For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிங்கம் களத்துல இறங்கிடுச்சு... வலை பயிற்சியை துவங்கிடுச்சு... அடுத்தது ஆக்ஷன்தான்!

டெல்லி : கட்டைவிரலில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட ரவீந்திர ஜடேஜா ஆறு வாரங்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர்.

இந்நிலையில் ஏறக்குறைய 2 மாதங்களுக்கு பிறகு அவர் மீண்டும் தனது வலைப்பயிற்சிகளை துவக்கியுள்ளார்.

வெயில் தாங்கமுடியல..5 கி வரை எடை குறைந்தேன்...லீச் டாய்லெட்டிலேதான் இருந்தார்...பென் ஸ்டோக்ஸ் வேதனை வெயில் தாங்கமுடியல..5 கி வரை எடை குறைந்தேன்...லீச் டாய்லெட்டிலேதான் இருந்தார்...பென் ஸ்டோக்ஸ் வேதனை

இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் சிறப்பாக உணர்வதாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

காயம்பட்ட ஜடேஜா

காயம்பட்ட ஜடேஜா

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின்போது ஆல்-ரவுண்டர் ரவி ஜடேஜாவிற்கு இடது கட்டைவிரலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆறு வாரங்களுக்கு ஓய்வு எடுக்க மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டது.

மீண்டும் பயிற்சிகள்

மீண்டும் பயிற்சிகள்

இந்நிலையில் 2 மாதங்களுக்கு பிறகு தற்போது ஜடேஜா கடந்த வாரத்தில் தனது பயிற்சிகளை மீண்டும் துவக்கி வீடியோ வெளியிட்டார். இதனிடையே, இன்றைய தினம் அவர் தனது நெட் பயிற்சிகளை துவக்கியுள்ளார். பேட்டிங் மற்றும் பௌலிங்கில் அவர் தனது பயிற்சிகளை துவக்கியுள்ளார்.

அதிக உற்சாகம்

இந்த பயிற்சிகளின்போது அவரிடம் அதிகமான உற்சாகம் காணப்பட்டது. இரண்டு மாதங்களுக்குபிறகு பயிற்சி செய்வது அவரை மகிழ்ச்சிக்குரியவராக ஆக்கியுள்ளது. இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் மீண்டும் பந்தையும் பேட்டையும் பிடிப்பது மகிழ்ச்சியை அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அறுவை சிகிச்சை

அறுவை சிகிச்சை

கடந்த ஜனவரியில் ஆஸ்திரேலிய தொடரின்போது காயம் ஏற்பட்ட ஜடேஜாவிற்கு உடனடியாக கட்டை விரலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சையை அடுத்து தற்போது ஆக்ஷனில் இருந்து விலகியுள்ளதாகவும் மீண்டும் முழுமையாக அணியில் இடம்பெற்று ஆடுவேன் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

Story first published: Thursday, March 11, 2021, 18:18 [IST]
Other articles published on Mar 11, 2021
English summary
Holding Bat and Ball after two months, feeling good -Jadeja tweets
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X