For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வித்தியாசமான மனிதர்கள்.. வித்தியாசமான விதிமுறைகள்... ஹர்பஜன் கேள்வி

டெல்லி : ஆஸ்திரேலியா செல்லவுள்ள இந்திய அணி தேர்வு செய்யப்பட்டு நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஐபிஎல் சீசனில் சிறப்பாக விளையாடிவரும் சூர்யகுமார் யாதவிற்கு இந்த அணியில் இடம் கிடைக்கவில்லை.

இந்நிலையில் சூர்யகுமார் யாதவை தேர்வு செய்யாதது குறித்து ஹர்பஜன் சிங் தனது டிவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

11 போட்டிகள்... 283 ரன்கள்

11 போட்டிகள்... 283 ரன்கள்

இந்த ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிவரும் சூர்யகுமார் யாதவ், இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 283 ரன்களை அடித்துள்ளார். இதன் சராசரி 31.44. ஸ்டிரைக் ரேட் 148.94. இதுவரை இரண்டு அரைசதங்களை அடித்துள்ள அவர் அதிகபட்சமாக 79 ரன்களை அடித்துள்ளார்.

சூர்யகுமார் பெயர் இல்லை

சூர்யகுமார் பெயர் இல்லை

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் சூர்யகுமார் யாதவின் பெயர் இடம்பெறவில்லை. இந்நிலையில் சூர்யகுமார் யாதவை தேர்ந்தெடுக்க இன்னும் என்ன தேவையோ தெரியவில்லை என்று ஹர்பஜன்சிங் தெரிவித்துள்ளார்.

வித்தியாச விதிமுறைகள்

வித்தியாச விதிமுறைகள்

அவர் அனைத்து ரஞ்சி மற்றும் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வருவதை சுட்டிக்காட்டிய ஹர்பஜன், வித்தியாசமான மனிதர்கள், வித்தியாசமான விதிமுறைகள் என்றும் கூறியுள்ளார். மேலும் சூர்யகுமார் யாதவின் சாதனைகளை தேர்வாளர்கள் பார்த்து அதையொட்டி முடிவெடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

சுனில் கவாஸ்கர் கேள்வி

சுனில் கவாஸ்கர் கேள்வி

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா 3 வடிவங்களிலும் தேர்ந்தெடுக்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார். இதேபோல ரிஷப் பந்திற்கும் வாய்ப்பு அளிக்கப்படாத நிலையில் சூர்யகுமார் யாதவிற்கும் வாய்ப்பளிக்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Tuesday, October 27, 2020, 19:56 [IST]
Other articles published on Oct 27, 2020
English summary
Harbhajan Singh wasn't too happy with the decision of selectors
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X