ஹாட்ரிக் விக்கெட் விவகாரம்.. ஆஸி. ஜாம்பவானை மட்டு மரியாதை இல்லாமல் விளாசிய ஹர்பஜன் சிங்!

Watch Video : Jasprit Bumrah got 3rd rank in test bowling in just 12 matches

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், ஆஸ்திரேலியா ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட்டை கொஞ்சம் கூட யோசிக்காமல் வெளுத்து வாங்கி திட்டி இருக்கிறார்.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் வேகப் பந்துவீச்சாளர் பும்ரா ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார். இந்திய அளவில் இதுவரை மூன்று பந்துவீச்சாளர்கள் மட்டுமே ஹாட்ரிக் விக்கெட் எடுத்துள்ளனர்.

அவர் போய்ட்டா கோவிந்தா தான்..!! டீம் இந்தியா எதுக்கும் ஆகாது..! அலர்ட் தந்த சாதனை வீரர்

மற்ற இருவர்

மற்ற இருவர்

பும்ரா எடுத்த ஹாட்ரிக் விக்கெட் இணையத்தில் டிரென்டிங் ஆனது. அப்போது இந்திய அளவில் யார், யார் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார்கள் என்பதும் பெரிதாக பேசப்பட்டது. இந்திய அளவில் ஹர்பஜன் சிங் முதன் முதலில் டெஸ்ட் போட்டியில் ஹாட்ரிக் எடுத்து இருந்தார். இர்பான் பதான் அவருக்கு பின் ஹாட்ரிக் எடுத்தார்.

ஹர்பஜன் ஹாட்ரிக்

ஹர்பஜன் ஹாட்ரிக்

2001இல் வரலாற்று சிறப்புமிக்க கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் பாலோ ஆன் பெற்ற இந்திய அணி, அதில் இருந்து மீண்டு ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. அந்தப் போட்டியில் ஹாட்ரிக் எடுத்து இருந்தார் ஹர்பஜன் சிங்.

கில்கிறிஸ்ட் விக்கெட்

கில்கிறிஸ்ட் விக்கெட்

ரிக்கி பாண்டிங், ஆடம் கில்கிறிஸ்ட், ஷேன் வார்னே ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி இருந்தார் ஹர்பஜன். கில்கிறிஸ்ட் தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார்.

அவுட் சர்ச்சை

அவுட் சர்ச்சை

அப்போது கில்கிறிஸ்ட் தான் அவுட் இல்லை என தலையை ஆட்டிக் கொண்டே வெளியேறினார். எல்பிடபுள்யூ முறையில் ஆட்டமிழந்து இருந்தார் கில்கிறிஸ்ட். அப்போது பந்து அவரது பேட்டில் தான் பட்டது என கூறப்படுகிறது. அந்த சர்ச்சை அப்போது பேசப்பட்டு பின்னர் மறக்கப்பட்டது.

கில்கிறிஸ்ட் விளக்கம்

கில்கிறிஸ்ட் விளக்கம்

பும்ரா ஹாட்ரிக் பிரபலமான நேரத்தில், இணையத்தில் ஒருவர் ஹர்பஜன் சிங்கின் ஹாட்ரிக் வீடியோவை பகிர்ந்தார். அதற்கு விளக்கம் அளித்த கில்கிறிஸ்ட், அப்போது டிஆர்எஸ் எல்லாம் இல்லை என தன் ஆதங்கத்தை கொட்டி இருந்தார்.

ஹர்பஜன் சிங் விளாசல்

ஹர்பஜன் சிங் விளாசல்

அதற்கு பதில் அளித்து இருக்கும் ஹர்பஜன் சிங், ஆடம் கில்கிறிஸ்ட் ஒரு ஜாம்பவான், உலகின் சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவர் என்ற பாரபட்சம் எல்லாம் பார்க்காமல் விளாசி இருக்கிறார்.

என்ன சொன்னார்?

என்ன சொன்னார்?

அவர் கூறுகையில், "நீங்கள் முதல் பந்தில் தப்பித்து இருந்தால் நீண்ட நேரம் தாக்குப் பிடித்து இருப்பீர்களா? இது போன்ற விஷயங்களை கண்டு அழுவதை நிறுத்துங்கள். நீங்கள் விளையாடி முடித்த பின்னர் அறிவோடு பேசுவீர்கள் என நினைத்தேன்."

சில விஷயங்கள் மாறாது

சில விஷயங்கள் மாறாது

"ஆனால், சில விஷயங்கள் எப்போதும் மாறாது. அதற்கு நீங்கள் சிறந்த எடுத்துக் காட்டு. எப்போது பார்த்தாலும் அழுது கொண்டே இருக்கிறீர்கள்" என கடுமையாக விமர்சித்து இருக்கிறார் ஹர்பஜன் சிங். பாவம்! கில்கிறிஸ்ட் பேசாம இருந்திருக்கலாம்!!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Harbhajan Singh blasts Adam Gilchrist over his claim of No DRS at this time
Story first published: Wednesday, September 4, 2019, 20:43 [IST]
Other articles published on Sep 4, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X