வீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு - குற்றம் சாட்டும் ஹர்பஜன்

டெல்லி : எம்எஸ்கே பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழு இலங்கை, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்திற்கு எதிரான ஏ அணியினரை அறிவித்துள்ளது.

இந்த மூன்று அணியிலும் சூர்யக்குமார் யாதவ் இடம்பெறாதது குறித்து முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் கேள்வி எழுப்பியுள்ளார். தேர்வுக்குழு ஒருதலைபட்சமாக நடந்துக் கொள்வதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஒவ்வொரு வீரருக்கு ஏற்றாற்போல தன்னுடைய கொள்கைகளை தேர்வுக்குழு மாற்றிக் கொள்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இந்திய தேர்வுக்குழு அறிவிப்பு

இந்திய தேர்வுக்குழு அறிவிப்பு

வரும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இலங்கை, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக இந்திய அணியினர் மோதவுள்ளனர். இந்த அணிகளுக்கான வீரர்களை எம்எஸ்கே பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழு நேற்று அறிவித்துள்ளது.

ஒருதலை பட்சமான முடிவு

ஒருதலை பட்சமான முடிவு

இந்த மூன்று தொடர்களில் பிரித்வி ஷா உள்ளிட்ட இளம் வீரர்களும் இடம்பிடித்துள்ளனர். ஆயினும் இந்த மூன்று தொடர்களுக்கான வீரர்கள் தேர்வில் தேர்வாளர்கள் ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டுள்ளதாக முன்னாள் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

தேர்வுக்குழு முடிவு குறித்து ஹர்பஜன்

தேர்வுக்குழு முடிவு குறித்து ஹர்பஜன்

தேர்வுக்குழுவினர் ஒவ்வொரு வீரருக்கு ஒவ்வொரு மாதிரியான கொள்கைகளை கடைபிடித்து வருவதாகவும் ஹர்பஜன் சிங் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.

தேர்வுக்குழுவை ஹர்பஜன் கேள்வி

இந்தியாவின் டீம் ஏ மற்றும் பிக்கு தேர்வாகியுள்ள வீரர்களை போல தன்னுடைய திறமையை நிரூபித்ததைக் காட்டிலும் சூர்யக்குமார் வேறு என்ன தவறு செய்தார் என்பது தனக்கு வியப்பை ஏற்படுத்துவதாகவும் ஹர்பஜன் தெரிவித்துள்ளார்.

"இதயத்தை சோதிக்கிறதா தேர்வுக்குழு?"

கடந்த நவம்பரில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான அணி அறிவிக்கப்பட்டபோது, சஞ்ஜூ சாம்சனின் விளையாட்டையா அல்லது அவரது இதயத்தை தேர்வுக்குழு சோதிக்கிறதா என எம்.பி. சசி தரூர் கேள்வி எழுப்பியிருந்தார்.

பதிலளித்த ஹர்பஜன் சிங்

திருவனந்தபுரம் எம்.பி. சசி தரூரின் இந்த பதிவிற்கு பதிலளித்திருந்த ஹர்பஜன் சிங், தேர்வுக்குழு சஞ்ஜூ சாம்சனின் இதயத்தையே சோதிப்பதாக உடைந்த இதயத்தின் எமோஜியுடன் பதிலளித்திருந்தார். மேலும் தேர்வுக்குழுவில் வலிமையானவர்கள் வேண்டும் என்றும் பிசிசிஐ தலைவர் கங்குலி தேவையான நடவடிக்கையை மேற்கொள்வார் என்றும் நம்பிக்கை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Harbhajan Singh accuses again Indian selectors action
Story first published: Tuesday, December 24, 2019, 19:18 [IST]
Other articles published on Dec 24, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X