For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிஎஸ்கேவுடன் சேராத ஹர்பஜன் சிங்... யூஏஇக்கு சேர்ந்து போக மாட்டாராம்

சென்னை : சிஎஸ்கேவின் பயிற்சி முகாமில் பங்கேற்காத அந்த அணியின் வீரர் ஹர்பஜன் சிங், தற்போது அந்த அணியின் யூஏஇ பயணத்திலும் இணையவில்லை.

Recommended Video

IPL 2020: Harbhajan Singh not to travel to UAE with CSK

ஹர்பஜன் சிங்கின் தாயின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால், அவர் இரண்டு வாரங்கள் கழித்தே யூஏஇக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஹர்பஜன் சிங்குடன் இணைந்து சிஎஸ்கே பயிற்சி முகாமில் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மற்றும் பௌலர் ஷர்துல் தாக்கூரும் பயிற்சி முகாமில் பங்கேற்கவில்லை.

அவ்ளோ நேரம்லாம் வெயிட் பண்ண முடியாது.. 17 பந்தில் 36 ரன்.. தனி ஆளாக மேட்ச்சை முடித்த ஷாலோ!அவ்ளோ நேரம்லாம் வெயிட் பண்ண முடியாது.. 17 பந்தில் 36 ரன்.. தனி ஆளாக மேட்ச்சை முடித்த ஷாலோ!

சிஎஸ்கே நாளை யூஏஇ பயணம்

சிஎஸ்கே நாளை யூஏஇ பயணம்

வரும் மாதம் 19ம் தேதி யூஏஇயில் ஐபிஎல் போட்டிகள் துவங்கவுள்ளதையடுத்து 8 ஐபிஎல் அணிகளும் யூஏஇக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் நாளை தங்களது பயணத்தை துவக்கவுள்ளனர். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை துவங்கப்பட்ட அந்த அணியின் பயிற்சி முகாம் இன்றுடன் நிறைவடையவுள்ளது.

பயிற்சி முகாம் இன்றுடன் நிறைவு

பயிற்சி முகாம் இன்றுடன் நிறைவு

இந்த பயிற்சி முகாமில் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மற்றும் பௌலர் ஷர்துல் தாக்கூருடன் இணைந்து ஆப் -ஸ்பின்னர் ஹர்பஜன் சிங்கும் பங்கேற்கவில்லை. மாறாக ரவீந்திர ஜடேஜா நேற்றும் ஷர்துல் தாக்கூர் இன்றும் பயிற்சியில் இணையவுள்ளனர். தோனி தலைமையிலான இந்த பயிற்சி முகாம் இன்றுடன் நிறைவடையவுள்ளது.

தாயின் உடல்நிலை பாதிப்பு

தாயின் உடல்நிலை பாதிப்பு

மேலும் நாளை சிஎஸ்கே அணி வீரர்கள் சார்ட்டர்ட் விமானம் மூலம் யூஏஇக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர். இந்த பயணத்திலும் ஹர்பஜன் சிங் கலந்து கொள்ள மாட்டார் என்று தற்போது கூறப்பட்டுள்ளது. அவருடைய தாயின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர் இரண்டு வாரங்கள் கழித்து தன்னுடைய யூஏஇ பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கொரோனா டெஸ்ட் நெகட்டிவ்

கொரோனா டெஸ்ட் நெகட்டிவ்

இதனிடையே, சென்னை சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றுவரும் பயிற்சி முகாம் நல்ல விதத்தில் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து அந்த அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி திருப்தி தெரிவித்துள்ளார். இந்த பயிற்சி முகாமிற்காக தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் இரண்டு விதமான பிட்ச்களை அமைத்து கொடுத்துள்ளது. இந்நிலையில் சிஎஸ்கே அணி வீரர்களுக்கு எடுக்கப்பட்ட 2வது கட்ட கொரோனா டெஸ்ட்டிலும் அனைவருக்கும் நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளதால், அவர்களது யூஏஇ பயணம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Story first published: Thursday, August 20, 2020, 11:28 [IST]
Other articles published on Aug 20, 2020
English summary
The brief Chennai Super Kings camp will end today
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X