For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிறப்பான டீமுக்கு எதிரா என்னை நானே டெஸ்ட் செஞ்சுக்கலாம்... சூப்பர் கொண்டாட்டத்தில் லிவிங்ஸ்டோன்

புனே : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டி நடந்து முடிந்துள்ளது.

இதில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது. ஆயினும் இரு தரப்பிலும் தலா இரு வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

மேலும் 3 வீரர்களுக்கு கொரோனா..... உலகக்கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் சலசலப்பு... விவரம் இதோ! மேலும் 3 வீரர்களுக்கு கொரோனா..... உலகக்கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் சலசலப்பு... விவரம் இதோ!

இந்நிலையில் இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கனுக்கு பதிலாக இன்றைய போட்டியில் களமிறங்கவுள்ள லிவிங்ஸ்டோன், உலக அளவில் சிறப்பான அணிக்கு எதிராக தன்னை டெஸ்ட் செய்து கொள்ள சிறப்பான வாய்ப்பு கிடைத்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

முதல் ஒருநாள் போட்டி

முதல் ஒருநாள் போட்டி

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டி கடந்த 23ம் தேதி புனேவின் மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் நடந்து முடிந்துள்ளது. அந்த போட்டியில் முதலில் ஆடி 317 ரன்களை அடித்த இந்திய அணி இங்கிலாந்தை 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டது.

வெற்றிக்கு இந்தியா தீவிரம்

வெற்றிக்கு இந்தியா தீவிரம்

ஏற்கனவே நடந்து முடிந்துள்ள டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களை சிறப்பாக வெற்றி கொண்டுள்ள இந்திய அணி, தற்போது ஒருநாள் தொடரையும் வெற்றி கொள்ள தீவிரம் காட்டி வருகிறது. 3 போட்டிகளை கொண்ட இந்த தொடரில் ஏற்கனவே ஒரு வெற்றி பெற்றுள்ள நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி கொண்டால் தொடரை கைப்பற்றலாம்.

வீரர்கள் காயம்

வீரர்கள் காயம்

கடந்த முதல் போட்டி சிறப்பாக மற்றும் விறுவிறுப்பாக அமைந்திருந்தது. ஆயினும் அந்த போட்டியில் இருதரப்பிலும் ரோகித் சர்மா, ஷ்ரேயாஸ் ஐயர், இயான் மார்கன் மற்றும் சாம் பில்லிங்ஸ் ஆகியோர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து காயமடைந்த இங்கிலாந்து வீரர்கள் அடுத்த இரு போட்டிகளில் விளையாட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

லிவிங்ஸ்டோன் பேட்டிங்

லிவிங்ஸ்டோன் பேட்டிங்

இந்நிலையில் கேப்டன் இயான் மார்கனுக்கு பதிலாக ஜோஸ் பட்லர் அடுத்த இரு போட்டிகளில் கேப்டன்ஷிப்பை மேற்கொள்வார் என்றும் லியாம் லிவிங்ஸ்டோன் பேட்டிங் செய்வார் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், உலகின் சிறப்பான அணிக்கு எதிராக விளையாடி நமது திறமையை பரிசோதித்து பார்ப்பது சிறப்பானது என்று லிவிங்ஸ்டோன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் இன்றைய போட்டியில் பங்கேற்க ஆவலுடன் காத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Friday, March 26, 2021, 12:10 [IST]
Other articles published on Mar 26, 2021
English summary
ECB confirmed Livingstone will make his ODI debut in the 2nd match against India
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X