For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சட்னி, அவங்களுக்கு வந்தா.. ஆஸி. ஜாம்பவான்களை கிழித்து தொங்கவிட்ட ஹர்பஜன்

மும்பை : 2001 கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் எல்பிடபுள்யூ தீர்ப்புகள் தவறு என இன்று வரை கண்ணீர் விட்டு வருவது குறித்து விளாசி இருக்கிறார் ஹர்பஜன் சிங்.

Recommended Video

Harbhajan slams Australian players for not accepting LBW decisions

இது தான் ஆஸ்திரேலியா. அவர்கள் பந்துவீசும் போது எல்லாமே அவுட் மாதிரி இருக்கும். அதே அவர்கள் பந்துவீச்சை எதிர் கொள்ளும் போது எல்லாமே நாட் அவுட் மாதிரி இருக்கும் என கூறி உள்ளார்.

மேலும், 2008 சிட்னி டெஸ்டில் பல தீர்ப்புகள் இந்திய அணிக்கு எதிராக சென்றது. இதெல்லாம் களத்தில் நடப்பது தான். இதற்கெல்லாம் அழுது கொண்டே இருக்கக் கூடாது என கடுமையாக ஆஸ்திரேலிய அணியை விமர்சித்துள்ளார்.

மக்மதுல்லா அப்படியே விவிஎஸ் லக்ஷ்மன் மாதிரி.. ஏன்னா.. நெகிழ்ந்து உருகிய மஷ்ராபே மொர்டாசா!மக்மதுல்லா அப்படியே விவிஎஸ் லக்ஷ்மன் மாதிரி.. ஏன்னா.. நெகிழ்ந்து உருகிய மஷ்ராபே மொர்டாசா!

2001 டெஸ்ட் என்ன நடந்தது?

2001 டெஸ்ட் என்ன நடந்தது?

2001 கொல்கத்தா டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 445 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய இந்திய அணி 171 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியை எளிதாக வீழ்த்தலாம் என்ற எண்ணத்தில் பாலோ ஆன் கொடுத்தது ஆஸ்திரேலிய அணி.

லக்ஷ்மன் - டிராவிட் ஆட்டம்

லக்ஷ்மன் - டிராவிட் ஆட்டம்

இரண்டாவது இன்னிங்க்ஸில் ஆஸ்திரேலிய அணியை சோதித்தது விவிஎஸ் லக்ஷ்மன் - ராகுல் டிராவிட் ஜோடி. லக்ஷ்மன் 281 ரன்களும், டிராவிட் 180 ரன்களும் குவித்தனர். இந்தியா 657 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. ஆஸ்திரேலிய அணிக்கு 384 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

ஆறு விக்கெட்

ஆறு விக்கெட்

இரண்டாவது இன்னிங்க்ஸில் டிரா செய்யலாம் என எண்ணிய ஆஸ்திரேலிய அணிக்கு கடும் அதிர்ச்சி அளித்தார் ஹர்பஜன் சிங். அவர் ஆறு விக்கெட்கள் வீழ்த்தினார். ஆஸ்திரேலிய அணி 171 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. ஹர்பஜன் சிங் மொத்தம் 13 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார்.

ஹர்பஜன் சிங் ஹாட்ரிக்

ஹர்பஜன் சிங் ஹாட்ரிக்

அதில் முதல் இன்னிங்க்ஸில் அவர் ஒரு ஹாட்ரிக் விக்கெட் சாதனையும் செய்து இருந்தார். ரிக்கி பாண்டிங், ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் ஷேன் வார்னே என ஆஸ்திரேலிய அணியின் மிடில் ஆர்டரை சரித்திருந்தார். இதில் கில்கிறிஸ்ட் விக்கெட் எல்பிடபுள்யூ. ரீப்ளேவில் அந்த பந்து லெக் திசையில் செல்வது தெரிந்தது. எனினும், அது அம்பயரால் அவுட் கொடுக்கப்பட்டது.

மெக்கிராத் எதிர்ப்பு

மெக்கிராத் எதிர்ப்பு

அதே போல, இரண்டாவது இன்னிங்க்ஸில் கடைசி விக்கெட்டாக கிளென் மெக்கிராத் விக்கெட்டை எல்பிடபுள்யூ முறையில் வீழ்த்தி இருந்தார் ஹர்பஜன் சிங். அதற்கு அப்போதே எதிர்ப்பு தெரிவித்து இருந்தார் மெக்கிராத். எனினும், அம்பயர் தீர்ப்பு மாற்றப்படவில்லை.

தோல்வி வந்தால் கடினம்

தோல்வி வந்தால் கடினம்

கிரிக்கெட் வீரர் அஸ்வினுடன் இந்த டெஸ்ட் பற்றி பேசும் போது, ஆஸ்திரேலிய ஜாம்பவான்களான மெக்கிராத் மற்றும் கில்கிறிஸ்ட் விக்கெட் குறித்து அவர்கள் கண்ணீர் வடித்ததை நினைவு கூர்ந்து விமர்சித்து உள்ளார். மெக்கிராத் விக்கெட் பற்றி கூறி, அது நேர் திசையில் சென்று, சுழன்றதாகவும், அப்போது ரிவ்யூ இருந்திருந்தால் கூட அது அவுட் தான் ஆகி இருக்கும் என்றார் ஹர்பஜன்.

அவங்களுக்கு வந்தா நாட் அவுட்

அவங்களுக்கு வந்தா நாட் அவுட்

மேலும், ஆஸ்திரேலியா சிறந்த வீரர்களை கொடுத்துள்ளது. ஆனால், அவர்கள் தோல்வி அடையும் போது அதை ஏற்றுக் கொள்ள சிரமப்படுகிறார்கள். அதுதான் ஆஸ்திரேலியா. . அவர்கள் பந்துவீசும் போது எல்லாமே அவுட் மாதிரி இருக்கும். அதே அவர்கள் பந்துவீச்சை எதிர் கொள்ளும் போது எல்லாமே நாட் அவுட் மாதிரி இருக்கும். பல முடிவுகளை அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றார்.

2008 சிட்னி டெஸ்ட்

2008 சிட்னி டெஸ்ட்

நாம் 2008 சிட்னி டெஸ்ட் பற்றி பேசுவோம். அந்த டெஸ்டில் பல விஷயங்கள் இந்திய அணிக்கு சாதகமாக அமையவில்லை. அந்த டெஸ்டின் மோசமான தீர்ப்புகள் பற்றியும் பலர் பேசி வருகிறார்கள். களத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படும். அதை ஒரு வீரராக நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார் ஹர்பஜன் சிங்.

கில்கிறிஸ்ட் நாட் அவுட்டாக இருந்தால்..

கில்கிறிஸ்ட் நாட் அவுட்டாக இருந்தால்..

சிலர் ட்விட்டரில் கில்கிறிஸ்ட் நாட் அவுட் என்கிறார்கள். சரி, அது நாட் அவுட் என்றே வைத்துக் கொள்வோம். நான் எத்தனை முறை அவரை வீழ்த்தி உள்ளேன்? முதல் பந்து, இல்லாவிட்டால் இரண்டாவது பந்தில் அவரை வீழ்த்துவேன் எனவும் கூறினார் ஹர்பஜன் சிங்.

Story first published: Wednesday, May 6, 2020, 19:17 [IST]
Other articles published on May 6, 2020
English summary
Harbhajan Singh slams Australian players for not accepting LBW decisions, particularly from the 2001 Kokata test, in which he got his test hatrick.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X