For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஸ்டீவ் ஸ்மித்தை விட அதிக சராசரி.. யாருப்பா இந்த ஹனுமா விஹாரி?

லண்டன்: இந்திய இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியது.
இந்திய அணியில் அறிமுக வீரராக ஹனுமா விஹாரி இடம் பெற்றுள்ளார். இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் 292ஆவது வீரர் என்ற பெருமையையும் பெற்றார். அவர் ஹார்திக் பண்டியாவுக்கு பதிலாக அணியில் இடம்பெற்றுள்ளார்.

ஓவல் மைதானத்தில் தனது முதலாவது டெஸ்ட் போட்டியை விளையாடும் இரண்டாவது இந்திய வீரர் ஹனுமா விஹாரி என்பது குறிப்பிடத்தக்கது.

hanuma vihari became the 292nd india player to represent in india in tests

விஹாரியின் டெஸ்ட் அறிமுகம் பலரையும் வியப்பிற்கு உள்ளாக்கியுள்ள நிலையில் அவரை பற்றிய ஒரு அறிமுகம் இதோ:

ஹனுமா விஹாரி ஆந்திராவை சேர்ந்த ஒரு முதல் தர கிரிக்கெட் வீரர். இவர் ஆந்திரா அணிக்காக 2016ஆம் ஆண்டு முதல் விளையாடி வருகிறார்.

hanuma vihari became the 292nd india player to represent in india in tests

முதல் தர போட்டிகள் :

தற்போது கிரிக்கெட் விளையாடி வரும் வீரர்களில் அதிக பட்ச முதல் தர கிரிக்கெட் போட்டி சராசரி வைத்திருப்பவர் ஹனுமா விஹாரி மட்டுமே. அவரது சராசரி 59.79 ஆகும். அவருக்கு அடுத்த இடத்தில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 57.27 சராசரி வைத்துள்ளார்.

விஹாரி தேர்வு செய்யப்பட்டது எப்படி :

விஹாரி 2017-18 காலகட்டத்தில் முதல் தர கிரிக்கெட்டில் 6 போட்டிகளில் 752 ரன்களை குவித்துள்ளார். அவரது சராசரி 94 என்பது குறிப்பிடத்தக்கது. அவர் ஒடிசா அணிக்காக தனது அதிகபட்ச ஸ்கோரான 302* ரன்களை எடுத்தார். மேலும் இதர இந்திய அணியில் இருந்து விதர்பா அணிக்காக ரஞ்சி கோப்பையில் 183 ரன்களை எடுத்ததும் தேர்வாளர்களை அவரது பக்கம் திரும்ப வைத்தது.

இந்திய ஏ அணிக்காகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார் விஹாரி. வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கெதிரான ஒரு நாள் போட்டிகளில் 243 ரன்களை குவித்தார். தென்னாபிரிக்கா ஏ அணிக்கெதிரான நான்கு நாள் டெஸ்ட் போட்டியில் 148 ரன்களை எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார்.

hanuma vihari became the 292nd india player to represent in india in tests

இவர் நடுவரிசை பேட்ஸ்மேன் மட்டுமின்றி பகுதி நேர சுழல் பந்துவீச்சாளரும் ஆவார். இவர் முதல் தர போட்டிகளில் இதுவரை 19 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் கடைசியாக 2015ஆம் ஆண்டு ஐபில் போட்டிகளில் பங்கேற்றார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த வாய்ப்பு எதிர்பாராத ஒன்று. நான் முதல் தர போட்டிகளில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தேன். இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வேன் என்றும் தெரிவித்தார்.

Story first published: Friday, September 7, 2018, 17:07 [IST]
Other articles published on Sep 7, 2018
English summary
Hanuma vihari became the 292nd indian player to represent in india in tests
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X