For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் ஏலத்தில் தேர்வாகாத பின்ச்... எதிர்பார்த்ததுதான்... பின்ச் ஆதங்கம்

டெல்லி : ஐபிஎல் 2021 தொடருக்கான ஏலம் கடந்த 18ம் தேதி சென்னையில் நடைபெற்று முடிந்துள்ளது.

இதில் ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பின்ச் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

இங்கிலாந்து ஜெயிக்க இந்த 5 விஷயங்களை செஞ்சே ஆகனும்..குழப்பத்தில் ரூட்,டிப்ஸ் கொடுத்த மைக்கேல் வாகன்இங்கிலாந்து ஜெயிக்க இந்த 5 விஷயங்களை செஞ்சே ஆகனும்..குழப்பத்தில் ரூட்,டிப்ஸ் கொடுத்த மைக்கேல் வாகன்

இந்நிலையில் இது ஏற்கனவே எதிர்பார்த்த ஒன்றுதான் என்று ஆரோன் பின்ச் தெரிவித்துள்ளார்.

ஆர்சிபியில் ஆரோன் பின்ச்

ஆர்சிபியில் ஆரோன் பின்ச்

கடந்த ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடினார் ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பின்ச். 12 போட்டிகளில் விளையாடி 268 ரன்களை எடுத்திருந்தார். இந்நிலையில் ஐபிஎல் ஏலத்தையொட்டி அவர் அந்த அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

தேர்வாகாத பின்ச்

தேர்வாகாத பின்ச்

இந்நிலையில் கடந்த 18ம் தேதி நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில ஆரோன் பின்ச் ஏலத்தில் விடப்பட்ட நிலையில், அவரை தேர்ந்தெடுக்க எந்த அணியும் ஆர்வம் காட்டவில்லை. அவர் ஏலத்தில் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் இது ஒன்றும் எதிர்பார்க்கப்படாத நிகழ்வு இல்லை என்று ஆரோன் பின்ச் தற்போது தெரிவித்துள்ளார்.

எதிர்பார்த்த பின்ச்

எதிர்பார்த்த பின்ச்

கிரிக்கெட். காமிற்காக பேசிய ஆரோன் பின்ச், ஐபிஎல் போன்ற சிறப்பான தொடரில் பங்கேற்று விளையாடுவது சிறப்பானது என்றும் ஆனால் தான் தேர்வாகாதது குறித்து தான் முன்பே எதிர்பார்த்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுவது சிறப்பானது என்றாலும் சில நேரம் வீட்டிலேயே இருப்பது மோசமானது இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

புதிய முயற்சியில் பின்ச்

புதிய முயற்சியில் பின்ச்

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் வரும் திங்கட்கிழமை முதல் 5 போட்டிகளை கொண்ட டி20 தொடர் துவங்கவுள்ளது. முதல் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடபெறவுள்ளது. இந்நிலையில் இந்த போட்டிக்காக சில தொழில்நுட்ப முயற்சிகளை தான் பயிற்சி செய்து வருவதாகவும் இதன்மூலம் தன்னுடைய பேட்டிங் மீண்டும் பேசப்படும் என்றும் பின்ச் மேலும் கூறினார்.

Story first published: Sunday, February 21, 2021, 15:50 [IST]
Other articles published on Feb 21, 2021
English summary
Finch said that he has been working on a few technical things
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X