ? நாட் அவுட்டா? கோபத்தில் கத்திய மேக்ஸ்வெல்.. தவறு செய்த கார்த்திக்.. முத்தம் கொடுத்த ரோகித்

மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் மேக்ஸ்வெல் ரன் அவுட்டான விதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

IND vs AUS 3rd T20 போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்றுள்ள நிலையில், கடைசி போட்டியை வெல்லும் அணி தொடரை வென்றுவிடும்.

இந்த நிலையில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசியது. இந்திய அணியில் ரிஷப் பண்ட்க்கு பதிலாக புவனேஸ்வர் குமார் சேர்க்கப்பட்டார்.

டி20 உலககோப்பையில் இந்தியாவுக்கு பின்னடைவு.. முக்கிய ஆல்ரவுண்டருக்கு காயம்.. உறுதி செய்த ரோகித்டி20 உலககோப்பையில் இந்தியாவுக்கு பின்னடைவு.. முக்கிய ஆல்ரவுண்டருக்கு காயம்.. உறுதி செய்த ரோகித்

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

இதனையடுத்து, களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்க வீரர் கேமிரான் கிரின் கேமிரான் கிரின் 19 பந்துகளில் அரைசதம் அடிக்க, ஆஸ்திரேலிய அணி 3.5வது ஓவரில் 50 ரன்களை கடந்தது. ஆரோன் பிஞ்ச் 7 ரன்களில் வெளியேற, கிரின் 52 ரன்களை வெளியேறினார். இதனையடுத்து பவர்பிளே முடிவில் ஆஸ்திரேலிய அணி 66 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்தது. இந்த நிலையில், அதிரடி வீரர் மேக்ஸ்வெல் களத்துக்கு வந்தார்.

திருப்புமுனை

திருப்புமுனை

ரன் குவிப்புக்கு சாதகமான மைதானம் என்பதால, மேக்ஸ்வெல் விக்கெட்டை விரைவில் வீழ்த்த வேண்டும் என்ற நெருக்கடி இந்திய அணிக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் ஆட்டத்தின் 7.4வது ஓவரில் மேக்ஸ்வெல் ரன் அவுட் ஆனார்.2வது ரன் அவர் ஓட முயற்சித்த போது அக்சர் பட்டேல் எறிந்த பந்து நேரடியாக ஸ்டம்பை பட்டது. இதனையடுத்து இது அவுட்டா, இல்லை நாட் அவுட்டா என்று மூன்றாம் நடுவர் மறு ஆய்வுக்கு அனுப்பபட்டது.

ரன் அவுட்

ரன் அவுட்

அப்போது , பந்து ஸ்டம்பை அடிக்கும் முன்பே தினேஷ் கார்த்திக்கின் கை ஸ்டம்பில் பட்டது. இதனால் முதலில் நாட் அவுட் என கருதப்பட்டது. ஆனால், தினேஷ் கார்த்திக் கை ஸ்டம்பில் பட்டும், ஒரு பைல்ஸ் மட்டும் தான் நகர்ந்தது. மறு பைல்ஸ் பந்து பட்டு தான் நகர்ந்தது. இதனால் மூன்றாம் நடுவர் இதனை அவுட் என அறிவித்தார். இதனால் கோபமான மேக்ஸ்வெல் கடுமையாக கத்தியவாறு மைதானத்தை விட்டு வெளியேறினார்.

ரோகித் கொடுத்த முத்தம்

ரோகித் கொடுத்த முத்தம்

இதனை தொடர்ந்து தினேஷ் கார்த்திக்கிற்கு கேப்டன் ரோகித் சர்மா தலையில் வந்து முத்தம் கொடுத்தார். ஸ்டம்பை கையால் தட்டிவிட்டாலும், ஒரு பைல்ஸ் மட்டும் நகர்ந்ததால் ரோகித் தினேஷ் கார்த்திக்கை கலாய்த்தார். ஐசிசி விதிப்படி, ஒரு பைல்ஸ் நகராமல் இருந்த நிலையில், அது பந்து பட்டு நகர்ந்ததால், இது அவுட் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தினேஷ் கார்த்திக் பந்து படும் போதே கையை வைத்து நகர்த்தியால் இது அவுட் கிடையாது என்று கூறி ஆஸ்திரேலிய ரசிகர்கள் கோபடைந்தனர். மகளிர் கிரிக்கெட்டில் தீப்தி சர்மா செய்த ரன் அவுட்டும், தற்போது மேக்ஸ்வெல் ஆன ரன் அவுட்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Glen Maxwell runout created controversy in 3rd t20 vs India அவுட்டா ? நாட் அவுட்டா? கோபத்தில் கத்திய மேக்ஸ்வெல்.. தவறு செய்த கார்த்திக்.. முத்தம் கொடுத்த ரோகித்
Story first published: Sunday, September 25, 2022, 20:36 [IST]
Other articles published on Sep 25, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X