For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிஎஸ்கேவில் கிடைத்த கடைசி வாய்ப்பு.. தவறவிட்ட சீனியர் வீரர்.. முடிவுக்கு வரும் கிரிக்கெட் கேரியர்?

துபாய் : 2020 ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ள ஹர்பஜன் சிங்கின் கிரிக்கெட் வாழ்வு முடிவுக்கு வந்ததா? என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர் ரசிகர்கள்.

ஹர்பஜன் சிங்கிற்கு இனி ஐபிஎல் உட்பட எந்த பெரிய கிரிக்கெட் தொடர்களிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்காது என கருதப்படுகிறது.

ரெய்னா, ஹர்பஜன் இல்லை.. எதைப் பற்றியும் கவலைப்படாத கேப்டன் கூல் தோனி.. பக்கத்தில் வாட்டோ.. செம வைரல்ரெய்னா, ஹர்பஜன் இல்லை.. எதைப் பற்றியும் கவலைப்படாத கேப்டன் கூல் தோனி.. பக்கத்தில் வாட்டோ.. செம வைரல்

ஹர்பஜன் சிங் அறிமுகம்

ஹர்பஜன் சிங் அறிமுகம்

ஹர்பஜன் சிங் 1998இல் இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகம் ஆனார். அப்போது முதல் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியின் முன்னணி சுழற் பந்துவீச்சாளராக மாறினார். அவர் அனில் கும்ப்ளே இருந்த காலத்திலேயே அணியில் முக்கிய இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

அணியில் வாய்ப்பை இழந்தார்

அணியில் வாய்ப்பை இழந்தார்

அஸ்வின், ரவீந்திர ஜடேஜா வரவுக்குப் பின் ஹர்பஜன் சிங் இந்திய அணியில் தன் முக்கியத்துவத்தை இழந்தார். பல ஆண்டுகளாக அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனினும், ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் நீண்ட காலம் இடம் பெற்றார்.

ஐபிஎல் தொடரில்..

ஐபிஎல் தொடரில்..

2018ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர் மும்பை அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வந்து சேர்ந்தார். அப்போது ஹர்பஜன் சிங்கிற்கு 37 வயதானதால் எந்த அணியும் தேர்வு செய்து என கருதப்பட்டது.

சிஎஸ்கே அணியில் வாய்ப்பு

சிஎஸ்கே அணியில் வாய்ப்பு

எனினும், சிஎஸ்கே அணி அவரை தேர்வு செய்து வியக்க வைத்தது. கேப்டன் தோனி, ஹர்பஜன் சிங்கை துருப்புச்சீட்டாக பயன்படுத்தி முக்கிய போட்டிகளில் அணியை வெற்றி பெற வைத்தார். அதன் மூலம் ஹர்பஜன் சிங் சிஎஸ்கே அணியின் முக்கிய வீரராக மாறினார்.

விலகல்

விலகல்

இந்த நிலையில், 2020 ஐபிஎல் தொடரில் இருந்து ஹர்பஜன் சிங் விலகி உள்ளார். துபாயில் முகாமிட்டுள்ள சிஎஸ்கே அணியில் இரண்டு வீரர்கள் உட்பட 13 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் ஹர்பஜன் சிங் இந்த முடிவை எடுத்ததாக சிலர் கூறுகின்றனர்.

ஏன் விலகினார்?

ஏன் விலகினார்?

ஹர்பஜன் சிங் தனிப்பட்ட காரணத்தால் விலகியதாக சிஎஸ்கே அணியிடம் கூறி இருப்பதாக தெரிவித்தார். தன் தனிமையை மற்றவர்கள் மதிப்பார்கள் என நம்புகிறேன் எனவும் கூறி தன் விலகல் விவகாரத்தை முடித்துள்ளார் அவர். ஆனால், இத்துடன் அவரது கிரிக்கெட் கேரியரும் முடிவுக்கு வந்துள்ளதா?

முடிவுக்கு வந்ததா கேரியர்?

முடிவுக்கு வந்ததா கேரியர்?

தற்போது ஹர்பஜன் சிங்கிற்கு 40 வயது ஆகிறது. அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர் ஏலத்தில் பங்கேற்றாலும் ஐபிஎல் அணிகள் அவரை ஏலத்தில் தேர்வு செய்யும் வாய்ப்பு மிகவும் குறைவு. அதே போல இந்திய அணிக்கு திரும்புவதும் நடக்காத காரியம்.

சிறிய தொடர்களில் வாய்ப்பு

சிறிய தொடர்களில் வாய்ப்பு

கிட்டத்தட்ட ஹர்பஜன் சிங்கின் கிரிக்கெட் கேரியர் முடிவுக்கு வந்துள்ளது. எனினும், உலகம் முழுவதும் நடந்து வரும் டி20 தொடர்களில் இந்திய ரசிகர்களை ஈர்க்கும் திறன் கொண்ட ஹர்பஜன் சிங்கிற்கு வாய்ப்பு கிடைக்கக் கூடும். அதைத் தாண்டி ஹர்பஜன் சிங்கை இனி கிரிக்கெட் போட்டிகளில் காண முடியாது என்றே தோன்றுகிறது.

Story first published: Friday, September 4, 2020, 18:56 [IST]
Other articles published on Sep 4, 2020
English summary
Harbhajan Singh cricket career came to an end? asks fans, after he pulled out from IPL 2020 due to personal reasons. His age is 40 and he may never get chance to play in IPL.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X