For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கிரிக்கெட் கடவுளுக்கு பிறந்தநாள்... வாழ்த்து மழையில் நனைந்து கொண்டாட்டம்

மும்பை : முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது 48வது பிறந்த தினத்தை இன்றைய தினம் கொண்டாடி வருகிறார்.

Recommended Video

Sachinன் 'Desert Storm'! Sharjahவில் Australiaவை வதம் செய்த நாள் | OneIndia Tamil

அவருக்கு பிசிசிஐ, இந்திய அணி வீரர்கள் மற்றும் தடகள வீரர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சூர்யாவத்தான் முதல்ல அனுப்பியிருக்கணும்... அவர் பவர்ப்ளேவை சிறப்பா பயன்படுத்தியிருப்பாரு சூர்யாவத்தான் முதல்ல அனுப்பியிருக்கணும்... அவர் பவர்ப்ளேவை சிறப்பா பயன்படுத்தியிருப்பாரு

சச்சின் டெண்டுல்கர் முதல் வீரராக இரட்டை சதம் அடித்த தருணத்தை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

சிறப்பான சாதனைகள்

சிறப்பான சாதனைகள்

முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் கடவுளாக பார்க்கப்படுகிறார். தனது 24 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் கிரிக்கெட்டை தனது மூச்சாக கொண்டு செயல்பட்டவர் சச்சின். அவரது பல்வேறு சாதனைகள் இன்னும் முறியடிக்கப்படாமல் உள்ளது.

முன்னாள் வீரர்கள் வாழ்த்து

முன்னாள் வீரர்கள் வாழ்த்து

அவர் இன்று தனது 48வது பிறந்ததினத்தை கொண்டாடி வருகிறார். அவருக்கு யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ரஹானே, வெங்கடேஷ் பிரசாத் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் வாழ்த்துக்களை சமூகவலைதளங்கள் மூலம் பகிர்ந்து வருகின்றனர். மேலும் மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட ஐபிஎல் அணிகளும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளன.

பிசிசிஐ வீடியோ பதிவு

பிசிசிஐ வீடியோ பதிவு

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அவர் அடித்துள்ள இரட்டை சதத்தின் ஹைலைட்சை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. ஐசிசி, இந்திய அணி உள்ளிட்டவை தங்களது வாழ்த்துக்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ளன.

யுவராஜ் சிங் வாழ்த்து

யுவராஜ் சிங் வாழ்த்து

இதனிடையே முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் சச்சினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இருவரும் இணைந்திருக்கும் வீடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார். இதேபோல முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவும் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். சச்சினுக்கு கிரிக்கெட்டின்மீது இருக்கும் ஆர்வமே தாங்கள் கிரிக்கெட்டை விரும்ப காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.

சச் என்றால் உண்மை

சச் என்றால் உண்மை

அஜிங்க்யா ரஹானேவும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். முன்னாள் வீரரும் சச்சினின் சக தோழருமான வெங்கடேஷ் பிரசாத்தும் வாழ்த்துக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சச் என்றால் உண்மை, சச் என்றால் வாழ்க்கை என்று அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட்டை திருவிழாவாக மாற்றியவர்

கிரிக்கெட்டை திருவிழாவாக மாற்றியவர்

இதனிடையே அவர் கேப்டனாக செயல்பட்டுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. இதேபோல சிஎஸ்கேவும் சச்சினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. கிரிக்கெட்டை திருவிழாவாக மாற்றிய சச்சினுக்கு வாழ்த்துக்களை சிஎஸ்கே தெரிவித்துள்ளது. ராஜஸ்தான், பஞ்சாப் அணிகளும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளன.

கிரிக்கெட்டின் கிங்

கிரிக்கெட்டின் கிங்

இதேபோல தடகள வீராங்கனைகள ஹிமா தாஸ், சாக்ஷி மாலிக், உள்ளிட்டவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். கடந்த 1989 முதல் 2013 வரை சச்சின் கிரிக்கெட்டின் கிங்காக திகழ்ந்தார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அவர் மேற்கொண்டுள்ள சாதனைகள் இன்னும் முறியடிக்கப்படாமல் உள்ளன.

Story first published: Saturday, April 24, 2021, 20:43 [IST]
Other articles published on Apr 24, 2021
English summary
Tendulkar had a storied international career from India, spanning from 1989 to 2013
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X