For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவமானங்களை தாண்டி சாதித்து காட்டிய ஆல்-ரவுண்டர்... நம்பிக்கையை பொய்யாக்காத ஆர்சிபி வீரர்

சென்னை : ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகளுக்கிடையில் சென்னையில் ஐபிஎல் 2021 தொடரின் 10வது போட்டி நடைபெற்று வருகிறது.

இதில் முதலில் களமிறங்கிய ஆர்சிபி 205 ரன்களை எதிரணிக்கு இலக்காக அளித்தனர். மேக்ஸ்வெல் மற்றும் டீ வில்லியர்ஸ் இன்றைய போட்டியில் ஹீரோக்களாக செயல்பட்டுள்ளனர்.

இன்றைய போட்டியை அடுத்து இவர்கள் ஐபிஎல்லின் இந்த சீசனில் மேலும் ஒரு சிறப்பை எட்டியுள்ளனர்.

மாக்ஸ்வெல், டீ வில்லியர்ஸ் சிறப்பு

மாக்ஸ்வெல், டீ வில்லியர்ஸ் சிறப்பு

ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய போட்டியில் ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகள் மோதிவரும் நிலையில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 204 ரன்களை அடித்தது. இன்றைய போட்டியில் அந்த அணியின் க்ளென் மாக்ஸ்வெல் மற்றும் ஏபி டீ வில்லியர்ஸ் சிறப்பான ஆட்டத்தை அளித்துள்ளனர்.

படிக்கல் நல்ல துவக்கம்

படிக்கல் நல்ல துவக்கம்

ஆர்சிபி கேப்டன் விராட் கோலி துவக்க வீரராக களமிறங்கி விளையாடி 5 ரன்களை மட்டுமே அடித்து பெவிலியனுக்கு திரும்பினார். அணியின் பட்டிதாரும் 1 ரன்னில் வெளியேறிய நிலையில் படிக்கல் சிறப்பான துவக்கத்தை அளித்தார். 28 பந்துகளில் அவர் 25 ரன்களை அடித்திருந்தார்.

ஸ்கோர் உயர்வுக்கு காரணம்

ஸ்கோர் உயர்வுக்கு காரணம்

ஆனால் இன்றைய போட்டியில் க்ளென் மாக்ஸ்வெல் மற்றும் ஏபி டீ வில்லியர்ஸ் ஆகிய இருவரும் ஹீரோக்களாக செயல்பட்டு முறையே முறையே 78 மற்றும் 76 ரன்களை குவித்தனர். இதையடுத்து ஒரு கட்டத்தில் திணறலான ஆட்டத்தை வெளிப்படுத்திய அந்த அணியின் ஸ்கோர் மளமளவென உணர்ந்தது.

முதலிடத்தில் மேக்ஸ்வெல்

முதலிடத்தில் மேக்ஸ்வெல்

இவர்களின் இன்றைய ஸ்கோரையடுத்து க்ளென் மாக்ஸ்வெல் ஐபிஎல்லின் ஆரஞ்சு கோப்பைக்கான ஓட்டத்தில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். அடுத்தடுத்து போட்டிகளில் அவர் இரண்டு அரைசதம் அடித்துள்ள நிலையில் மொத்தத்தில் 176 ரன்களை குவித்துள்ளார். இதன் சராசரி 58.66 ஆகும். ஸ்டிரைக் ரேட் 149.15.

13 போட்டிகளில் 108 ரன்கள்

13 போட்டிகளில் 108 ரன்கள்

கடந்த சீசனில் பஞ்சாப் அணிக்காக 13 போட்டிகளில் விளையாடி 108 ரன்களை மட்டுமே மொத்தத்தில் எடுத்திருந்தார் மேக்ஸ்வெல். இதையடுத்து அவரை இந்த சீசனின் ஏலத்திற்காக பஞ்சாப் அணி விடுவித்தது. இதையடுத்து அவர்மீது நம்பிக்கை வைத்து ஆர்சிபி 14.25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.

நிரூபித்து காட்டிய மேக்ஸ்வெல்

நிரூபித்து காட்டிய மேக்ஸ்வெல்

இவ்வளவு தொகையை அவர்மீது வைத்தது குறித்து அந்த அணி விமர்சனங்களை சந்தித்தது. அதன் நம்பிக்கையை பொய்யாக்காமல் தற்போது மேக்ஸ்வெல் விளையாடி வருகிறார். தன்மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் மற்றும் அவமானங்களை கவனத்தில் கொள்ளாமல் தன்னை நிரூபித்துள்ளார்.

சிறப்பான டீ வில்லியர்ஸ்

சிறப்பான டீ வில்லியர்ஸ்

இதேபோல இன்றைய ஆட்டத்தின் மற்றொரு ஹீரோ ஏபி டீ வில்லியர்சும் இதுவரை 3 போட்டிகளில் விளையாடி 115 ரன்களை எடுத்துள்ளார். இதன் சராசரி 57.50 மற்றும் ஸ்டிரைக் ரேட் 185.48. இதையடுத்து தற்போது ஆரஞ்சு கேப்பிற்கான ஓட்டத்தில் இவர் நிதீஷ் ராணா மற்றும் சஞ்சு சாம்சனை அடுத்து 4வது இடத்தில் உள்ளார்.

Story first published: Sunday, April 18, 2021, 19:03 [IST]
Other articles published on Apr 18, 2021
English summary
IPL 2020's biggest flop Glenn Maxwell's Big Comeback -Now Orange cap leader
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X