For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பும்ரா இப்படித்தான்..! எதையும் அவருகிட்ட எதிர்பார்க்காதீங்க.. வித்தியாசமாக பாராட்டிய தமிழ் புலவர்

மும்பை: பும்ரா ஒரு வைரம்... தமது முழு திறனையும் கொடுத்து இந்தியாவுக்காக சிறப்பாக விளையாடி வருவதாக ஹர்பஜன் சிங் பாராட்டி உள்ளார்.

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 2வது போட்டி ஜமைக்காவில் கடந்த 30ம் தேதி துவங்கியது. போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா சிறப்பாக விளையாடி 416 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக விஹாரி 111 ரன்களை எடுத்தார். இஷாந்த் ஷர்மா 57 ரன்களை எடுத்தார். அதன் பிறகு முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 2வது நாள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 87 ரன்கள் எடுத்துள்ளது.

ஏமாத்திப்புட்டாய்ங்க...! நான் அவுட்டே இல்ல..! 18 வருஷம் கழிச்சி வீடியோ ரிலீஸ் பண்ணிய ஸ்டார் வீரர்ஏமாத்திப்புட்டாய்ங்க...! நான் அவுட்டே இல்ல..! 18 வருஷம் கழிச்சி வீடியோ ரிலீஸ் பண்ணிய ஸ்டார் வீரர்

ஹாட்ரிக், 6 விக்.

ஹாட்ரிக், 6 விக்.

இந்திய சார்பில் பும்ரா 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். அதில் ஹாட்ரிக்கும் அடக்கம். அவரது இந்த சாதனைக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அவரின் பந்துவீச்சில் மாயாஜாலம் இருப்பதாக அனைவரும் புகழ்ந்து வருகின்றனர்.

ஹர்பஜன் பாராட்டு

ஹர்பஜன் பாராட்டு

இந்த நிலையில் இந்த போட்டி குறித்தும், பும்ராவின் பவுலிங் குறித்தும், ஹர்பஜன் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: இந்திய அணிக்கு பும்ரா போன்ற மேட்ச் வின்னர் கிடைத்தது மகிழ்ச்சி.

வார்த்தைகள் கிடையாது

வார்த்தைகள் கிடையாது

ஹாட்ரிக் என்பது ஒரு வீரர் உடைய அடையாளமாக மாறாது. அவர் எடுத்த ஹாட்ரிக் விக்கெட் 9 ஓவர்களில் எடுத்துள்ளார். அந்த பெருமையை பேச வார்த்தைகள் பத்தாது.

இந்தியாவுக்கு பெருமை

இந்தியாவுக்கு பெருமை

அவரிடம் இருந்து வேறு எதையும் நாம் இனி கேட்கவும் கூடாது. அவர் நமக்கு கிடைத்த வைரம். ஒருநாள் போட்டி என்றாலும் சரி, டெஸ்ட் என்றாலும் சரி இந்தியாவுக்காக சிறப்பாக ஆடி பெருமை சேர்த்து வருகிறார்.

மும்பை இந்தியன்ஸ்

மும்பை இந்தியன்ஸ்

ஹர்பஜன் வாழ்த்து சொல்வதற்கு காரணம் இருக்கிறது. 2001ம் ஆண்டு சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் ஹாட்ரிக் எடுத்தவர் ஹர்பஜன் சிங். மேலும், ஹர்பஜன் மற்றும் பும்ரா ஆகியோர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இணைந்து விளையாடி உள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.

Story first published: Sunday, September 1, 2019, 19:56 [IST]
Other articles published on Sep 1, 2019
English summary
Harbhajan singh praises bumrah’s bowling and his hat trick.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X