For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அஸ்வின் இப்படி பண்ணினாரு.. அதான் டீமில் சேர்க்கல..!! அந்த உண்மையை சொல்லி அதிர வைத்த டர்பனேட்டர்

Recommended Video

இந்திய அணியில் அடுத்த சர்ச்சை...அஸ்வினை நீக்க காரணம் இதுதான்- வீடியோ

மும்பை: உடற்தகுதியே பெறவில்லை என்பதை கருத்தில் கொண்டுதான், அஸ்வின் ஓரங்கட்டப்பட்டிருக்கிறார் என்று ஹர்பஜன் சிங் சமயம் பார்த்து, தமது கருத்தை தெரிவித்திருக்கிறார்.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா 318 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த வித்தியாசம் லேசுப் பட்டது அல்ல என்பது கிரிக்கெட் தெரிந்த அனைவருக்குமே புரியும். ஆனால் போட்டி ஆரம்பிக்கும் போது அணிக்குள் ஒரு சலசலப்பு ஓடிக் கொண்டிருந்தது.

அதன் தாக்கம் அணியின் வெளியில் இருந்தும் எதிரொலித்தது. 11 பேர் கொண்ட வீரர்கள் தேர்வில், ரோகித் புறக்கணிக்கப்பட்டார். அவருக்கு மாற்றாக வந்த விஹாரி தம்மை நிரூபித்துவிட்டார். இதேபோன்று, அஸ்வின் செலக்ட் பண்ணப் படாதது உற்று நோக்கப்பட்டது.

செம காரம்.. செம காரம்.. "பிரிபிரி சிக்கனை" சாப்பிட்டு வந்து தான் பிரிச்சு மேய்ஞ்சேன்.. அதிர வைத்த பென் ஸ்டோக்ஸ்!

பலர் ஆச்சர்யம்

பலர் ஆச்சர்யம்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நல்ல ரெக்கார்டை அஸ்வின் வைத்திருப்பது தான் அதற்கு காரணம். முன்னாள் வீரர்கள் மட்டுமல்ல, ரசிகர்களும் ஆச்சரியம் அடைந்தனர். வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 11 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 60 விக்கெட்டுகள், 4 சதங்களையும் விளாசியவர் அஸ்வின்.

மட்டம் தட்டிய அவர்

மட்டம் தட்டிய அவர்

அஸ்வின் மிஸ்சிங் என்ற அதிர்ச்சியை நேரடி வர்ணனையில் உதிர்த்தவர் சுனில் கவாஸ்கர். இந்நிலையில், அஸ்வினை மட்டம் தட்டும் வகையில் மீண்டும் ஹர்பஜன் சிங் பேசியுள்ளார். காரணம் இருவருக்கும் ஒத்தே வராது என்பது ஊர் அறிந்த ரகசியம்.

எடுத்துக்காட்டு

எடுத்துக்காட்டு

ஹர்பஜன் சிங் கூறியிருப்பதாவது: அஸ்வின் வெளிநாட்டு தொடர்களில் சரியாக ஆடியது கிடையாது. பல உதாரணங்கள் இருக்கின்றன. கடந்தாண்டு சவுத்தாம்ப்டனில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியை சொல்லலாம். மொயின் அலி 9 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்தை வெற்றி பெற வைத்தார். அந்த போட்டியில் அஸ்வின் வெறும் 3 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தினார்.

உடற்தகுதி இல்லை

உடற்தகுதி இல்லை

அதேபோல ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திலும் முதல் டெஸ்டியிலேயே காயமடைந்தார் அஸ்வின். அவர் எப்படியும் உடற்தகுதி பெற்றுவிடுவார் என்று அணி நிர்வாகம் நினைத்தது. ஆனால் என்ன நடந்தது? அவர் உடற்தகுதியே பெற வில்லை. ஒவ்வொரு போட்டியிலும் வீரர்களின் உடற்தகுதியை பார்த்து தான், ஆடும் 11 பேர் கொண்ட வீரர்கள் பட்டியல் உறுதி செய்யப்படும். இந்த விவகாரங்கள் தான் அஸ்வின் ஓரங்கட்டப்பட்டதற்கு காரணம் என்று தெரிவித்து உள்ளார்.

Story first published: Tuesday, August 27, 2019, 10:57 [IST]
Other articles published on Aug 27, 2019
English summary
Harbhajan singh comments on ashwin drop in West Indies test series.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X