பாண்டியா பிரதர்ஸுடன் வம்பு...அடங்காத சாம் கரண்.. ஆத்திரத்தில் பேட்டை தூக்கிச்சென்ற ஹர்த்திக்..விவரம்

புனே: இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் சாம் கரண் மற்றும் ஹர்த்திக் பாண்டியாவுக்கு இடையே சண்டை ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தியா - இங்கிலாந்து தொடரில் வீரர்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வருகிறது. களத்திலேயே இரு அணி வீரர்களும் வார்த்தை போரில் ஈடுபடுவதால் பரபரப்பு ஏற்படுகிறது.

அந்தவகையில் நேற்று நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வீரர் சாம் கரணுக்கும் - ஹர்த்திக் பாண்டியாவுக்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ள வீடியோ வைராலாகி வருகிறது.

2வது ஒருநாள் போட்டி

2வது ஒருநாள் போட்டி

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய 2வது ஒருநாள் போட்டி நேற்று புனேவில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் குவித்தது. கே.எல்.ராகுல், விராட் கோலி, ரிஷப் பண்ட் ஆகியோர் ரன் குவித்த நிலையில் 6வது வீரராக களமிறங்கிய அதிரடி வீரர் ஹர்த்திக் பாண்டியா வழக்கம் போல் இங்கிலாந்து பந்துவீச்சை நொறுக்கினார். அப்போதுதான் எதிரணி வீரர் சாம் - கரணுக்கும் ஹர்த்திக் பாண்டியாவுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.

எப்படி நடந்தது

எப்படி நடந்தது

ஹர்த்திக் பாண்டியா பேட்டிங் செய்து கொண்டிருந்த போது ஆட்டத்தின் 46 ஓவரை சாம் கரண் வீசினார். யார்க்கராக போடப்பட்ட அந்த பந்தை சிக்ஸருக்கு துரத்த முயற்சி செய்தபோது பாண்டியா பந்தை மிஸ் செய்தார். இதுகுறித்து சாம் கரண் கிண்டலாக ஏதோ கூற, ஆத்திரமடைந்த ஹர்த்திக், கையில் பேட்டுடன், சாம் கரணை நோக்கி வேகமாக ஓடி வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் பிரச்னை பெரிதாகவாறு கள நடுவர் தலையிட்டு சமாதானம் செய்தார். இதனால் போட்டியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

சாம் கரண் சேட்டை

சாம் கரண் சேட்டை

சாம் கரண் நேற்று ஹர்த்திக் பாண்டியாவிடம் வம்பிழுத்த நிலையில், முதல் ஒருநாள் போட்டியில் அவரது ஹர்த்திக்கின் சகோதரர் க்ருணால் பாண்டியாவிடம் வம்பிழுத்தார். முதல் போட்டியில் 49வது ஓவரை டாம் கரண் வீச அந்த ஓவரில் க்ருணால் அரைசதம் அடித்தார். அப்போது க்ருணாலிடம் டாம் கரண் வைடாக போட்ட பந்து பற்றி ஏதோ கூற க்ருணால் பாண்டியா ஆத்திரமடைந்துள்ளார். டாம் கரணை நோக்கி வேகமாக சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் முதல் போட்டியில் அண்ணனிடம் டாம் கரண் சேட்டை செய்ததற்கும் சேர்த்து வைத்து 2வது போட்டியில் ஹர்த்திக் பதிலடி கொடுத்ததாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

தோல்வி

இத்தனை பிரச்னைகளை தாண்டியும் இந்திய அணி 337 ரன்களை இங்கிலாந்துக்கு நிர்ணயித்தது. அனால் பென் ஸ்டோக்ஸ் மற்றும் பேர்ஸ்டோ ஆகியோரின் அதிரடி பார்ட்னர்ஷிப்பால் அந்த அணி அசால்டாக 6 விக்கெட் வித்தியாசத்தி வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடர் 1 -1 என சமநிலை அடைந்துள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Hardik Pandy and Sam curran engaged in a heated argument during India vs England 2nd ODI
Story first published: Saturday, March 27, 2021, 14:23 [IST]
Other articles published on Mar 27, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X