For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"சாப்டரை" முடிக்கப் பார்த்த சாப்பல்.. சாஹரின் கதை கேளுங்கள்!

By Aravinthan R

Recommended Video

சாப்டரை முடிக்கப் பார்த்த சாப்பல்..சாஹரின் கதை கேளுங்கள்!- வீடியோ

லண்டன்: இங்கிலாந்தில் நடக்கவிருக்கும் டி20 தொடருக்கு இந்திய வீரர் தீபக் சாஹர் காயத்தால் வெளியேறிய பும்ராவுக்கு மாற்று வீரரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் இளமை காலத்தில் கிரிக்கெட்டில் சந்தித்த சோதனையான சம்பவம் குறித்து தற்போது தெரிய வந்துள்ளது.

அது குறித்து, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவில், “சாஹர்-இன் கதை மிகவும் ஆச்சரியமானது. அவர் இளம் வயதில் ராஜஸ்தானில் உள்ள ஹனுமன்கர் நகரில் பயிற்சி மேற்கொண்டார். அப்போது, ராஜஸ்தான் கிரிக்கெட் அகாடமியின் இயக்குனராக இருந்த ஆஸ்திரேலியாவின் கிரெக் சாப்பலை சந்தித்த போது, தீபக் சாஹரை கிரிக்கெட்டை விட்டு சென்று விடுமாறு கூறினார்.

கிரெக் சாப்பல், தன் அகாடமியில் தேர்வு செய்யப்படாததற்காக சாஹரை கிரிக்கெட்டை விட்டு விலகி விடுமாறு கூறவில்லை. மாறாக, சாஹர் ஒரு கிரிக்கெட் வீரராகவே வர முடியாது என்று அவர் கூறினார்” இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

கிரெக் சாப்பல் என்றால் சர்ச்சை

கிரெக் சாப்பல் என்றால் சர்ச்சை

இந்தியாவின் கிரிக்கெட் வரலாற்றை பொறுத்தவரை, கிரெக் சாப்பல் பயிற்சியாளராக நுழைந்த காலமே மிகவும் மோசமான காலமாகும். பெரும் சர்ச்சைகளையும், வீரர்களுக்குள் குழப்பத்தையும், தொடர் தோல்விகளையும் சந்தித்த இந்திய அணி, அவர் விலகிய பின்பே மீண்டு வந்தது. தற்போது, அவர் குறித்து வந்துள்ள இந்த செய்தி, அவரது மோசமான செயல்பாடுகளுக்கு மற்றொரு உதாரணமாகவே இருக்கிறது.

தீபக் சாஹரின் முயற்சி

தீபக் சாஹரின் முயற்சி

தீபக் சாஹர், தனது பனிரெண்டு வயதிலிருந்து கிரிக்கெட் ஆடி வருகிறார். அவரது தந்தை தன் வேலையே விட்டு, மகனுக்காக கடன் வாங்கி அவரது கிரிக்கெட் பயிற்சிகளுக்கு உறுதுணையாக இருந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கான பரிசாக சாஹரின் கிரிக்கெட் பயணம் தற்போது இந்திய அணிக்காக ஆடும் நிலையை எட்டியுள்ளது.

சிஎஸ்கே-வால் கிடைத்த வெளிச்சம்

சிஎஸ்கே-வால் கிடைத்த வெளிச்சம்

தீபக் சாஹரின், வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியது ஐபிஎல் தான். கடந்த ஐபிஎல் தொடரில், தோனியின் கீழ் சென்னை அணிக்காக ஆடிய சாஹர், தனது ஸ்விங் பந்துவீச்சின் மூலம் பவர்ப்ளே ஓவர்களில் ஆதிக்கம் செலுத்தினார். பனிரெண்டு போட்டிகளில் 10 விக்கெட்கள் வீழ்த்தினார். அவசியமான சமயங்களில், பேட்டிங்கிலும் கை கொடுத்தார்.

இங்கிலாந்தில் வாய்ப்பு கிடைக்குமா

இங்கிலாந்தில் வாய்ப்பு கிடைக்குமா

தற்போது இங்கிலாந்துக்கு எதிராக நடக்கவிருக்கும் டி20 தொடரில் அவருக்கு களத்தில் இறங்க வாய்ப்பு கிடைக்குமா? அல்லது மாற்று வீரராக வெளியே அமர வைக்கப்படுவாரா? என்ற கேள்விகள் இருந்தாலும், அணிக்குள் கால் வைத்து விட்ட இளம் வீரர் தீபக் சாஹரை வரவேற்போம்.



Story first published: Tuesday, July 3, 2018, 14:22 [IST]
Other articles published on Jul 3, 2018
English summary
Greg chappell once said chahar would never become a cricketer
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X