தோனி மறுபடியும் விளையாடுவாரா.. எனக்கு நம்பிக்கையே இல்லை.. என்ன இப்படி சொல்லிட்டாரு பஜ்ஜி!

Harbhajan Singh says that Dhoni will not play again

டெல்லி : முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி இந்திய அணிக்காக மீண்டும் விளையாடுவார் என்ற நம்பிக்கை தனக்கு இல்லை என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

பிசிசிஐ வீரர்கள் ஒப்பந்தத்தில் இருந்து தோனி நீக்கப்பட்டுள்ளார். கடந்த 6 மாத காலமாக இந்திய அணியில் அவர் ஆடாத நிலையில் பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளது.

உலக கோப்பை அரையிறுதியில் இந்தியா தோல்வியடைந்ததை அடுத்து தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கியுள்ளார். இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல்லில் அவர் விளையாடவுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஒதுங்கியுள்ள தோனி

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஒதுங்கியுள்ள தோனி

கடந்த ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை அரையிறுதியில் இந்தியா தோல்வியடைந்த நிலையில் அதுமுதல் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஒதுங்கியுள்ளார்

தோனி ஓய்வை அறிவிப்பாரா?

தோனி ஓய்வை அறிவிப்பாரா?

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தோனி தனது ஓய்வை அறிவிப்பார் என்பது உள்ளிட்ட பல்வேறு யூங்கள் அவர் குறித்து ரசிகர்களிடையே காணப்படுகிறது.

சிஎஸ்கே-விற்காக களமிறங்கும் தோனி

சிஎஸ்கே-விற்காக களமிறங்கும் தோனி

இந்நிலையில் ஐபிஎல் 2020 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பில் தோனி களமிறங்கி விளையாட உள்ளார். அதில் அவரது திறனை அவர் நிரூபித்து இந்திய அணியில் மீண்டும் இடம்பெறுவார் என்றும் கூறப்பட்டது.

ரசிகர்கள் அதிர்ச்சி

ரசிகர்கள் அதிர்ச்சி

இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கியுள்ளதை காரணம் காட்டி பிசிசிஐ வீரர்கள் ஒப்பந்தத்தில் இருந்து தோனி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இந்த நிகழ்வு அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

ஹர்பஜன் சிங் உருக்கம்

ஹர்பஜன் சிங் உருக்கம்

இந்நிலையில் இந்திய அணிக்காக மீண்டும் தோனி விளையாட மாட்டார் என்று தான் கருதுவதாக முன்னாள் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

ஹர்பஜன் சிங் கருத்து

ஹர்பஜன் சிங் கருத்து

உலக கோப்பை 2019 வரை மட்டுமே விளையாட வேண்டும் என்று தோனி தீர்மானித்து விட்டதாகவும், வரும் ஐபிஎல் சீசனில் அவர் சிறப்பாக விளையாடினாலும் தொடர்ந்து இந்திய அணிக்காக விளையாடுவார் என்று தான் கருதவில்லை என்றும் ஹர்பஜன் கூறியுள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Dont think MS Dhoni will play for India Again - Harbhajan Singh
Story first published: Friday, January 17, 2020, 11:05 [IST]
Other articles published on Jan 17, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X