For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இங்கிலாந்து பேட்ஸ்மேனால் ஒன்றும் செய்ய முடியவில்லை.. கோலிதான் அதற்கு காரணம்.புகழ்ந்த முன்னாள் வீரர்

அகமதாபாத்: 3வது டெஸ்டில் இந்தியா செய்த நுணுக்கமான விஷயங்கள் தனக்கு தெளிவாக தெரிந்ததாக இங்கிலாந்து முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.

3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தை 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. இதில் இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இதுதான் காரணம்.. புலம்பும் இங்கிலாந்து.. அணிக்குள்ளேயே ஏற்பட்ட குழப்பம்.. பின்னணியில் சிஎஸ்கே! இதுதான் காரணம்.. புலம்பும் இங்கிலாந்து.. அணிக்குள்ளேயே ஏற்பட்ட குழப்பம்.. பின்னணியில் சிஎஸ்கே!

இந்நிலையில் சுழற்பந்து வீச்சின் வியூகங்களை இங்கிலாந்தின் முன்னாள் சுழற்பந்துவீச்சு ஜாம்பவான் க்ரீம் ஸ்வான் பாராட்டியுள்ளார்.

ஸ்பின்னர்ஸ்

ஸ்பின்னர்ஸ்

முதல் இன்னிங்ஸ் முதலே இந்திய ஸ்பின்னர்ஸ்களிடம் சிக்கி இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் திணறினர். இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 112 ரன்களும், 81 ரன்களும் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. சிறப்பாக பந்துவீசிய அக்‌ஷர் பட்டேல் 11 விக்கெட்டும், அஸ்வின் 7 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பாராட்டு

பாராட்டு

போட்டி குறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் க்ரீம் ஸ்வான் , ஆட்டம் விராட் கோலி ஸ்பின்னர்ஸ்களுக்கு சிறப்பான ஃபீல்ட்டிங்கை அமைத்திருந்தார். அவர்கள் பேட்ஸ்மேன் அருகிலும் சரி, தூரத்திலும் சரி, இங்கிலாந்து வீரர்கள் ரன் எடுக்க முயன்றால் விக்கெட் என்ற பதற்றத்தை உருவாக்கினர். அவர்களின் யுக்தி ரன் குவிப்புக்கு முட்டுக்கட்டை போட்டது. அது எனக்கு தெளிவாக தெரிந்தது என தெரிவித்துள்ளார்.

குழப்பம்

குழப்பம்

பகலிரவு டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்வு செய்ததே தோல்விக்கு முக்கிய காரணம் என்ற பேச்சு எழுந்துள்ளது. அதே போல இந்திய அணியில் 2 ஸ்பின்னர்கள் இருந்தபோது, இங்கிலாந்து அணி ஒரே ஒரு ஸ்பின்னருடன் களமிறங்கியதும் தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

சாதனை

சாதனை

உலகில் அதிவேகமாக 400 விக்கெட்களை வீழ்த்தியவர்கள் பட்டியலில் அஸ்வின் 2ம் இடம் பிடித்துள்ளார். முதலிடத்தில் முத்தையா முரளிதரன் உள்ளார். அதே போல சிறப்பாக செயல்பட்ட மற்றொரு வீரரான அக்‌ஷர் பட்டேல் ஒரு பகலிரவு டெஸ்டில் அதிக விக்கெட்டுகளை ( 11 விக்கெட்) வீழ்த்தியவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

Story first published: Friday, February 26, 2021, 20:34 [IST]
Other articles published on Feb 26, 2021
English summary
Graeme swann Praises Kohli's field placements to spin bowling
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X