For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்னா "நாக்"கு... டெய்லரை கலாய்த்த ஹர்பஜன்.. எல்லை மீறிப் போறீங்கஜி.. ரசிகர்கள் கலாய்!!

Recommended Video

Harbhajan suggests a change in Team| விளையாடும் அணியில் மாற்றம் வேண்டும் - ஹர்பஜன்

பஞ்சாப் : இந்தியா -நியூசிலாந்து இடையில் நடைபெற்றுவரும் சர்வதேச ஒருநாள் போட்டித் தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.

கடந்த டி20 தொடரில் இந்தியாவிடம் 5 போட்டிகளை பறிகொடுத்த நியூசிலாந்து அணி, தற்போதைய இந்த முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் வெற்றி கொண்டுள்ளது. இந்த போட்டியில் நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் சதமடித்து அந்த அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார்.

சதமடித்த பின்பு அவர் தனது நாக்கை நீட்டி தன்னுடைய கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார். இந்நிலையில், அவர் ஏன் இத்தகைய கொண்டாட்டத்தில் ஈடுபடுகிறார் என்று இந்திய முன்னாள் பௌலர் ஹர்பஜன் சிங் டிவிட்டர் மூலம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் தான் டீமின் சொத்து.. தயவுசெஞ்சு அவரை விட்ருங்க.. கோலிக்கு எதிர்ப்பு.. முன்னாள் வீரர்கள் அதிரடி!அவர் தான் டீமின் சொத்து.. தயவுசெஞ்சு அவரை விட்ருங்க.. கோலிக்கு எதிர்ப்பு.. முன்னாள் வீரர்கள் அதிரடி!

முதல் சர்வதேச ஒருநாள் போட்டி

முதல் சர்வதேச ஒருநாள் போட்டி

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, முதலில் விளையாடிய 5 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடரில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று சாதனை புரிந்தது. இதையடுத்து தற்போது சர்வதேச ஒருநாள் போட்டித் தொடரில் இரு அணிகளும் மோதி வருகின்றன. நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா அடித்த 347 ரன்களை சேஸ் செய்து நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

அணியின் வெற்றிக்கு உதவி

அணியின் வெற்றிக்கு உதவி

இந்த போட்டியில் 10 பவுண்டரிகள், 4 சிக்ஸ்கள் அடித்து 109 ரன்களை குவித்தார் நியூசிலாந்து அணி வீரர் ராஸ் டெய்லர். இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் அடித்த சர்வதேச ஒருநாள் போட்டியின் முதல் சதத்துடன் கூடிய இந்திய அணியின் 347 ரன்களுக்கு எந்தவிதமான பயனும் இன்றி நியூசிலாந்து வெற்றியை கைகொள்ள ராஸ் டெய்லரின் சதம் பெருமளவில் உதவி புரிந்தது.

ராஸ் டெய்லரின் தனி கொண்டாட்டம்

ராஸ் டெய்லரின் தனி கொண்டாட்டம்

இந்த போட்டியில் சதமடித்த பின்பு ராஸ் டெய்லர் தனது நாக்கை நீட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இவர் தொடர்ந்து இந்த ஸ்டைலை சில வருடங்களாக தொடர்ந்து வருகிறார். தனது மகள் மெக்கென்சிக்காக தான் இந்த ஸ்டைலை தொடர்வதாகவும், அவளுக்கு இது பிடித்திருப்பதாகவும் தெரிவித்துள்ள ராஸ் டெய்லர், முதன்முதலில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இதை தான் ஆரம்பித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வம்பிழுத்த ஹர்பஜன் சிங்

வம்பிழுத்த ஹர்பஜன் சிங்

இந்தியாவிற்கு எதிரான நேற்றைய போட்டியில் சதமடித்த ராஸ் டெய்லர், தன்னுடைய தனித்துவமான ஸ்டைலில் நாக்கை நீட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் அவரது சதத்திற்கு பாராட்டு தெரிவித்த முன்னாள் இந்திய பௌலர் ஹர்பஜன் சிங், செஞ்சுரி அடித்தவுடன் அவர் நாக்கை நீட்டுவது ஏன் என்று காரணத்தை கேட்டு அவரை வம்பிழுத்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் கலாய்

இதையடுத்து ஹர்பஜன் சிங்குடன் சென்னை சூப்பர் கிங்சும் இணைந்துக் கொண்டு ராஸ் டெய்லரை கலாய்த்தது. "வாட் அ நாக்" என்று தமிழில் நாக்கு என்று பொருள்படும்படியாக சிஎஸ்கே கலாய்த்திருந்தது. ஹர்பஜன் சிங் மற்றும் சிஎஸ்கேவின் ராஸ் டெய்லர் குறித்த இந்த கலாய்ப்பிற்கு டிவிட்டரில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் லைக்குளை அளித்திருந்தனர்.

Story first published: Thursday, February 6, 2020, 18:15 [IST]
Other articles published on Feb 6, 2020
English summary
Harbhajan Singh make Fun of Taylor's Unique Celebration
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X