For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கொடுத்த வாய்ப்பை பச்சக்குன்னு பிடிச்சிக்கிட்டாரு... கெய்க்வாட் குறித்து சிஎஸ்கே கோச் மகிழ்ச்சி

துபாய் : நேற்றைய கேகேஆருக்கு எதிரான போட்டியில் 72 ரன்கள் குவித்து சிஎஸ்கேவை வெற்றி பெற செய்துள்ளார் ருதுராஜ் கெய்க்வாட்.

சீசன் துவக்கத்தில் அவருக்கு ஏற்பட்ட கொரோனா பாதிப்பால், அவரால் ஆரம்ப சிஎஸ்கே போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை.

இந்நிலையில், தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை அவர் சிறப்பாக பயன்படுத்தி வருவதாக சிஎஸ்கே கோச் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.

ருதுராஜ் கெய்க்வாட் ஆர்வம்
தோனியின் நன்மதிப்பு

தோனியின் நன்மதிப்பு

தோனியின் நன்மதிப்பு

ஐபிஎல்லின் இந்த சீசன் துவக்கத்தில் மிகவும் ஆர்வத்துடன் போட்டிகளில் பங்கேற்கும் வகையில் ருதுராஜ் கெய்க்வாட் யூஏஇ பயணம் மேற்கொண்டார். சென்னையில் நடத்தப்பட்ட பயிற்சி முகாம்களில் இவர் கேப்டன் தோனியின் நன்மதிப்பை பெற்றதாகவும் அதனால் இந்த சீசனில் இவர் சிறப்பான வாய்ப்பை பெறுவார் என்றும் கூறப்பட்டது.

குலைந்த சிஎஸ்கே வடிவம்

குலைந்த சிஎஸ்கே வடிவம்

ஆனால் நடந்ததெல்லாம் வேறு. யூஏஇ வந்தவுடன் கெய்க்வாடிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அதிர்ச்சி அவருக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த சிஎஸ்கே அணிக்கும் அதிர்ச்சியை தந்தது. கெய்க்வாட், சஹர் உள்ளிட்ட 13 பேருக்கு கொரோனா பாதித்தது. இதனால் சிஎஸ்கேவின் வடிவமே குலைந்தது.

அடுத்தடுத்து தோல்விகள்

அடுத்தடுத்து தோல்விகள்

ஆயினும் அதிலிருந்து மீண்டுவர சிஎஸ்கே எடுத்த முயற்சிகள் எல்லாம் மோசமான விளைவையே தந்தது. அந்த அணி அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த நிலையில் தற்போது பிளே-ஆப் சுற்றுக்கு முதல் முறையாக தகுதி இழப்பை சந்தித்துள்ளது.

வெற்றி நாயகன் கெய்க்வாட்

வெற்றி நாயகன் கெய்க்வாட்

இதையடுத்து தற்போது 3 போட்டிகளை விளையாடும் நிலையில், அதில் 2 போட்டிகளில் சிஎஸ்கே வெற்றி பெற்றுள்ளது. ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகளுக்கிடையிலான அந்த போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது சிஎஸ்கே. இந்த வெற்றிகளுக்கு காரணமாக இருக்கிறார் ருதுராஜ் கெய்க்வாட்.

ஸ்டீபன் பிளமிங் பாராட்டு

ஸ்டீபன் பிளமிங் பாராட்டு

இந்நிலையில், தனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை சிறப்பாக கெய்க்வாட் பயன்படுத்திக் கொண்டுள்ளதாக அந்த அணியின் கோச் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பின்னர் கெய்க்வாடிக்கு வாய்ப்பை ஏற்படுத்தி தந்ததற்கும் அவர் தன்னை சிறப்பான வீரராக அடையாளப்படுத்திக் கொண்டுள்ளதற்கும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Story first published: Friday, October 30, 2020, 14:33 [IST]
Other articles published on Oct 30, 2020
English summary
Ruturaj Gaikwad has shown us that he's the right player -Stephen Fleming
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X