பும்ராவுக்கு ஒன்றுமே இல்லை.. டி20 உலகக்கோப்பைக்கு கன்ஃபார்ம்.. பிசிசிஐ அதிகாரி சொன்ன முக்கிய தகவல்!

மும்பை: டி20 உலகக்கோப்பை தொடரில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடலாம் என பிசிசிஐ அதிகாரி முக்கிய தகவலை கொடுத்துள்ளார்.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 16ம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணியில் இருந்து ஜஸ்பிரித் பும்ரா விலகுவதாக தகவல் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜஸ்பிரித் பும்ராவுக்கு முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டிருப்பதாகவும், அவருக்கு ஸ்ட்ரஸ் ஃப்ராக்ச்சர் இருப்பதாகவும் விளக்கம் அளித்தனர். அதாவது ஸ்ட்ரஸ் ஃப்ராக்சர் என்றால் எந்தவித சிகிச்சையும் தேவை இருக்காது, ஆனால் குணமடைய 4 - 5 மாதங்கள் வரை ஆகும் என மருத்துவர்கள் கூறியிருந்தனர். இதனால் ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

தோனி எடுத்த புதிய அவதாரம்.. அதுவும் கபில் தேவ்வுடன் சேர்ந்து.. இணையத்தை கலக்கும் வீடியோ!! தோனி எடுத்த புதிய அவதாரம்.. அதுவும் கபில் தேவ்வுடன் சேர்ந்து.. இணையத்தை கலக்கும் வீடியோ!!

இந்நிலையில் அவர்களுக்கு நற்செய்தி ஒன்று கிடைத்துள்ளது. அதாவது ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஸ்கேன் செய்து பார்த்ததில் அவருக்கு எந்தவித முறிவும் ஏற்படவில்லை என முடிவுகள் வந்துள்ளன. பும்ராவுக்கு உள்ள முதுகுவலி 4 வாரங்களுக்குள் சரியாகிவிடும் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளதாக அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பும்ராவை டி20 உலகக்கோப்பை அணியில் இருந்து நீக்கும் முடிவு கைவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. அக்டோபர் 6ம் தேதியன்று இந்திய அணியுடன் அவரும் ஆஸ்திரேலியாவுக்கு சென்று ஓய்வில் இருக்கவுள்ளார். சில போட்டிகளை தவறவிடும் போதிலும், காலிறுதி, அரையிறுதி போன்ற கடைசிகட்ட போட்டிகளில் இந்தியாவுக்கு உதவலாம் எனக்கூறப்பட்டுள்ளது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Jasprit bumrah likely to travel australia with team India for t20 world cup 2022
Story first published: Friday, September 30, 2022, 20:27 [IST]
Other articles published on Sep 30, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X