For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

'ஸ்போட்ஸ் பிக்சிங்..' உலக கோப்பை டி20 வெற்றி.. நக்கலடித்த முகமது அமிர்.. சரியான பதிலடி தந்த ஹர்பஜன்

டெல்லி: டி20 உலக கோப்பை போட்டியில் இந்தியாவைப் பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்திருந்த நிலையில், ஹர்பஜன் சிங் மற்றும் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிர் ஆகியோருக்கு இடையே ட்விட்டரில் கடும் வார்த்தை போர் ஏற்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் ஐக்கிய அமீரகத்திலேயே தற்போது டி20 உலகக் கோப்பை தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த சனிக்கிழமை உலகக் கோப்பையில் சூப்பர் 12 போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

டி20 உலக கோப்பைக்கு இந்த 8 ஐபிஎல் நட்சத்திரங்கள்.. பிசிசிஐ போட்டுள்ள மாஸ்டர் பிளான்.. பலன் தருமாடி20 உலக கோப்பைக்கு இந்த 8 ஐபிஎல் நட்சத்திரங்கள்.. பிசிசிஐ போட்டுள்ள மாஸ்டர் பிளான்.. பலன் தருமா

அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சூப்பர் 12 சுற்றுப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இந்தியா vs பாகிஸ்தான்

இந்தியா vs பாகிஸ்தான்

இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரு போட்டியில் மோதிக் கொண்டாலே அதில் அனல் பறக்கும். அதுவும் உலகக் கோப்பை தொடரில் என்றால் சொல்லவா வேண்டும். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழந்து 151 ரன்களை எடுத்தது. இந்தியா கேப்டன் கோலி மற்றும் ரிஷப் பந்த் ஆகியோரை தவிர வேறு யாரும் பெரியளவில் ரன்களை குவிக்கவில்லை.

பாக். வெற்றி

இதை அடுத்துப் பேட் செய்த பாகிஸ்தானுக்கு மிகவும் அற்புதமான ஒரு ஓப்பனிங் பாட்னர்ஷிப் கிடைத்தது. அந்த அணியின் ஓப்பனிங் பாட்னர்ஷிப்பை உடைக்க இந்தியா எடுத்த எந்தவொரு முயற்சியும் பலன் தரவில்லை. பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் முகமது ரிஸ்வான் 79 ரன்களுடனும் பாபார் அசாம் 68 ரன்களுடனும் கடைசி வரை களத்தில் இருந்து, அணியின் வெற்றியை உறுதி செய்தனர். இதில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வார்த்தை போர்

வார்த்தை போர்

உலகக் கோப்பை தொடர் ஒன்றில் இந்தியாவைப் பாகிஸ்தான் தோற்கடிப்பது இதுவே முதல்முறையாகும். இந்த வெற்றியைப் பாகிஸ்தான் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர். கிரிக்கெட் தெரிந்த ரசிகர்களும் பாகிஸ்தானின் சூப்பர் ஆட்டத்தைப் பாராட்டி வருகின்றனர். ஆனால், சிலர் வேண்டுமென்றே இரு நாடுகளுக்கும் இடையே சர்ச்சையை ஏற்படுத்தும் வகையிலான கருத்துகளை தெடர்ந்து தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக ஹர்பஜன் சிங் மற்றும் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிர் ஆகியோருக்கு இடையே ட்விட்டரில் கடும் வார்த்தை போர் ஏற்பட்டுள்ளது.

ஆசிய கோப்பை

இருவருக்கும் இடையே முதலில் விளையாட்டாகத் தொடங்கிய வார்த்தை மோதல், விரைவிலேயே சீரியஸாக மாறியது. முதலில் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிர், இந்தியாவின் தோல்வியைக் கிண்டல் செய்யும் விதமாக ட்வீட் செய்திருந்தார். அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக 2010 ஆசியக் கோப்பை போட்டியில் இந்தியாவின் வெற்றி வீடியோவை ஹர்பஜன் பதிவிட்டிருந்தார். அதில் முகமது அமிர் பந்தை அசாட்லாக சிக்சருக்கு பறக்கவிட்டிருப்பார் ஹர்பஜன் சிங்.

Recommended Video

Shakib reclaims 1st Place! Babar closes in on top spot | ICC T20I rankings | OneIndia Tamil

ஹர்பஜன் சிங்

அதற்குப் பதிலடி தரும் வகையில் கடந்த 2006இல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே 2006இல் நடந்த டெஸ்ட் போட்டியின் வீடியோவை அமிர் பகிர்ந்திருந்தார். அதில் ஹர்பஜன் சிங் வீசிய 4 பந்துகளையும் ஷாகித் அப்ரிடி சிக்ஸருக்கு பறக்கவிட்டிருப்பார். இந்த வீடியோவைப் பகிர்ந்த அமீர், டெஸ்ட் கிரிக்கெட்டில் இது எப்படி நடக்கும் என்று நக்கல் செய்து ட்வீட் செய்திருந்தார். இந்த நக்கலான ட்வீட்டை ஹர்பஜன் சிங் ஈஸியாக எடுத்துக்கொள்ளவில்லை போல.

ஸ்போட்ஸ் பிக்சிங்

இதற்கு ஹர்பஜன் சிங், 2010இல் இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டில் பாக். வீரர்கள் ஸ்போட்ஸ் பிக்சிங்கில் ஈடுபட்டதை நினைவுபடுத்தும் வகையில் ட்வீட் செய்துள்ளார். அதில் அவர், "லார்ட்ஸ் மைதானத்தில் இந்த ஒரு நோ பால் எப்படி இருக்கமுடியும்? இதற்கு எவ்வளவு பணம் வாங்கினீர்கள் (மற்றும்) யார் உங்களுக்குப் பணம் கொடுத்தார்கள்? டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒருவர் எப்படி இப்படி ஒரு நோ பாலை போட முடியும்?" எனப் பதிவிட்டுள்ளார். ஒரு ட்வீட்டுடன் ஹர்பஜன் இதை நிறுத்திக்கொள்ளவில்லை. இந்த நோ பால் தொடர்பாக அவர் பல ட்வீட்களை பதிவிட்டிருந்தார்.

பந்துவீச்சு

ஸ்போர்ட்ஸ் பிக்சிங் செய்ததற்காக அமீர் ஐந்து ஆண்டுகள் தடை செய்யப்பட்டார். இத்துடன் கூட இதை இவர்கள் இருவரும் விடவில்லை. ஹர்பஜன் சிங்கின் பவுலிங் ஆக்ஷன் குறித்து அமிர் ட்வீட் செய்திருந்தார். ஹர்பஜன் சிங் விதிமுறைக்குப் புறம்பாகப் பந்தை எறிவதாகப் பல முறை சர்ச்சையில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, October 27, 2021, 17:11 [IST]
Other articles published on Oct 27, 2021
English summary
Harbhajan Singh and Mohammad Amir twitter fight. T20 World cup latest news.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X