என்னிய மதிக்கல.. எம்பேச்சை யாருமே கேட்கல... சிரிச்சு கேலி பண்ணாங்க.. புலம்பும் முன்னாள் கேப்டன்..!

ஆப்கான் அணியில் தொடரும் குழப்பம்... முன்னாள் கேப்டன் சரமாரி குற்றச்சாட்டு

காபூல்: வேண்டுமென்றே உலக கோப்பையில் மூத்த வீரர்கள் சரியாக ஆட வில்லை, கேப்டனாக எனது பேச்சை யாருமே கேட்கவில்லை என்று ஆப்கானிஸ்தானின் குல்பதின் நயீப் அதிர்ச்சிகர குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

உலக கோப்பை தொடரில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அணி என்று சொன்னால் அதை ஆப்கானிஸ்தான் எனலாம். ஆனால் அனைத்து போட்டிகளிலும் தோற்று, புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை தான் பெற்றது.

உலக கோப்பைக்கு முன், திடீரென ஆப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கர் ஆப்கான் நீக்கப் பட்டு குல்பதின் நயீப் கேப்டனாக்கப்பட்டார். அதில் உடன்பாடு இல்லை என்று கூறி அப்போதே ஆப்கானிஸ்தான் வீரர்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

நலன் கருதி நடவடிக்கை

நலன் கருதி நடவடிக்கை

ஆனால் அணியின் எதிர்கால நலனை கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கிரிக்கெட் வாரியம் கூறியது. அதனை ஏற்றுக் கொண்டு அனைவரும் செயல்பட வேண்டும் என்றும் வீரர்களுக்கு அறிவுறுத்தி இருந்தது.

கேப்டன் நீக்கம்

கேப்டன் நீக்கம்

இதையடுத்து குல்பாதின் நயிப் தலைமையிலான அணி உலக கோப்பையில் சோபிக்க வில்லை. அதன் எதிரொலியாக, கேப்டன் பதவியிலிருந்து குல்பதின் நயீப் அதிரடியாக நீக்கப்பட்டு, டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 அணிகளுக்குமே ரஷித் கான் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

பரபரப்பு புகார்

பரபரப்பு புகார்

இந்நிலையில், உலக கோப்பை தோல்வி குறித்து குல்பதின் நயீப், பரபரப்பு கருத்துகளை வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது: சீனியர் வீரர்கள் வேண்டுமென்றே உலக கோப்பையில் சரியாக ஆடவில்லை. ஒரு கேப்டன் என்ற முறையில் எனது பேச்சை யாருமே கேட்கவில்லை.

ஜாலியாக சிரித்தனர்

ஜாலியாக சிரித்தனர்

ஒவ்வொரு போட்டியிலும் தோற்றதற்கு பின்னர் சோகமாக இருப்பதற்கு பதிலாக அனைவருமே செம ஜாலியாக சிரித்துக் கொண்டிருந்தனர். யாரையாவது பவுலிங் அழைத்தால் கூட, என்னை கண்டுகொள்ளவில்லை என்று பரபரப்பு புகார்களை முன் வைத்திருக்கிறார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Gulbadin naib slams senior players over world cup 2019 defeat.
Story first published: Tuesday, July 23, 2019, 13:37 [IST]
Other articles published on Jul 23, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X