சிறுபிள்ளைதனமாக விராட் கோலி நடந்துக்கொள்கிறார்... ஸ்டோக்ஸுடனான மோதல்... க்ரீம் ஸ்வான் விமர்சனம்

அகமதாபாத் : 4வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலிக்கும் பென் ஸ்டோக்ஸு-க்கும் இடையே நடத்த வாக்குவாதத்தில் கோலி மீது குறை கூறியுள்ளார் இங்கிலாந்து முன்னாள் வீரர்.

இந்தியா - இங்கிலாந்து மோதும் 4வது டெஸ்ட் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.

போட்டியின் போது இந்திய அணி கேப்டன் விராட் கோலி மற்றும் இங்கிலாந்து வீரர் ஸ்டோக்ஸுக்கும் இடையே மோதல் போக்கு நிலவியது.

மொத்தமே 6 ஓவர்கள்தான்..4வது டெஸ்டில் இருந்து விலகும் பும்ரா..ஒன்றை மட்டும் கற்றுக்கொண்டதாக கருத்து

இந்நிலையில் அவர்களின் வாக்குவாதம் குறித்து பேசியுள்ள இங்கிலாந்து அணியின் க்ரீம் ஸ்வான், விராட் கோலி மீதுதான் தவறு என தெரிவித்துள்ளார்.

இறுதி டெஸ்ட்

இறுதி டெஸ்ட்

இந்தியா -இங்கிலாந்து இடையிலான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 201 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், இந்தியா 24 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து ஆடி வருகிறது.

கோலி மோதல்

கோலி மோதல்

ஆட்டத்தின் 14வது ஓவரை முகமது சிராஜ் வீசினார். அப்போது களத்தில் இருந்த பென் ஸ்டோக்ஸ் சிராஜிடம் ஏதோ கூறியதாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த இந்திய அணி கேப்டன் கோலி, ஸ்டோக்ஸுடம் முதலில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் கோலி, தான் அணிந்திருந்த கண்ணாடியை கழட்டி ஆக்ரோஷமாக பேசத்தொடங்கியதால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

முடிவு

முடிவு

பின்னர் அங்கு களத்தில் இருந்த நடுவர் விரைந்து வந்ததால் இருவரும் அமைதியாக கலைந்து சென்றனர். இதற்கான காரணம் இன்னும் வெளியாகாத நிலையில் அது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது. ஏற்கனவே பிட்ச் குறித்த சர்ச்சையால் இரு அணிகளுக்கும் கருத்து வேறுபாடு நிலவி வரும் நிலையில் மோதல் போக்கு நிலவியுள்ளது.

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

இது குறித்து பேசிய கமெண்ட்ரி பாக்ஸில் இருந்து பேசிய க்ரீம் ஸ்வான், கோலி தான் ஸ்டோக்ஸுடம் பிரச்னை செய்துள்ளார். பென் ஸ்டோக்ஸ், முகமது சிராஜிடம் பேசியிருந்தால் அவர்கள் அதனை பேசிக்கொள்ள வேண்டும். கோலி அவரின் விளையாட்டை பார்க்க வேண்டும். இன்று அவர் செய்தது சிறுபுள்ளை தனமாக இருந்தது என தெரிவித்துள்ளார்.

சிறப்பான ஆட்டம்

சிறப்பான ஆட்டம்

இந்திய அணி கேப்டன் விராட் கோலியுடனான வாக்குவாதத்திற்கு பின்னர் பென் ஸ்டோக்ஸ் குழப்பமான மனநிலைக்கு சென்றிருப்பார் எனக்கூறப்பட்டது. ஆனால் அவர் ஆட்டத்தில் சிறப்பான பங்கை அளித்தார். அவர் அடித்த அரை சதம் காரணமாக அந்த அணி முதல் இன்னிங்ஸில் 201 ரன்கள் எடுத்துள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Graeme Swann Critism on Virat Kohli-Ben Stokes brawl
Story first published: Thursday, March 4, 2021, 19:14 [IST]
Other articles published on Mar 4, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X