For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வெல்டன் லாலா...ஹர்பஜனின் பாராட்டு... எதுக்காக... யாருக்காக...

மும்பை : கொரோனா வைரஸ் பாதிப்பால், புலம்பெயர் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்து, தங்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில், இவ்வாறு செல்லும் தொழிலாளர்களுக்கு, தன்னுடைய வீட்டிலேயே உணவு சமைத்து, வழங்கி வருகிறார் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக்.

இவருடைய இந்த உதவிக்கு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். இளம் ஆல்-ரவுண்டர் மயங்க் தகாரும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

டி20 உலக கோப்பையை தள்ளிவைச்சா மிகப்பெரிய நெருக்கடியை சந்திக்க வேண்டியதாகிடும்டி20 உலக கோப்பையை தள்ளிவைச்சா மிகப்பெரிய நெருக்கடியை சந்திக்க வேண்டியதாகிடும்

 புலம்பெயரும் தொழிலாளர்கள்

புலம்பெயரும் தொழிலாளர்கள்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வேறு மாநிலங்களில் வேலை பார்த்துவந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், வேலை வாய்ப்புகளை இழந்துள்ளனர். இதையடுத்து தங்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்பி வருகின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு சமமாக இந்த பிரச்சினை நாட்டில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

 உணவு வழங்கும் சேவாக்

உணவு வழங்கும் சேவாக்

இந்த தொழிலாளர்களுக்கு நாடுமுழுவதும் பல்வேறு பகுதிகளில் பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. அவர்களுக்கு உணவு வழங்கும் நடவடிக்கையில் சிலரும், அவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல சிலரும் உதவி புரிந்து வருகின்றனர். இந்நிலையில் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தன்னுடைய வீட்டிலேயே உணவு தயாரித்து வழங்கி வருகிறார்.

 சேவாக் திருப்தி

சேவாக் திருப்தி

இதுகுறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் உணவை அவர் தன்னுடைய கைகளால் பேக் செய்வது போல உள்ளது. இந்நிலையில் நம்முடைய வீட்டில் உணவை தயாரித்து, தேவை உள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வழங்குவது பெரும் திருப்தியை ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 'வெல்டன் லாலா' என பாராட்டு

'வெல்டன் லாலா' என பாராட்டு

இந்நிலையில் சேவாக்கின் இந்த உதவிக்கு ஆப் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங், பாராட்டு தெரிவித்துள்ளார். 'வெல்டன் லாலா' என்று அவர் கமெண்ட் செய்துள்ளார். இதனிடையே இளம் ஆல்-ரவுண்டர் மயங்க் தகாரும் வீரேந்திர சேவாக்கிற்கு பாராட்டு தெரிவித்து தன்னுடைய வியப்பையும் வெளிப்படுத்தியுள்ளார்.

Story first published: Friday, May 29, 2020, 14:59 [IST]
Other articles published on May 29, 2020
English summary
Sehwag took to Instagram to reveal he has been helping Migrant Labourers
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X