For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

க்ளென் பிலிப்ஸ் அதிரடி சதம்... கான்வேயுடன் சூப்பர் பார்ட்னர்ஷிப்.. தொடரை வென்ற நியூசிலாந்து அணி...

வெல்லிங்டன் : நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளின் 3 போட்டிகளை கொண்ட டி20 தொடரை நியூசிலாந்து அணி 2க்கு 0 என்ற கணக்கில் வென்றுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணி நியூசிலாந்தில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளும் 3 போட்டிகளை கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றன.

இந்த தொடரின் முதல் 2 போட்டிகள் முடிவடைந்த நிலையில், முதல் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. இதனிடையே, 2வது போட்டியில் 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டுள்ளது.

தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து

தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 3 போட்டிகளை கொண்ட சர்வதேச டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் 2 போட்டிகள் நிறைவடைந்த நிலையில் 2க்கு 0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

முதல் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்ற நிலையில், மவுண்ட் மாங்கானுய்யில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 238 ரன்களை குவித்தது. தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி வீரர்களால் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 166 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதையடுத்து 72 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணி தோல்வியுற்றது.

க்ளென் பிலிப்ஸ் அதிரடி

க்ளென் பிலிப்ஸ் அதிரடி

இந்தப் போட்டியில் நியூசிலாந்தின் க்ளென் பிலிப்ஸ் 51 பந்துகளில் 108 ரன்களை அடித்து அதிரடி கிளப்பினார். 8 சிக்ஸ்கள் மற்றும் 10 பவுண்டரிகள் என அவரது அதிரடி ஆட்டத்தால் மைதானமே ஆட்டம் கண்டது. அவருக்கு ஈடுகொடுத்து ஆடிய தேவோன் கான்வே 37 பந்துகளில் 65 ரன்களை குவித்தார்.

பட்டையை கிளப்பிய பிலிப்ஸ்

பட்டையை கிளப்பிய பிலிப்ஸ்

கடந்த 2018ல் இதே மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நியூசிலாந்து வீரர் கோலின் மன்ரோ 47 பந்துகளில் சதம் அடித்தார். அதுவே டி20 போட்டிகளில் நியூசிலாந்தின் அதிவேக சதமாக உள்ளது. இந்நிலையில் பிலிப்சின் இந்த சாதனை மன்ரோவிற்கு இணையாக கருதப்படுகிறது.

அடுத்தடுத்த 2 போட்டிகள் வெற்றி

அடுத்தடுத்த 2 போட்டிகள் வெற்றி

இந்நிலையில் 3 போட்டிகளை கொண்ட இந்த தொடரில் அடுத்தடுத்த 2 போட்டிகளின் வெற்றி மூலம் இந்த தொடரை நியூசிலாந்து அணி வெற்றி கொண்டுள்ளது. 3வது மற்றும் இறுதிப்போட்டி நாளை நடைபெறவுள்ளது. இதையடுத்து இரு அணிகளும் மோதும் 2 டெஸ்ட் போட்டி தொடரும் நடைபெறவுள்ளது.

Story first published: Sunday, November 29, 2020, 14:23 [IST]
Other articles published on Nov 29, 2020
English summary
Phillips added 184 for the third wicket with Devon Conway, who made an unbeaten 65 off 37 deliveries
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X