For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பேசாம கங்குலி கிட்ட அதைக் கொடுத்துடலாமே.. கிரீம் ஸ்மித் சூப்பர் ஐடியா!

ஜோகன்ஸ்பர்க் : ஐசிசி தலைவர் பதவியை பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி வகிக்க வேண்டும் என்று கிரிக்கெட் தென்னாப்பிக்காவின் இயக்குநர் கிரீம் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

Recommended Video

Graeme Smith supports Ganguly to become ICC Chairman

தற்போது ஐசிசி தலைவராக உள்ள ஷஷாங்க் மனோகரின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவடையவுள்ள நிலையில் அடுத்ததாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் கொலின் கிரேவ்ஸ் அந்த பதவியில் நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் கிரீம் ஸ்மித்தின் இந்த கருத்து மிகப்பெரிய ஸ்விஸ்ட்டாக கருதப்படுகிறது. க்ரீம் ஸ்மித்தின் இந்த கருத்தை கிரிக்கெட் தென்னாப்பிரிக்காவின சிஇஓவும் வரவேற்றுள்ளார்.

மற்றொரு பால்கனி... மற்றொரு வலிமை... கங்குலிக்கு கிடைத்த விமர்சனம்மற்றொரு பால்கனி... மற்றொரு வலிமை... கங்குலிக்கு கிடைத்த விமர்சனம்

ஷஷாங்க் பதவிக்காலம் நிறைவு

ஷஷாங்க் பதவிக்காலம் நிறைவு

ஐசிசி தலைவராக உள்ள ஷஷாங்க் மனோகரின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில், புதிய தலைவரை தேர்ந்தெடுகும் பணி முடுக்கிவிடப்பட உள்ளது. இந்த பதவிக்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் போர்டின் முன்னாள் தலைவர் கொலின் கிரேவ்ஸ் நியமிக்கபபடலாம் எறு கருதப்படுகிறது. இந்நிலையில் கிரீம் ஸ்மித் கங்குலி அந்த பதவிக்கு வரவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

நவீன விளையாட்டிற்கு சிறப்பு

நவீன விளையாட்டிற்கு சிறப்பு

கங்குலி போன்றவர் ஐசிசி தலைவராக நியமிக்கப்படுவது சிறப்பாக இருக்கும் என்று ஸ்மித் குறிப்பிட்டுள்ளார். அது கிரிக்கெட்டிற்கும் நவீன விளையாட்டுகளுக்கும் மிகவும் சிறப்பானதாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். நவீன கிரிக்கெட்டை கங்கு நன்கு புரிந்துள்ளதாகவும் அவரது தலைமையில் கிரிக்கெட் அடுத்த கட்டத்திற்கு நகரும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

சரியான அணுகுமுறை

சரியான அணுகுமுறை

சவுரவ் கங்குலியுடன் தான் நீண்ட நாட்கள் பழகியுள்ளதாகவும், கிரிக்கெட் போட்டிகளை சரியான முறையில் அணுகும் திறன் அவருக்கு உள்ளதாகவும் ஸ்மித் மேலும் தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலில் ஐசிசி தலைவர் பதவி மிக முக்கியமான அங்கத்தை வகிப்பதாகவும் இந்த சிறப்பான தருணத்தில் சிறப்பான பதவியை வகிக்க கங்குலி சிறப்பானவர் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இந்திய வேட்பாளருக்கு ஆதரவு

இந்திய வேட்பாளருக்கு ஆதரவு

இந்நிலையில் கிரீம் ஸ்மித்தின் இந்த கருத்துக்கு கிரிக்கெட் தென்னாப்பாக்காவின் சிஇஓ ஜாக்குவஸ் ஃபால் வரவேற்பு தெரிவித்துள்ளார். தான் கங்குலியுடன் அதிகளவிலான போட்டிகளை விளையாடியதில்லை என்று கூறியுள்ள அவர், ஆனால் இந்த நேரத்தில் இந்திய நபர் ஒருவரை தான் ஆதரிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

Story first published: Friday, May 22, 2020, 12:44 [IST]
Other articles published on May 22, 2020
English summary
CSA Director Graeme Smith expressed his support for BCCI president Sourav Ganguly become ICC Chairman
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X