For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

3 வருடங்களுக்கு முன்பு.. பற்ற வைத்த நெருப்பொன்று - விமர்சனங்களை தகர்த்தெறிவாரா கோலி?

மும்பை: கிரண் மோரே நெருப்பென்று பற்ற வைக்க, இப்போது அது தக தகவென்று எரிய ஆரம்பித்திருக்கிறது.

இந்திய கிரிக்கெட்டின் வெவ்வேறு வடிவங்களுக்கு, வெவ்வேறு கேப்டன்கள் விரைவில் நியமிக்கப்படலாம் என்று இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு முன்னாள் தலைவரும், முன்னாள் இந்திய விக்கெட் கீப்பருமான கிரண் மோரே கூறியுள்ளார்.

இவரது இந்த கருத்து ரசிகர்கள் மத்தியில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரு நாட்களாக கோலி ரசிகர்களின் சமூக தளங்களில் 'பொங்கல்' வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

 தனித்தனி கேப்டன்

தனித்தனி கேப்டன்

இதுகுறித்து கிரண் மோரே கூறுகையில், "இந்தியாவில் ஒவ்வொரு வடிவ கிரிக்கெட் அணிக்கும் ஒவ்வொரு கேப்டன் என்ற அணுகுமுறை எடுபடும். இந்திய அணியின் எதிர்காலம் குறித்து சீனியர் வீரர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது மிகவும் முக்கியமானது. விராட் கோலி, மூன்று வடிவ இந்திய அணிக்கும் கேப்டனாக இருப்பதோடு மட்டுமல்லாமல், அவர் சிறப்பாகவும் விளையாட வேண்டும்.

 கோலியே விட்டுக் கொடுப்பார்

கோலியே விட்டுக் கொடுப்பார்

அது அவ்வளவு எளிதானது அல்ல. எனினும், கேப்டனாகவும், தனி வீரராகவும் அவர் வெற்றிப் பெறுவதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், விராட் கோலி ஒரு நாள், 'இது போதும், ரோஹித் அணியை வழிநடத்தட்டும்' என்று சொல்லும் ஒரு காலம் வரும் என்று நான் நினைக்கிறேன்" என்று மோரே கூறியிருக்கிறார்.

 பணிச்சுமை காரணமா?

பணிச்சுமை காரணமா?

ஆஸ்திரேலியாவில் கடந்த டிசம்பர் - ஜனவரியில் நடந்த அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், இந்தியா வரலாற்றில் இல்லாத அளவுக்கு மோசமாக தோல்வி அடைந்து. வெறும் 36 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி சுருண்டது இந்திய அணி. அதன் பின் கோலி நாடு திரும்ப, ரஹானே கேப்டன் பொறுப்பேற்க, 2- 1 என்று டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்தியா. இந்த தோல்விக்கு பல கிரிக்கெட் வல்லுநர்கள் சொன்ன காரணம் கோலியின் அளவு கடந்த பிரஷர். மூன்று வடிவ கிரிக்கெட்டுக்கு கேப்டன், பெர்சனல் வாழ்க்கை, தனது தனிப்பட்ட பேட்டிங் ஃபெர்பாமன்ஸ் என்று கோலி மூன்றையும் பேலன்ஸ் செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது. பணிச் சுமைகளை பிரிக்கும் போது, கோலியால் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும் என்பதே பரவலான கருத்தாக உள்ளது.

 கணித்த கிரேம் ஸ்மித்

கணித்த கிரேம் ஸ்மித்

இந்நிலையில், தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித், கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களுக்கு முன்பே இதை துல்லியமாக கணித்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். கடந்த 2018ம் ஆண்டு, அவர் அளித்த பேட்டி ஒன்றில், "இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக விராட் கோலிக்கு பதிலாக ஏன் வேறொருவரை கேப்டனாக நியமித்து, கோலி மீதான பணிச்சுமையை ஏன் குறைக்கக் கூடாது?" என கேள்வி எழுப்பியிருக்கிறார். கிரண் மோரே கருத்துக்கு கோலி ரசிகர்கள் பலர் எதிர்க்கருத்து வைத்து வரும் நிலையில், முன்பே இதுகுறித்து ஸ்மித் பேசியது குறித்த செய்தி சமூக தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. எனினும், இதுபோன்ற அனைத்து பேச்சுக்களையும் தனது வெற்றியாலும், தனிப்பட்ட ஸ்கோர்களாலும் கோலி தகர்த்தெறிய வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Story first published: Friday, May 28, 2021, 21:06 [IST]
Other articles published on May 28, 2021
English summary
graeme smith about split captaincy in indian team - கோலி
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X